Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

முதல் பக்கம் » தகவல்கள்
முத்துமாரியம்மன் கோயிலில் இன்று பூக்குழி திருவிழா
பிப்ரவரி 08,2013
அ-
+

தென்காசி: குத்துக்கல்வலசை முத்துமாரியம்மன் கோயிலில் இன்று பூக்குழி திருவிழா நடக்கிறது. தென்காசி அருகே குத்துக்கல்வலசை சக்தி விநாயகர், முத்துமாரியம்மன் கோயிலில் பூக்குழி திருவிழா நேற்று துவங்கியது. இரவு அம்மனுக்கு மாக்காப்பு அலங்காரம் மற்றும் திருவிளக்கு பூஜை வழிபாடு நடந்தது. விழாவின் முக்கிய நாளான இன்று காலை கணபதி ஹோமத்துடன் நிகழ்ச்சிகள் துவங்குகிறது. துர்கா சூக்த ஹோமம், ஸ்ரீசூக்த ஹோமம், மகாலட்சுமி பூஜை மற்றும் அம்மனுக்கு அபிஷேகம் நடக்கிறது. மாலை குற்றாலத்திலிருந்து புனித நீர் ஊர்வலம் மற்றும் அக்னி சட்டி ஊர்வலம் மேள தாளத்துடன் நடக்கிறது. இரவு விரதம் இருந்த பக்தர்கள் பூக்குழி இறங்குகின்றனர். பின்னர் வில்லிசை கச்சேரி, நள்ளிரவில் அம்மன் அலங்காரத்துடன் சாம பூஜை வழிபாடு நடக்கிறது. ஏற்பாடுகளை விழா கமிட்டியார் செய்துள்ளனர்.

Share  
Bookmark and Share

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2013 www.dinamalar.com. All rights reserved.