Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

இன்றைய செய்திகள் :
ராமா...ராமா...கோஷம் முழங்க அயோத்தியாப்பட்டணம் கோவில் கும்பாபிஷேகம்! ராமா...ராமா...கோஷம் முழங்க ... கோட்டை மாரியம்மன் கோயிலில் பூத்தமலர் பூ அலங்காரம்! கோட்டை மாரியம்மன் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
குருக்கள் பற்றாக்குறை: மூடி கிடக்கும் ராமேஸ்வரம் கோயில் சன்னதிகள்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

08 பிப்
2013
11:01

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலில், குருக்கள் பற்றாக்குறையால் பல சன்னதிகள் மூடிகிடக்கின்றன. இதனால் பக்தர்கள் சுவாமியை தரிச்சிக்க முடியாத நிலை உள்ளது.  ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு, தினமும் வெளி மாவட்ட, மாநிலத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இவர்களிடம் சிறப்பு தரிசனம், ஸ்படிக லிங்கம் தரிசனத்திற்காக ரூ.50ம், அர்ச்சனை செய்வதற்காக ஐந்து ரூபாயும், கோயில் நிர்வாகம் வசூலிக்கிறது. கூட்ட நேரத்தில், கட்டணம் செலுத்தினாலும் சுவாமி தரிசனம் அரிதாகி விடும். இலவச தரிசன பாதையில செல்லும் பக்தருக்கு நேரும் கதியை சொல்லி மாளாது. காரணம், அதிகரித்து வரும் பக்தர்கள் கூட்டத்திற்கு ஏற்ப கோயிலில் குருக்களுக்கு அடுத்தபடியாக பணிபுரியும் ஊழியர்கள் (கைங்கேரியம்) பணியிடம் பல ஆண்டுகளாக நியமிக்கப்படவில்லை. பூஜையோடு தொடர்புடைய, 61 கோயில் உள்துறை ஊழியர்களுக்கு, 22 பேர் மட்டுமே பணியில் உள்ளனர். மேலும், சுவாமி, அம்மன், காசி விஸ்வநாதர், விசாலாட்சி அம்மன் சன்னதிகள் முன்பு வேதம் ஓதுவதில்லை.

சேதுமாதவர், தட்சிணாமூர்த்தி, பள்ளி கொண்ட பெருமாள், கால பைரவர் சன்னதிகளில் குருக்கள் இன்றி பூஜை நடத்தாமல், மூடியே கிடக்கிறது. மேலும், மகாலட்சுமி, ஆஞ்சநேயர் சன்னதியை ஒரு குருக்களும், விநாயகர், முருகன், நவக்கிரகம் சன்னதியை ஒரு குருக்களும், சன்னதிக்கு மாறி மாறி சென்று தீப  ராதனை காட்டி வருகின்றனர். ஆயிரம் முதல் ஐந்தாயிரம் ரூபாய் வரை கட்டணம் செலுத்தி பஞ்சாமிர்தம், ருத்ராட்சம், சங்கு, கலசம் அபிஷேகம், பூஜை செய்யும் பக்தர்களுக்கு 2 மணி நேரம் வரை பூஜை நடத்த வேண்டும். ஆனால், 30 நிமிடத்தில் முடிந்துவிடுவதாக பக்தர்கள் புகார் தெரிவிக்கின்றனர். உள்துறை ஊழியர், நிர்வாக உழியர்கள் என 188 பேர் பணியாற்ற வேண்டிய இங்கு, 129 பேர் மட்டுமே பணிபுரிகின்றனர். விஸ்வ இந்து பரிஷத் தென் மண்டல இணை அமைப்பாளர் சிவராஜன் கூறியதாவது: தமிழக அரசு ராமேஸ்வரம் கோயிலில், உண்டியல் வருவாய் பெருக்க முக்கியத்துவம் கொடுத்து, மத சடங்குளில் தலையிட்டு தகுதியற்றவர்களை குருக்களாக நியமிக்க திட்டமிட்டு உள்ளது. வேதம், ஆகமம் படித்தவர்களை தேர்வு செய்யாமல், 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும் என உத்தரவிட்டுள்ளது. கோயிலில் குருக்கள் பற்றாக்குறையால் மூடிகிடக்கும் பல சன்னதிகளை கண்டு பக்தர்கள் வேதனை அடைகின்றனர். தகுதியான குருக்களை நியமித்து, கோயில் புனிதம் காக்க வேண்டும். இல்லையெனில் சட்டரீதியான நடவடிக்கையில் ஈடுபடுவோம். இவ்வாறு தெரிவித்தார்.  கோயில் இணை கமிஷனர் செல்வராஜ் கூறியதாவது: 25 குருக்கள் நியமனத்திற்கு விண்ணப்பம் வந்துள்ளது, பரிசீலனை முடிந்து விரைவில் உயரதிகாரிகள் உத்தரவுப்படி நியமனம் செய்யப்படும். அனைத்து சன்னதிகளிலும் குருக்கள் பணியில் உள்ளனர்  என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple
திருப்பதி: திருமலையில், தங்க கவசம் இல்லாமல், உற்சவமூர்த்திகள் தரிசனம் அளிக்க உள்ளனர். ஆந்திர மாநிலம், ... மேலும்
 
temple
திருப்பூர்:திருப்பூர், ஸ்ரீ விஸ்வேஸ்வரசுவாமி கோவிலில், ருத்ர மகா யாகம் நடந்தது. இதில், 500க்கும் மேற்பட்ட ... மேலும்
 
temple
பரமக்குடி: பரமக்குடி நந்தகோபாலகிருஷ்ணர் கோயிலில் திருக்கல்யாணம் நடந்தது. இக்கோயிலில் மகா ... மேலும்
 
temple
திருப்பரங்குன்றம், திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆனி ஊஞ்சல் திருவிழா சுவாமிகளுக்கு ... மேலும்
 
temple
சிதம்பரம்: சிதம்பரம் வேங்கான் தெரு திருப்பாற்கடல் மடம் யோகாம்பாள் சமதே ஆத்மநாதர் கோவில் பர்ணசாலையில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2018 www.dinamalar.com. All rights reserved.