Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

முதல் பக்கம் » தகவல்கள்
குருவாயூர் கோவிலில் துலாபார நேர்த்தி கடன்!
ஜனவரி 30,2013
அ-
+
Temple images

குருவாயூர்: குருவாயூர் கிருஷ்ணன் கோவிலில், துலாபார வேண்டுதலை நிறைவேற்றினார், பிரபல திரைப்பட பின்னணி பாடகி, எஸ்.ஜானகி.கேரளா, திருச்சூர் மாவட்டத்தில் உள்ளது குருவாயூர் கிருஷ்ணன் கோவில். நேற்று முன்தினம் மாலை, இங்கு வந்த, திரைப்பட பின்னணி பாடகி, எஸ்.ஜானகி, மூலவரை தரிசித்த பின், எடைக்கு எடை வெல்லம் கொடுத்து, துலாபார வேண்டுதலை நிறைவேற்றினார். அவரின் எடைக்கு, 75 கிலோ வெல்லம் தேவைப்பட்டது. அதற்கான பணம், 1,500 ரூபாயை, தேவஸ்தான அலுவலகத்தில் செலுத்தினார்.கேரளா, பாலக்காடு மாவட்டம், ஒட்டப்பாலத்தில் வசிக்கும், நண்பரின் இல்லத் திருமணத்தில் பங்கேற்பதற்காக, ஜானகி சென்றிருந்தபோது தான், அவர் மத்திய அரசின், "பத்ம பூஷன் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டது குறித்த அறிவிப்பு வெளியானது."காலம் தாழ்த்தி வழங்கப்பட்டுள்ள விருதை வாங்கப் போவதில்லை என, அறிவித்த ஜானகி, அதன்பின், குருவாயூருக்கு சாமி தரிசனத்திற்காக வந்தார்.

Share  
Bookmark and Share

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2013 www.dinamalar.com. All rights reserved.