Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

தகவல்கள் :
முதல் பக்கம் » தகவல்கள்
நெல்லையப்பர் கோயிலில் 21ம் தேதி நெல்லுக்கு வேலியிட்ட திருவிளையாடல்!
ஜனவரி 19,2013
அ-
+
Temple images

திருநெல்வேலி: நெல்லையப்பர் கோயிலில் 21 ம் தேதி நெல்லுக்கு வேலியிட்ட திருவிளையாடல் நிகழ்ச்சி நடக்கிறது.நெல்லையப்பர் கோயிலில் தைப்பூச திருவிழாவிற்கான கொடியேற்றம் நேற்று நடந்தது. திருவிழாவின் 4 ம் நாளான 21 ம் தேதி நெல்லுக்கு வேலியிட்ட திருவிளையாடல் விழா 71 வது ஆண்டாக நெல்லை டவுன் பொன் வாணிப காசுக்கடை வியாபாரிகள் அறக்கட்டளை மற்றும் மகமை சங்கத்தின் சார்பில் நடக்கிறது.விழாவில் 21 ம் தேதி காலை 9.30 மணிக்கு காசுக்கடை குமாஸ்தாக்கர் பால் குட வீதியுலாவும், மதியம் 12 மணிக்கு டவுன் தங்க மகால் திருமண மண்டபத்தில் மகேஸ்வர பூஜையும் நடக்கிறது. ஒரு மணிக்கு நெல்லையப்பர், காந்திமதிக்கு சிறப்பு திருமுழுக்கு தீபாராதனையும், மாலை 4 மணிக்கு மூல மகாலிங்கம் வேண்டு வளர்த்த மகாலிங்கம் சிறப்பு பஞ்சமுக அர்ச்சனையும் நடக்கிறது. இரவு 8 மணிக்கு சிறப்பு தீபாராதனையும், 8.30 மணிக்கு நெல்லையப்பர், காந்திமதி, விநாயகர் வேதபட்டர் குழு திருவீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடக்கிறது.ஏற்பாடுகளை நெல்லை டவுன் பொன் வாணிப காசுக்கடை வியாபாரிகள் அறக்கட்டளை நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

Share  
Bookmark and Share

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2013 www.dinamalar.com. All rights reserved.