Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

தகவல்கள் :
முதல் பக்கம் » தகவல்கள்
காகபுஜண்டர் மகரிஷிக்கு திருக்கல்யாண வைபவம்!
ஜனவரி 30,2013
அ-
+
Temple images

கும்பகோணம்: கும்பகோணம் அருகே உள்ள கருவளர்ச்சேரி கிராமத்தில், காகபுஜண்டர் யாகக்குழுவினர், உலகநன்மைக்காக காகபுஜண்டர் ஜீவநாடியில் அருளியபடி, அகிலாண்டேஸ்வரி சமேத அகஸ்தீஸ்வரர்கோவிலில், லோபமுத்ராதேவிக்கும் அகஸ்திய மாமுனிவருக்கும் திருக்கல்யாண வைபவம் நடந்தது. இதை முன்னிட்டு நடந்த வேள்வியில், கர்நாடகாவில் உள்ள தலைக்காவிரி காவிரி உற்பத்தியாகும் இடத்தில், வெள்ள உபாதைகளை கருதி கிழக்கு முகமாக இருந்த நந்தியை மேற்கு முகமாக பிரதிஷ்டை செய்துள்ளனர். இதனால் இருமாநிலத்திற்கும் பஞ்சம் ஏற்பட காரணமாயிற்று.
மீண்டும் காவிரியில் தேவையான நீர் கிடைக்கவும், இரண்டு மாநிலங்களும் செழிப்புடன் திகழவும் யாகம் செய்து, மீண்டும் பழையபடி நந்திபெருமானை கிழக்கு முகமாக பிரதிஷ்டை செய்ய வேண்டி சங்கல்பம் செய்யப்பட்டது. காகபுஜண்டர் யாகக்குழுவின் முதன்மை சீடரும், தலைவருமான குரு தியாகராஜசர்மா, பொன்னமராவதி அகஸ்தீஸ்வர சிவா ஸ்வாமிகள் கலந்துகொண்டனர். சிறப்பு யாகவேள்வியில், திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். கொள்ளிடம் அருகில் ஆச்சாள்புரத்தில், யோகாம்பாள் சமேத யோகேஸ்வரர் கோவிலில் பவுர்ணமி யாகம் நடந்தது. நேற்று முன்தினம் மதியம், பகுளாதேவிக்கும், காகபுஜண்ட மகரிஷிக்கும் திருக்கல்யாண வைபவம் சிறப்பாக நடந்தது. குமுதவல்லிதேவி, மேனகாதேவி சமேத விஸ்வாமித்திர மகரிஷிக்கும் திருக்கல்யாண வைபவம் நடக்கிறது. மாலை, 7 மணிக்கு, பகுளாதேவி, காக புஜண்டமகரிஷி வீதியுலா நடக்கிறது. விழா ஏற்பாடுகளை, காகபுஜண்டர் யாகக்குழுவினர் செய்து வருகின்றனர்.

Share  
Bookmark and Share

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2013 www.dinamalar.com. All rights reserved.