Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

முதல் பக்கம் » தகவல்கள்
மதுரை மீனாட்சி தெப்பக்குளத்தில் தண்ணீர் நிரப்ப தனியாருக்கு அழைப்பு!
ஜனவரி 19,2013
அ-
+
Temple images

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தெப்பத்திருவிழா ஜன.,27ல் நடக்கிறது. இதை முன்னிட்டு தெப்பக்குளத்தில் நிரந்தரமாக தண்ணீர் நிரப்ப தனியாருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.இங்கு நிரந்தரமாக தண்ணீர் நிரப்ப மாநகராட்சி நடவடிக்கை எடுத்தது. மணலூர் பம்பிங் ஸ்டேஷனில் இருந்து குழாய் மூலம் தண்ணீர் எடுக்கப்பட்டு 20 நாட்களாக தினமும் 20 லட்சம் லிட்டர் விடப்படுகிறது. தெப்பம் நிரம்ப 15 லட்சம் கோடி லிட்டர் தண்ணீர் தேவை. எனினும், 10 லட்சம் கோடி லிட்டர் தண்ணீர் இருந்தால் கூட போதும். வறண்ட தெப்பத்தில் தண்ணீர் விடப்பட்டாலும் பூமி உறிஞ்சுவதால் நிரம்புவது தாமதமாகிறது.தெப்பத்திருவிழா ஜன.,27ல் நடக்கிறது. அதற்குள் தெப்பத்தில் தண்ணீர் நிரம்ப வழியில்லை. எனவே, தனியார் மூலம் லாரிகளில் தண்ணீர் வரவழைத்து தெப்பத்தில் 10 லட்சம் கோடி தண்ணீர் நிரப்ப கோயில் நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது. தெப்பம் நிரப்ப ஆர்வமுள்ளவர் மீனாட்சி கோயில் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.

Share  
Bookmark and Share

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2013 www.dinamalar.com. All rights reserved.