Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

முதல் பக்கம் » தகவல்கள்
கிறிஸ்துமஸ் சிந்தனை-10: இயேசுவை வரவேற்போம்!
டிசம்பர் 24,2012
அ-
+
Temple images

செய்யும் தொழில் எதுவாக இருந்தாலும், அது எல்லோராலும் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்க வேண்டும். அதை முறையாக செய்ய வேண்டும். வசதியும், வாய்ப்பும் தடையில்லாமல் கிடைக்கிறது என்பதற்காக தன்னிலை மறந்து, பிறர்நலத்தை சீரழிக்கும் வகையில் அதிகாரத்தைப் பயன்படுத்தக் கூடாது. அப்படி செய்தால், அதற்கான தண்டனையை அனுபவிப்பதற்கு தயாராக இருக்க வேண்டும்.எனவேதான், இயேசு கிறிஸ்து, ""அழிவுக்கு செல்லும் வாயில் அகன்றது. வழியும் விரிவானது. அதன் வழியே செல்வோர் பலர். வாழ்வுக்கு செல்லும் வாயில் மிகவும் இடுக்கமானது. வழியும் மிகக்குறுகலானது. இதைக் கண்டுபிடிப்போர் சிலரே, என்று எச்சரித்துள்ளார். இறைவார்த்தைகளை கேட்டு, அதன்படி நடக்காதவர்களின் வாழ்க்கை, மணல் மீது கட்டப்படும் வீடு போன்று நிலைகுலைந்து விடும். உறுதியான பாறையின்மீது வீட்டின் அடித்தளம் அமைக்கப்படுமேயானால் அது என்றென்றும் நிலைத்திருக்கும். இதை மனதில் கொண்டு நம் வாழ்க்கையை இறைவனுக்கு உகந்ததாக மாற்றியமைக்க வேண்டும்.""மனம் மாறுங்கள். ஏனெனில் விண்ணரசு நெருங்கி விட்டது, என்ற இயேசு கிறிஸ்துவின் குரல் எப்போதும் நம் உள்ளத்தில் ஒலிக்கட்டும். அவரது பிறப்பினைக் கொண்டாட மகிழ்வுடன் காத்திருக்கும் நாம் அனைவரும், இறைவனுக்கு உகந்தவர்களாக வாழ்ந்து காட்டுவோம்.தொகுப்பு: எம்.பி. அருள் செல்வன்.

Share  
Bookmark and Share

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2013 www.dinamalar.com. All rights reserved.