Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

முதல் பக்கம் » தகவல்கள்
பழநி தைப்பூச திருவிழா 21ல் கொடியேற்றத்துடன் துவக்கம்!
ஜனவரி 08,2013
அ-
+
Temple images

பழநி: பழநி தைப்பூச திருவிழா ஜன., 27ம் தேதி நடைபெறுகிறது. இதற்காக 21ல் கொடியேற்றத்துடன் விழா துவங்குகிறது. அன்று 10 மணிக்கு உட்பிரகாரத்தில் யாகசாலை அமைக்கப்பட்டு, விழாவின் பத்து நாட்களிலும் யாகசாலை பூஜை நடைபெறும். விழாவின் ஆறாம் நாளான ஜன., 26 ல் ஸ்கந்த ஹோமத்துடன் இரவு 7 மணிக்கு முத்துக்குமாரசுவாமி, வள்ளி, தெய்வானை திருக்கல்யாணம் நடைபெறும். இரவு 8 மணிக்கு வெள்ளி ரதத்தில் சுவாமி புறப்பாடு நடைபெறும். ஜன., 27 விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக தைப்பூசம் நடைபெறும். அன்று அதிகாலை 4 மணிக்கு மலைகோயில் சன்னதி திறக்கப்படும். காலை 11 மணிக்கு மேல் சுவாமி தேர் ஏற்றம் செய்யப்பட்டு, மாலை 4.20 மணிக்கு தேரோட்டம் நடைபெறும். விழாவின் நிறைவு நாளான ஜன., 30 ல் தெப்ப உற்சவம் நடைபெறும். விழா ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் பாஸ்கரன் செய்து வருகிறார்.

Share  
Bookmark and Share

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2013 www.dinamalar.com. All rights reserved.