Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
முதல் பக்கம் » அந்தக்கவி வீரராகவர்
அந்தக்கவி வீரராகவர்
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

27 பிப்
2013
03:02

அந்தக்கவி வீரராகவர். தொண்டை நாட்டில், பாலாற்றங்கரையில் உள்ள பூதூர் என்ற ஊரில் பரம்பரையாக வாழ்ந்து வந்தவடுகநாத முதலியாரின் மகனான இவர், பிறவியிலேயே பார்வை இல்லாதவர், இதனாலேயே இவரை அந்தக்கவி வீரராகவர் என்று அழைத்தனர். பாலாற்றில் அடிக்கடி வரும் வெள்ளப்பெருக்கால் இவரது குடும்பம் பொன்விளைந்த களத்தூரில் குடியேறியது. இளமையில் வீரராகவர் கல்வியில் மிகவும் ஊக்கமும் ஆர்வமும் கொண்டு பயின்றார். பார்வை இல்லாததால், தமது முதுகில் எழுத்துக்களை எழுதச் சொல்லிப் பயிற்சிபெற்றார். பல இலக்கியங்கள் பயின்றாலும் இவருக்குக் கம்பராமாயண்தில் தனி ஈடுபாடு உண்டு. அந்தப் பாடல்களை நன்கு பயின்று மனனம் செய்தார். அனைவரும் வியக்கும்படி நொடியிலேயே கவிபாடும் ஆற்றல் இவருக்கு இருந்தது. இவர் பாடிய முதல் நூல்- திருக்கழுக்குன்ற புராணம். கண்பார்வை இல்லாவிட்டாலும் அகக்கண்களால் பல தலத்து இறையுருவங்களைத் தரிசித்து, பல பிரபந்த ங்களை இயற்றினார் அந்தக்கவி வீரராகவர். அப்படி ஒருமுறை பிரசித்திபெற்ற சேயூர் முருகன் திருக்கோயிலுக்குச் சென்றார். அன்று முருகனுக்கு அலங்காரம் அற்புதமாக இருந்ததாக மற்றவர்கள் சொல்லக் கேட்டார். அந்த அழகுக் காட்சியை தன்னால் காண இயலவில்லையே என்று எண்ணியபோது அவர் கண்களில் நீர் கசிந்தது. அப்போது ஓர் அற்புதம் அங்கே நிகழ்ந்தது. அவரது கண் முன் ஓர் அருள் ஒளி பளிச்சிட்டது. அதில், சேயூர் முருகனின் அழகுக் கோலம் தெரிந்தது. கூடவே இந்த சேய் மீது பிள்ளைக் கவி பாடு என்று அசரீரி கேட்டது. உடனே கடல்மடை திறந்ததுபோல் சேயூர் முருகன் மீது பிள்ளைத்தமிழ்ப் பாடத் தொடங்கினார் வீரராகவர். அந்த அழகன் மீது ஒரு கலம்பகமும் பாடினார்.

இப்படி அருட்புலமையும் தெய்வ அருளும் பெற்ற கவிஞர் ஒரு முறை தன் மனைவியிடம் நீராடுவதற்கு வெந்நீர் எடுத்து வை; அடுத்த தெருவரைக்கும் போய்விட்டு உடனே வந்துவிடுகிறேன் என்று மனைவியிடம் சொல்லிவிட்டுச் சென்றார் அந்தக் கவிஞர். சில நாழிகைக்குப் பிறகு, வீட்டுக்குத் திரும்பி வந்தார். வந்தவுடன் நீராட எண்ணினார்,. அவரது மனைவி வெந்நீர் கொண்டுவந்து வைத்தார். அதனைத் தொட்டுப் பார்த்தார் கவிஞர். அது சூடு சிறிதும் இல்லாமல் இருந்தது. நான் வெந்நீர்தானே கேட்டேன்? நீ இங்கே வைத்திருப்பது வெந்நீராக இல்லையே! தண்ணீராக அல்லவா இருக்கிறது? என்று, மனைவியிடம் கேட்டார் கவிஞர். கணவர் கேட்ட கேள்விக்கு நேரடியாக பதில் சொல்லாமல், உங்கள் கவித் திறமையால் அரசரிடம் யானைக் கன்றும் வளநாடும் (பரிசாக) பெற்று வந்தீரோ! என்று அவர் ஏளனமாகத் திருப்பிக் கேட்க, உள்ளம் வருந்தினார் கவிஞர். உங்களுடைய அற்ப வருமானத்துக்கு இந்தச் சாதாரண தண்ணீர் பேதாதா, வெந்நீர் ஒரு கேடா என்பது போலல்லவா பேசுகிறாள் இவள்! நம்முடைய கல்வியின் மதிப்பை அறியாது. அறிஞர்களால் மதிக்கப்படாத பொருட் செல்வத்தை நினைத்துதானே இவள் நம்மை அவமதிக்கிறாள்? இனி இங்கே இருப்பது முறையல்ல, வேறு எங்கேயாவது சென்று, இதுவரை நாம் பெறாத பொருட்செல்வத்தைப் பெற்று வருவோம். என்று மனத்தில் உறுதி பூண்டார் கவிஞர், உதவிக்கு தமது மாணவர் ஒருவரை அழைத்துக்கொண்டு வீட்டை விட்டுப் புறப்பட்டு விட்டார். தமிழ் தம்மை நிச்சயம் வாழ வைக்கும் என்று நம்பிய அந்த அற்புதக் கவிஞர். வீட்டை வெளியேறிய சூழலில் அவருக்கு எங்கே செல்வது என்ற குழப்பம் ஏற்பட்டது.

