Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வேளாங்கண்ணியில் கிறிஸ்துமஸ் ... லாஸ்பேட்டை கோவிலில்நாம சங்கீர்த்தன ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
குளிப்பதற்கு கூட தகுதியில்லாத புண்ணிய நதிகள்: அதிர்ச்சி தகவல்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

26 டிச
2012
10:12

புதுடில்லி: இந்துக்களின் வழிபாட்டில் நதிநீராடல் ஒரு முக்கிய இடம் பெறுகிறது. புண்ணிய நதிகளில் நீராடும்போது தங்கள் பாவம் தீரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. அத்தகைய சிறப்பு வாய்ந்த இந்தியாவின் வடமாநிலங்களில் பாயும் கங்கை, யமுனை உள்ளிட்ட நதிகள், குளிப்பதற்கு ஏற்ற தகுதி கூட இல்லாத அளவிற்கு மாசடைந்துள்ளதாக அரசு சாரா அமைப்பு மூலம் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. பத்மஸ்ரீ விருது வென்ற சுற்றுச்சூழல் ஆர்வலர் அனில் ஜோஷி தலைமையில், டேராடூனில் இயங்கி வரும் ஹெஸ்கோ என்ற அரசுசாரா அமைப்பு, இந்தியாவின் வடக்கு மாநிலங்களான உத்தரபிரதேசம், பீகார் மாநிலங்களில் ஓடும் நதிகள் குறித்து ஆய்வு நடத்தும் பொருட்டு, அப்பகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டது. 27 நாட்கள் இவர்கள் மேற்கொண்ட சுற்றுப்பயணத்தின் போது, இக்குழு, 1,800 கி.மீ அளவிலான தூரத்தை கடந்து அங்கு ஆய்வை மேற்கொண்டது.

தாங்கள் மேற்கொண்ட சுற்றுப்பயணம் குறித்து அனில் ஜோஷி கூறியதாவது, நாங்கள் உத்தரபிரேதசம், பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள 24 நதிகளில் ஆய்வுகளை மேற்கொண்டோம். இம்மாநிலங்களில் ஒடும் நதிகள், மக்கள் குளிப்பதற்கு உண்டான தகுதி கூட இல்லாமல் உள்ளது தெரியவந்துள்ளது. இந்நதிகளில் பெருமளவு சாக்கடை நீரே ஓடுகிறது. இதன்மூலம், அதனை சார்ந்து வரும் வாழும் மனிதன் உள்ளிட்ட உயிரினங்கள் எதிர்காலம் கேள்விக்குறியாகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதில் யமுனை, வருணா, கண்டாக் உள்ளிட்ட நதிகள் அதிக மாசடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நதிகள் ஓடும் பகுதிகளில், தொடர்ந்து மாசு அதிகரித்து வருவதன் மூலம், நீர் மற்றும் நில சுற்றுப்புறச் சூழ்நிலைகளில் அசாதாரண மாற்றங்கள் ஏற்படும் நிலை உருவாகியுள்ளதாக அவர் கூறினார்.

தீர்வு : பொருளாதார வளர்ச்சிக்கு எவ்வாறு ஜிடிபி எனப்படும் மொத்த உள்நாட்டு உற்பத்தி வழிகோலுகிறதோ, அதேபோல,இயற்கை நீர் வளங்களான இத்தகைய நதிகள் உள்ளிட்ட நீர்நிலைகளை காக்கும் பொருட்டு, ஜி.இ.பி எனப்படும் மொத்த சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்ற திட்டத்தை அரசு வகுத்து, நீர்நிலைகளை பாதுகாக்கும் பணிகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று அக்குழு தெரிவித்துள்ளது. தாங்கள் மேற்கொண்ட ஆய்வின் சாராம்சங்களை ஒரு அறிக்கையாக தயாரித்து பிரதமர் அலுவலகம் மற்றும் அனைத்து மாநில முதல்வர்களுக்கும் விரைவில் அனுப்ப உள்ளதாக ஜோஷி கூறினார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புரட்டாசியில் தேவியை கலைமகள், அலைமகள், மலைமகள் என்னும் மூன்று அம்சங்களில் வழிபடுகிறோம். இராமன் ... மேலும்
 
temple news
திருச்சி: பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாயகி தாயார் நவராத்திரி உற்சவம் நேற்று ... மேலும்
 
temple news
குளித்தலை: தோகைமலையில், பழமை வாய்ந்த மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில், நீதிமன்ற உத்தரவால், பழைய முருகன் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் 80 சதவீத திருப்பணிகள் நிறைவடைந்துள்ள ... மேலும்
 
temple news
புதுச்சேரி: தர்ம சம்ரக்ஷண சமிதி சார்பில், சாரதா நவராத்தி விழாவின் இரண்டாம் நாள் நிகழ்ச்சி நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar