Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

இன்றைய செய்திகள் :
விவேகானந்தர் ஜெயந்தி விழா! செல்லியாண்டியம்மன் கோவில் விழா: திரளான பெண்கள் பால் ஊற்றி வழிபாடு! செல்லியாண்டியம்மன் கோவில் விழா: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோயிலில் முளைப்பாரி இட்டு வழிபடுவது ஏன்?
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

05 மார்
2013
14:51

கிராமதேவதை வழிபாடு என்பது ஒவ்வொரு கிராமத்துக்கும் முக்கியமானது. அந்தந்த கிராமங்களை இயற்கைச் சீற்றங்களிலிருந்து பாதுகாத்து இயற்கை வளத்தைப் பெருக்குவது, இந்த கிராம தேவதைகளின் வழிபாட்டால் தான். அவற்றுக்கு நடைபெறும் திருவிழாவின் ஓர் அங்கமாக, அந்த கிராமத்தைச் சேர்ந்த சுமங்கலிப் பெண்களால் செய்யப்படுவது தான் முளைப்பாரி வழிபாடு. கிராம தேவதைகளின் திருவிழா தொடங்கும் (கொடியேறும்) நாளன்று திருமணமான (குழந்தை பிறக்க தகுதி இருக்கும்) சுமங்கலிப் பெண்கள் ஒரு புதிய பானை அல்லது வாயகன்ற மண் பாத்திரத்தில் சத்தமான மண்ணை நிரப்பி, அதில் தட்டைப் பயிறு, சிறுபயிறு, பாசிப்பயறு, மொச்சைப்பயிறு, சோளம், கம்பு, பருத்தி போன்ற விதைகளை நெருக்கமாகத் தூவி, அதை வெயில் அதிகம் படாத ஒரு இடத்தில் (வீட்டிலுள்ள இருட்டு அறையில்) வைத்து, பானையில் இருக்கும் செடிகளுக்கு தினசரி நீர் ஊற்றி வளர்த்து வருவார்கள். இதனால் தூவப்பட்ட பயறு போன்ற விதைகள், மண்பானையில் நெருக்கமாக முளைத்து நீண்டு வளர்ந்து நிற்கும் இந்த முளைப்பாரி வளரும்போது ஒவ்வொரு நாளும் அது வளரும் வீட்டின் முன்னால், பெண்கள் வட்டமாக நின்று பாட்டுப் பாடி கும்மியடிப்பார்கள். இதனால் பயிர்கள் நன்கு வளரும். இதற்குத்தான் முளைப்பாரி எனப் பெயர்.

இவ்வாறு கிராமதேவதையின் திருவிழா கொடியேற்றம் நடக்கும் முதல் நாள் முதல், கொடி இறக்கும் பத்தாம் நாள் திருவிழா முடியும்வரை வளர்த்துவிட்டு, திருவிழா முடியும் நாளன்றோ அல்லது அதற்கு முன் நாளன்றோ, செடிகள் நிறைந்துள்ள அந்தப் பானையை ஊர்வலமாக கிராம தேவதை ஆலயத்துக்கு எடுத்துச் சென்று, கிராம தேவதைக்கு முன்னர் ஊர் நலத்தையும் தங்கள் குடும்ப நலத்தையும் வேண்டிக்கொண்டு, அந்த முளைப்பாரியை நீர்நிலைகளில் பாட்டுப்பாடி கரைத்துவிடுவார்கள். இதனால் இயற்கைச் சீற்றங்களால் பாதிக்கப்படாமல், தகுந்த காலத்தில் மறை பெய்து விவசாயம் நன்கு பெருகி கிராமம் சுபிட்சமாக இருக்கும். இதைச் செய்யும் பெண்கள் குடும்பத்திலும் அம்மன் அருளால் தக்க காலத்தில் குழந்தைகள் பிறந்து, வம்சம் வளர்ச்சியடையும்.

பொதுவாகவே, நாம் முக்கியமாக செய்யும் பல விதமான சடங்குகளிலும் பயிரிடுதல், செடி வளர்த்தல் மரம் வளர்த்தல் போன்றவை தவறாது இடம்பெறும். குறிப்பாக திருமணம், உபநயனம், ஆலய கும்பாபிஷேகம் போன்ற முக்கியமான நிகழ்ச்சிகளில், இந்த முளைப்பாரியைப் போன்றே, மண்ணாலான ஐந்து கிண்ணங்களில் (பாலிகைகளில்) மண்ணைப் பரப்பி, அந்த மண்ணில் விதைகளை விதைத்து, திருமணமான சுமங்கலிப் பெண்கள் மூலம் ஜலம் விட்டு வளர்க்கச் செய்து, அந்த மண் பாலிகைகளை, செடிகளை மங்கள நிகழ்ச்சிகள் முடியும் நாளன்று, நீர் நிலைகளில் பாட்டுப்பாடி கரைத்துவிட வேண்டும். இதனால் நிகழ்ச்சி தடங்கலின்றி நிறைவேறுவதுடன், மங்களமும் ஏற்படும் என்கிறது சாஸ்திரம். இதுவே முளைப்பாரி எனும் வேண்டுதல் நிகழ்ச்சியாக அமைந்துள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple
மதுரை:  மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றம் நாளை காலை 9:50 மணிக்கு மேல் காலை 10:14 ... மேலும்
 
temple
அழகர்கோவில்: அழகர்கோவில் சித்திரை திருவிழாவின் முத்தாய்ப்பான அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி மே 10ம் ... மேலும்
 
temple
மதுரையில்: சுமார் 550 ஆண்டுகளுக்கு முன்பு ஹரியானா மாநிலத்தில் அவதரித்தவர் கிருஷ்ண பக்தர் சூர்தாஸர். ... மேலும்
 
temple
பாரம்பரியமிக்க கோவில்கள் சிதைக்கப்பட்டுள்ளனவா என்பதை கண்டறிய, உயர் நீதிமன்ற பரிந்துரையை ஏற்று, ... மேலும்
 
temple
ராமேஸ்வரம்: சித்திரை அமாவாசையையொட்டி, ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில், ஆயிரக்கணக்கான பக்தர்கள், புனித ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2017 www.dinamalar.com. All rights reserved.