அக்காலத்தில், இலங்கையை பரராச சேகரர் என்ற மன்னன் ஆண்டு வந்தார். அவரை பரராச சிங்கம் என்றும் அழைப்பர். நன்கு தமிழ் பயின்றவர். தமிழ் அறிஞர்களை மதித்துப் போற்றுபவர். அவரிடம் சென்று தம் தமிழ்ப் புலமையை வெளிப்படுத்தி, தக்க பரிசுகளைப் பெற்று வரலாம் என்று எண்ணினார் அந்தகக்கவி வீரராகவர். அதையொட்டி, மரக்கலம் மூலம் தமது மாணவர் துணையுடன் இலங்கையை அடைந்து அரசனது அரண்மனைக்குச் சென்றார். தமிழ்ப் புலவர் என்பதால் சிறப்பான வரவேற்பு கிடைத்தது. ஆனாலும் இவரின் புலமை பற்றி ஏற்கெனவே நன்கு அறிந்திருந்த பொறாமை கொண்டு, ஒரு நாட்டின் அரசன் எக்காரணம் கொண்டும் பார்வையற்றோரைப் பார்க்கக்கூடாது என்று கூறி, அதற்கென்று சில ஆதாரங்களையும் சுட்டிக்காட்டினர். ஆனாலும் வீரராகவரைக் கண்டு பேச வேண்டும் என்ற ஆர்வம் அரசரிடம் மிகுந்திருந்தது. தங்களது அரசரின் ஆர்வத்தைப் பார்த்த அரசவைப் புலவர்கள் நீங்கள் அந்தத் தமிழ்நாட்டுப் புலவரைக் கண்டிப்பாகச் சந்தித்துப் பேசித்தான் ஆகவேண்டும் என்றால், உங்கள் இருவருக்கும் இடையே திரையிட்டுப் பேசலாம் என்று சொன்னார்கள். அரசருக்கு இதில் முழு விருப்பம் இல்லை எனினும் ஒப்புக் கொண்டார். இதற்கிடையில், பார்வையற்றோரை அரசர் பார்க்க மாட்டார் என்று வீரராகவருக்குத் தகவல் கிடைக்க, அதிர்ந்து போனார் அவர். கடல் கடந்து வந்தும், நமது எண்ணம் நிறைவேறாமல் போய்விடும் போலிருக்கிறதே! இனி கந்தவேள் விட்ட வழி! என்று எண்ணியவர், அந்த முருகனையே தன் துணைக்கு அழைத்தார். அந்த நேரத்தில் அரசர் அழைப்பதாக வந்து ஒருவர் தகவல் சொல்ல, ஆவலோடு அவரைக் காணப் புறப்பட்டார்.

