Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

முதல் பக்கம் » தகவல்கள்
ஆருத்ரா தரிசனம் கோலாகலம் !
டிசம்பர் 29,2012
அ-
+
திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சிவன் கோவில்களில், ஆருத்ரா தரிசனம் விமரிசையாக நடைபெற்றது.திருவள்ளூர், தீர்த்தீஸ்வரர் கோவிலில், நடராஜர் சன்னிதியில் டிசம்பர் 28 காலை, 4:00 மணிக்கு பழங்கள் மற்றும் பால் அபிஷேகம் நடைபெற்றது. காலை, 5:30 மணிக்கு, நடராஜருக்கு வெள்ளை ஆடை உடுத்தி தீபாராதனை நடைபெற்றது. பின்னர், நடராஜர் சர்வ அலங்காரத்தில் காலை, 9:00 மணிக்கு வீதி உலா வந்தார். இதேபோல், திருவள்ளூர் பூங்கா நகரில் உள்ள சிவா  விஷ்ணு கோவிலில், நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில், சந்தான விநாயகருக்கு காட்சி அளித்த நடராஜரை, ஏராளமான பக்தர்கள் கண்டு தரிசித்தனர். பள்ளிப்பட்டு பள்ளிப்பட்டு சங்கமேஸ்வரர் கோவிலில் நடந்த ஆருத்ரா விழாவை ஒட்டி, டிசம்பர் 27 இரவு சிறப்பு யாகம் நடத்தி, 108 சங்கு அபிஷேகம் மற்றும் உற்சவர் நடராஜ பெருமானுக்கு பால், தயிர், இளநீர், பன்னீர், பஞ்சாமிர்தம், சந்தனம் போன்ற பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. டிசம்பர் 28 அதிகாலை சிவபெருமான் மலர் அலங்காரத்தில் காட்சி அளித்தார். இதேபோல, கரிம்பேடு நாதாதீஸ்வரர், சொரக்காய்பேட்டை திருமல்லீஸ்வரர் உட்பட அனைத்து சிவன் கோவில்களிலும் ஆருத்ரா தரி னம் சிறப்பாக நடந்தது.நகரிநகரியில் உள்ள கரகண்டேஸ்வரர் கோவிலில் ஆருத்ரா தரிசனத்தை ஒட்டி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. டிசம்பர் 27 இரவு, 9:00 மணிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. சத்ரவாடா கிராமத்தில் உள்ள சிதம்பரேஸ்வரர் சுவாமி கோவில், புத்தூர் சதாசிவேஸ்வரர் கோவில், நாராயணவனத்தை அடுத்த கீளகரம் கிராமத்தில் உள்ள அகஸ்தீஸ்வரர் கோவிலிலும், ஆருத்ரா தரிசனம் நடைபெற்றது. திருத்தணி திருத்தணி ம.பொ.சி.,சாலை சுந்தரவிநாயகர் கோவிலில் உள்ள சிவகாமி ஈஸ்வரருக்கு அதிகாலை, 5:00 மணிக்கு சிறப்பு அபிஷேகம், காலை, 9:00 மணிக்கு உற்சவர் திருவீதி உலா நடந்தது. அருங்குளம், நாபளூர் அகத்தீஸ்வரர் கோவிலில், சிறப்பு அபிஷேகம் மற்றும் மாலையில் திருவீதி உலா நடந்தது.
Share  
Bookmark and Share

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2013 www.dinamalar.com. All rights reserved.