Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

முதல் பக்கம் » தகவல்கள்
லாஸ்பேட்டை கோவிலில்நாம சங்கீர்த்தன நிகழ்ச்சி!
டிசம்பர் 26,2012
அ-
+

புதுச்சேரி: ஸ்பேட்டை திரவுபதியம்மன் கோவிலில் கடையநல்லூர் ராஜகோபால் பாகவதரின், நாம சங்கீர்த்தன நிகழ்ச்சி நடந்தது.லாஸ்பேட்டை திரவுபதியம்மன் கோவிலில் உள்ள பார்த்தசாரதி பெருமாள் கோவிலில், வைகுண்ட ஏகாதசி உற்சவம் நடந்தது. விழாவை முன்னிட்டு 24ம் @ததி மாலை 6 மணிக்கு சுவாமிக்கு திருமஞ்சனம், திருவாராதனம் நடந்தது. நேற்று முன்தினம் அதிகாலை 4.30 மணிக்கு, சொர்க்க வாசல் திறப்பும், கருட வாகனத்தில் பெருமாள் வீதியுலாவும் நடந்தது. விழாவையொட்டி இரவு 7 மணிக்கு கடைய நல்லூர் ராஜகோபால் பாகவதர் குழுவினரின் நாம சங்கீர்த்தன நிகழ்ச்சி நடந்தது. லாஸ்பேட்டை மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை அறங்காவலர் குழுவினர் செய்தனர்.

Share  
Bookmark and Share

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2013 www.dinamalar.com. All rights reserved.