Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

முதல் பக்கம் » தகவல்கள்
சபரிமலை அய்யப்பன் கோவில் வருவாய் குறைந்தது!
டிசம்பர் 28,2012
அ-
+
Temple images

சபரிமலை: சபரிமலை அய்யப்பன் கோவிலில், மண்டல உற்சவ காலத்தில், 110 கோடி ரூபாய் மட்டுமே வருவாய் கிடைத்துள்ளது; இது கடந்த ஆண்டை விட, 4 கோடி ரூபாய் குறைவு. சபரிமலை அய்யப்பன் கோவிலில், நவம்பர், 16ம் தேதி துவங்கிய மண்டல உற்சவம், மண்டல பூஜையுடன் நிறைவு பெற்றது. இந்த மண்டல உற்சவத்தின் போது, நாடு முழுவதிலும் இருந்து வந்த, லட்சக்கணக்கான பக்தர்கள், தரிசனம் செய்த பின், உண்டியலில் செலுத்திய காணிக்கை மற்றும் அப்பம், அரவணை பிரசாதம் விற்பனை மூலம், கோவிலுக்கு, 110 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது.உண்டியல் காணிக்கை மூலம், 40 கோடி ரூபாயும், அப்பம் மற்றும் அரவணை விற்பனை மூலம், 53 கோடி ரூபாயும், அர்ச்சனை சீட்டு உட்பட, இதர வழிகளில், 17 கோடி ரூபாயும் வசூலாகி உள்ளது.இத்தகவலை, திருவிதாங்கூர் தேவஸ்தான தலைவர், எம்.பி.கோவிந்தன் நாயர் தெரிவித்தார்.

Share  
Bookmark and Share

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2013 www.dinamalar.com. All rights reserved.