Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

முதல் பக்கம் » தகவல்கள்
சுசீந்திரம் கோயில் மாசி திருக்கல்யாண திருவிழா 16ல் துவக்கம்!
பிப்ரவரி 07,2013
அ-
+
Temple images

சுசீந்திரம்: சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோயிலில் மாசி திருக்கல்யாணத் திருவிழா வரும் 16ம் தேதி துவங்குகிறது. 23ம் தேதி இரவு திருக்கல்யாணம் நடக்கிறது. சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோயிலில் மார்கழி, சித்திரை, மாசி மற்றும் ஆவணி திருவிழாக்கள் 10 நாள்கள் நடப்பது வழக்கம். இதில் மாசி திருக்கல்யாண திருவிழா, வரும் 16ம் தேதி துவங்குகிறது. விழா நாட்களில தினமும் வாகனப் பவனி, சிறப்பு வழிபாடுகள் நடக்கிறது. ஏழாம் நாள் விழாவன்று அறம் வளர்த்த அம்மன் கதிர் குவிப்பு நிகழ்ச்சிக்காக பறக்கை காசி விஸ்வநாதர் கோயிலுக்கு எழுந்தருளுகிறார். மறுநாள் மாலையில் ஆலய பணியாளர்கள் அம்மனின் சார்பில் சீர்வரிசைகளை நான்கு ரத வீதிகள் வழியாக ஊர்வலமாக கொண்டுவந்து கோயிலில் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. அன்று மாலை அலங்கார கோலத்தில் ஆஸ்ராமம் கோயிலில் இருந்து எழுந்தருளும் அறம் வளர்த்த அம்மன் சுசீந்திரம் கோயிலை வந்தடைகிறார். இரவு 7.30 மணிக்கு விஷ்ணு சுவாமி முன்னிலையில் அலங்கார மண்டபத்தில் நடக்கும் திருமண விழாவில் கழுத்தில் மங்கல நாண் பூட்டுவதாக நிகழ்ச்சி நடக்கிறது. மஙகல வாத்தியங்கள் முழங்க நடக்கும் திருமண நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் பெண் பக்தர்களுக்கு பக்தர்கள் சங்கம் சார்பில் மஞ்சள், குங்குமம், மங்கல கயிறு, தேங்காய், வெற்றிலை, பாக்கு சேர்ந்த தாம்பூல பை வழங்கப்படுகிறது. விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

Share  
Bookmark and Share

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2013 www.dinamalar.com. All rights reserved.