அரண்மனையில் இருவரும் சந்தித்துப் பேச வேண்டிய இடத்தில் திரை ஒன்று போடப்பட்டிருந்தது. புலவருடன் வந்த மாணவன் மிகவும் கூர்மையான அறிவுடையவன். அரசரைக் காணாமல் திரை மட்டும் இருப்பதைக் கண்டவன். இதனை தமது ஆசிரியரான கவிஞருக்குத் தெரிவிக்க எண்ணி சிவசிதம்பரம் என்று உரக்கச் சொன்னான். பக்தியினால் அவன் அப்படிக் கூறுவது வழக்கம் போலும் என்று மற்றவர்கள் நினைத்திருக்க, கவி வீரராகவர் இக்குறிப்பை உணர்ந்தார். பார்வையற்றோரை அரசர் பார்க்கமாட்டார் என்று முன்பு கிடைத்த தகவலை மனத்தில் நினைத்தவர், சிதம்பர ரகசியத்தைத் திரையிட்டு மறைத்துள்ளதுபோல் அங்கும் திரையிடப்பட்டுள்ளது என்று புரிந்துகொண்டார். உடனே நரை கோட்டு.... என்று தொடங்கும் செய்யுளைப் பாடினார். அவ்வளவுதான்! குறுக்கே போடப்பட்டு இருந்த திரை, திடீரென்று தீப்பற்றிக்கொண்டது. உடனே திரையை அப்புறப்படுத்தினார்கள். தனக்கும் புலவருக்கும் இடையில் போடப்பட்டுள்ள திரை, பார்வை தெரியாத இந்தப் புலவருக்கு எப்படித் தெரிய வந்தது? இந்த உண்மை தெரிகிறது என்றால், நிச்சயம் இவர் தெய்வீக சக்தி பெற்றவராகத்தான் இருப்பார் என்று நினைத்த மன்னன். வீரராகவருக்கு எதிரில் அமர்ந்து பேசினான். புலவரும் பாடல்கள் பல பாடி, தம் திறமையை  வெளிப்படுத்தினார், புலவரின் திறமையை அறிந்த மன்னனுக்கு அவரைப் பிரிய மனமில்லை. மன்னனின் கணக்கில் தங்கினார். இந்தக் காலத்தில் வீரராகவர் இயற்றிய ஆரூர் உலாவைக் கேட்டு மகிழ்ந்த மன்னன் பரராசசேகரன் புலவரைப் பாராட்டிப் பாடல் ஒன்றைப் பாடினான்.

புவியே பெறுந் திருவாரூர் உலாவைப் புலவர்க்கெல்லாம்
செவியே சுவை பெறுமாறு செய்தான் சிவஞானம் அனு
பவியே எனும் கவிவீரராகவன் பாடிய நற்
கவியே கவி அவனில்லாத பேர் கவி கற்கவியே

என வீரராகவரின் புலமையையும் அருள் ஆற்றலையும் மிகவும் போற்றிய மன்னன். இலங்கையின் வடதிசையிலுள்ள மண்திடல் என்ற இடத்தை அவருக்குப் பரிசாக அளித்தான் அதுவே யாழ்பாணம் என்று பெயர் பெற்றதாக யாழ்பாண வைபவம் என்னும் நூல் தெரிவிக்கிறது. இவ்வாறு இலங்கை அரசன் அளித்த யானைப் பரிசையும் நாட்டையும், வேறு பல உயர்ந்த அணிமணிகளையும் பெற்று ஊருக்குத் திரும்பினார் வீரராகவர். தம் மனைவியை நோக்கி யாதனைக் கன்றும் வளநாடும் பெற்ற எனக்கு வெந்நீர் வேண்டுமா, வேண்டாமா? என்று கேட்டார். அவரைப் பல நாள் பிரிந்து வருந்திய அவரின் மனைவி, தான் செய்த பிழைக்காக வருந்தி அழுதாள். நீ அப்படிச் சொன்னதால் அன்றோ என்னுடைய புகழ் கடல் கடந்து பரவியது! நமக்கும் நிறைய செல்வம் கிடைத்தது! என்று கூறி மகிழ்ந்தார் புலவர். அரியலூரைத் தலைநகரமாகக் கொண்டு அரசாண்ட மழவராயர் என்ற மன்னனும் இவரை ஆதரித்துப் பல பரிசுகளை வழங்கியுள்ளான். கயத்தாறு அரசன் மீது கயத்தாற்றரசன் உலாவும் பாடியுள்ளார். சேயூர் முருகன் இவரைப் பிள்ளைக்கவி பாடச் சொன்னதுபோல், திருவாரூர் அருகிலுள்ள கீழ்வேளுர் முருகப்பெருமானும் இவரை ஆட்கொண்டு, கீழ்வேளுர் முருகன் பிள்ளைத்தமிழ் மற்றும் உலா இரண்டும் பாடச் செய்தார் சேயூர், கீழ்வேளுர் ஆகிய இந்த இரு திருத்தலங்களும் முருகப்பெருமான் சிவனாரைப் பூஜித்த சிறப்பு மிக்கவை என்பது குறிப்பிடத்தக்கது.

 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar