Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

முதல் பக்கம் » தகவல்கள்
பழநி கோயிலில் மெட்டீரியல் ரோப்கார் துவக்கம்
பிப்ரவரி 21,2013
அ-
+
Temple images

பழநி: பழநி கோயிலில் ஒரு கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள, "மெட்டீரியல் ரோப்காரை முதல்வர் ஜெயலலிதா "வீடியோ கான்பிரன்ஸ் மூலம் நேற்று துவக்கி வைத்தார்.பழநி கோயிலில் ரூபாய் ஒரு கோடி செலவில், மலைக்கோயிலுக்கு 6 நிமிடத்தில் 250 கிலோ வரை கொண்டுசெல்லும் "மெட்டீரியல் ரோப்கார் அமைக்கப்பட்டது. சுற்றுலா பஸ் நிலையத்தில் 2.62 கோடி ரூபாய் செலவில், 4.5 ஏக்கரில் கான்கிரட் தரைத்தளம், ரோப்கார் செல்லும் பாதை அருகே, 1.45 கோடி ரூபாய் செலவில் புதிதாக பூங்கா நீரூற்றுகள், நீர்வீழ்ச்சிகள் அமைக்கப்பட்டுள்ளது.கன்னிவாடியில் பாதயாத்திரை பக்தர்கள் தங்குவதற்காக ரூபாய் 25 லட்ச ரூபாய் செலவில் புதிதாக கட்டப்பட்டுள்ள பக்தர்கள் தங்கும் மண்டபம், பழநி மலைக்கோயில் தங்கத்தேர் உலாவரும் பாதையில் மணிமண்டபம், தரைத்தளங்கள் 3.86 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ளது. 6 லட்ச ரூபாய் செலவில் புதிதாக கட்டப்பட்டுள்ள நன்கொடையாளர் வரவேற்பு மையம் ஆகிய 6 நலத்திட்டங்களை முதல்வர் ஜெயலலிதா நேற்று வீடியோ கான்பிரஸ் மூலம் துவக்கிவைத்தார். கோயில் இணைக்கமிஷனர் பாஸ்கரன் கூறுகையில்," "மெட்டீரியல் ரோப்கார், பக்தர்கள் தங்குமிடம் உட்பட 9.27 கோடி ரூபாய் மதிப்பிலான 6 திட்டப்பணிகள் முடிவடைந்து. முதல்வர் ஜெயலலிதா துவக்கிவைத்துள்ளார். மெட்டீரியல் ரோப்கார் மூலம் அன்னதான பொருட்கள், பஞ்சாமிர்தம் போன்ற பொருட்கள் கொண்டு செல்லப்படுகிறது. இதனால் வின்ச் ஸ்டேசனில் பக்தர்கள் காத்திருக்க வேண்டிய அவசியம் இனி ஏற்படாது, என்றார்.

Share  
Bookmark and Share

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2013 www.dinamalar.com. All rights reserved.