Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

தகவல்கள் :
முதல் பக்கம் » தகவல்கள்
தென்காசி பகுதி கோயில்களில் பிரதோஷ வழிபாடு
டிசம்பர் 26,2012
அ-
+

தென்காசி: தென்காசி வட்டார கோயில்களில் பிரதோஷ வழிபாடு நடந்தது. தென்காசி மையப்பகுதியில் உள்ள காசிவிஸ்வநாதர் ந்நதிக்கு நேற்று பிரதோஷத்தை முன்னிட்டு பால், இளநீர், சந்தனம், பன்னீர், திரவியம், தயிர், பஞ்சாமிர்தம், நெய் உட்பட நறுமண பொருட்கள் அபிஷேகமும், தீபாராதனையும் நடந்தது.தென்காசி மேலசங்கரன்கோவில், பொருந்திநின்ற பெருமாள் கோயில், கீழ சங்கரன்கோவில், கீழப்பாவூர் நரசிம்மர் கோயில், இலஞ்சி குமாரர்கோயில், குற்றாலம் குற்றாலநாதர் கோயில், செங்கோட்டை பெருமாள், சிவன், நித்யகல்யாணி அம்மன் கோயில், புளியரை தெட்சணாமூர்த்தி கோயில் இலுத்தூர் சிவன், பெருமாள் கோயில், ஆய்க்குடி பாலசுப்பிரமணியசுவாமி கோயில் உட்பட சுற்றுவட்டார பகுதி கோயில்களில் நேற்று பிரதோஷ வழிபாடு நடந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Share  
Bookmark and Share

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2013 www.dinamalar.com. All rights reserved.