Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news இறைவன் கொடுத்த இயற்கை: மலையை ... திருமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்! திருமலையில் அலைமோதும் பக்தர்கள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கும்பாபிஷேகத்திற்காக ஜொலிக்கும் ராமேஸ்வரம் கோயில் மூன்றாம் பிரகாரம்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

22 டிச
2012
03:12

ராமேஸ்வரம்: 2014ல், நடக்கவுள்ள கும்பாபிஷேகத்திற்காக, ராமேஸ்வரம் கோயில் மூன்றாம் பிரகாரம், மராமத்து, பெயிண்ட் பூசப்பட்டு, புதுப்பொழிவுடன் ஆயத்தமாகி வருகிறது. பன்னிரெண்டு, ஜோதிர்லிங்க தலங்களில் ஒன்றாக விளங்கும், ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில், 2001ம் ஆண்டில் மஹா கும்பாபிஷேகம் நடந்தது. 12 ஆண்டுக்கு ஒருமுறை, நடக்கவுள்ள கும்பாபிஷேகம், தற்போது, 2014ம் ஆண்டில் நடத்த, மாநில அரசு முடிவெடுத்து, 7.11 கோடி மதிப்பில் திருப்பணிகளை முடுக்கி விட்டுள்ளது.

கோயில் வடக்கு, தெற்கு வாசலில் அடித்தளத்துடன் இருந்த, இருமொட்டை கோபுரத்தை அகற்றி, நான்கு கோடியில் ராஜகோபுரம் அமைக்கும் பணியும், பொழிவிழந்து காணப்பட்ட மூன்றாம் பிரகாரம், சேதுபதி மண்டபம், திருக்கல்யாணம் மண்டபத்தை புதுப்பிக்க, ஐம்பது லட்சம் ஒதுக்கிடு செய்து, முதல்கட்டமாக, மூன்றாம் பிரகாரம் மேல்புறத்தில் ஓவியம் வரையப்பட்டு, தற்போது, பிரகாரத்தின் அடிஒட்டிய தூண்கள், சுதைகள் மராமத்து செய்து, கலர் பெயிண்ட் பூசும் பணி, 70 சதவீதம் முடிந்த நிலையில், பிரகாரம் பளபளப்புடன் ஜொலிக்கும், அழகை பக்தர்கள் பிரமிப்புடன் கண்டுகளித்தனர். இத்துடன், ஐம்பது லட்சம் செலவில், மூன்றாம் பிரகாரத்தில் உள்ள,1212(நான்கு பகுதியில்) தூண்களுக்கும், எல்ஈடி. பல்புகள் பொருத்தும், பணி துவங்க உள்ளது. இதன்மூலம், புகழ் பெற்ற மூன்றாம் பிரகாரத்தின் பெருமை, உலக முழுவதும் உள்ள, இந்துக்களின் மனதில், நீங்காத இடம்பெறும். 11.40 லட்சத்தில், சுப்பிரமணியர், விநாயகர், சண்டிகேஸ்வரருக்கு இரும்பு சக்கரத்துடன், தேக்கு மரத்தில் தேர் அமைக்கும் பணி முடிவடைந்து, வரும் மாசி தேரோட்டத்தில், வீதி உலா வரவுள்ளது. மேலும் பர்வதவர்த்தினி அம்மன் சன்னதி முன்புள்ள, ஒட்டு கொட்டகை அகற்றி, இரண்டு கோடியில், கருங்கலில் மண்டபம் அமைக்கும், பணி துவங்க உள்ளது. 2014ம் ஆண்டில், நடைபெறவுள்ள கும்பாபிஷேகத்திற்கு, கோயில் நிர்வாகமும் தயாராகி, திருப்பணியை தீவிரப்படுத்தி வருகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அழகர்கோவில்: மதுரை வண்டியூர் தேனுார் மண்டபத்தில் நேற்று மண்டூக முனிவருக்கு கருட வாகனத்தில் சாப ... மேலும்
 
temple news
xதஞ்சாவூர், தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே தமிழ் கடவுள் என போற்றப்படும் முருகனின் அறுபடை ... மேலும்
 
temple news
மதுரை; மதுரை சித்திரை திருவிழாவில் இன்று தேனூர் மண்டபத்தில் எழுந்தருளிய சுந்தரராஜப் பெருமாள் சுவாமி, ... மேலும்
 
temple news
புட்டபர்த்தி: சத்ய சாய் பாபாவின் நினைவு தினத்தையொட்டி, ஆராதனை மகோற்சவம் இன்று புட்டபர்த்தியில் ... மேலும்
 
temple news
கோவை; கோவையின் குலதெய்வம் என போற்றப்படும் தண்டு மாரியம்மன் கோவில்சித்திரை விழா கடந்த 15ம் முதல் நடந்து ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar