Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
நீலகேசி பகுதி-1 நீலகேசி பகுதி-3
முதல் பக்கம் » நீலகேசி
நீலகேசி பகுதி-2
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 மார்
2013
05:03

குண்டலகேசி வாதம்

150. கொல்லை முல்லைபைங் கோங்குருந்தங் கோடறண் குரவ
நல்ல மல்லிகை நறவம்ஞாழல் தாழைபுன் னாகம்
பல்லி தழ்ப்பனிக் குவளை பானல் பாதிரி பிறவு
மெல்லை யின்மல ரேந்தி றைவன திடவகைக் கெழுந்தாள்.

151. நீட்சி யோக்கமோ டகலநினையநின் றெங்கணு நோக்கி
மாட்சி யால்வலங் கொண்டுமாதவத் திறைவனிற் பிழையாக்
காட்சி யேனெனி லெல்லாக்கதவமுந் திறக்கெனத் திறப்ப
வாட்சி மூவுல குடையவடிகட மடியிணை தொழுதாள்.

152. அத்தி யாளியோ டாமானட்ட மங்கல மரிய
பத்தி பாவைபல் பறவைபயில்கொடி திமிசொடு பிறவும்
வித்த கம்பெரி துடையவசித்திர வுருவநன் மலராற்
சித்த நன்னெறி பயந்தான்திருவடிக்கு அருச்சனை செய்தாள்.

153. தூமஞ் சாந்தொடு சுண்ணந்துதியொடு பரவுபு தொழுதே
தாமந் தாழ்தர நாற்றித்தத்துவ தரிசிய துருவே
யாமென றையென வியந்தாங்கன்ன வாயிரத் தோரெண்
ணாம நல்லிசை தொடுத்துநாதகீ தங்களை நவிற்றும்.

154. கன்று காலனைக் கடந்தாய்காதற் காமனைக் கடிந்தாய்
தொன்று மூத்தலைத் துறந்தாய்தோற்ற மாக்கட லிறந்தா
யொன்ற நோய்பகை யொருங்கே யுடைந்து வெங்களத் துதிர
வென்றி ருந்தனை நீயே வீரர்தம் வீரர்க்கும் வீரா.

155. சாத னோய்சரை பிறவிதாஞ்செய் திவினைக் கடலுண்
மாது யருழந் துறுநோய்மறுகு மன்னுயிர்க் கெல்லாந்
தீதி னன்னெறி பயந்துதிரைசெய் நீள்கரை யொருவிப்
போத ரும்புணை படைத்தாய்புலவர்தம் புலவர்க்கும் புலவா.

156. அரிய வாயின செய்திட்டமரர் துந்துபி யறைந்து
புரிய பூமழை பொழியப்பொன்னெயில மண்டிலம் புதைந்த
விரிகொ டண்டளிர்ப் பிண்டிமரநிழ லிருந்திரு வினையும்
பிரியும் பெற்றியை யுரைத்தாய்பெரியவர்ப் பெரியவர்ப் பெரியாய்.

157. பொங்கு சாமரை யேந்திப் புடைபுடை யியக்கார்நின் றிரட்டச்
சிங்க வாசனத் திருந்துதெளிந்தொளி மண்டில நிழற்றத்
திங்கண் முக்குடை கவிப்பத்தேவர்தந் திருந்தவை தெருள
வங்க பூவம தறைந்தாயறிவர்தம் மறிவர்க்கு மறிவா.

158. ஊறி யாவது முணராயுறல்வகை யிதுவென வுரைத்தி
கூறு வேனெனக் கூறாய்குரன்முர சனையதோர் குணத்தை
செற லுள்ளமு மில்லையாய்த்திருமலர் மிசையடி யிடுதி
தேறு மாறென்னை நின்னைத்தேவர்தந் தேவர்க்குந் தேவா.

159. கண்ணி னாலொன்றும் காணாய்காணவு முளபொரு ளொருங்கே
பெண்ணு மல்லவுஞ் சாராய்பிரிதலில் போந்ன்ப முடையை
யுண்ணல் யாவது மிலையாயொளிதிக ழுருவம துனதா
லெண்ணில் யார்நினை யுணர்வா ரிறைவர்தம் மிறைவர்க்கு மிறைவா.

160. சொற்றி யாவதுங் கேளாய்சுதநயந் துணிவுமங் குரைத்தி
கற்றி யாவது மிலையாய்க்கடையில்பல் பொருளுணர் வுடையை
பற்றி யாவது மிலையாய்ப்பரந்தவெண் செல்வமு முடையை
முற்ற யார்நினை யுணர்வார்முனைவர்தம் முனைவர்க்கு முனைவா.

161. அன்மை யாரவர் தாந்தாமறிந்தன வுரைத்த பொய்யாக்கி
நின்மெ யாகிய ஞானநிகழ்ச்சி நீவிரித் துரைத்த
சொன்மை யாரிடை தெரிந்தார்தொடர்வினை முழுவதுஞ் சுடுநின்
றன்மை யார்பிற ரறிவார்தலைவர்தம் தலைவர்க்குந் தலைவா.

162. ஆதி யந்தளப் பரிய அருகந்த பகவர்த மறஞ்சால்
சேதி யம்புக்க வர்தந்திருந்தடி களைப்பெருந் துதிசேர்
போதி யிற்பணிந் திருந்தாள்புன்னெறி தாம்பல வவற்றுள்
யாதுகொ றான்மு னென்னாலடர்க்கற் பாலது வென்றாள்.

163. ஊன்றின்ற லிழுக்கென்னானுயிரினையு முளதென்னா
னோன்றலையு நோன்பென்னானோக்குடைய கணிகையரே
போன்றிருந்து பொதியறுக்கும்புத்தன்றன் புன்னெறியை
யான்சென்ற தடிப்படுப்பறைக்கரும மிதுவென்றாள்.

164. மண்டலத்தி னோக்குவாள்யடுத்ததன தவதியால்
கண்டனடான் காம்பிலிக்காவலன் கடைமுகத்தோர்
தண்டப்நூய பொழில்நாவற்சாகைநட் டுரைபெறாக்
குண்டலகே சிப்பெயரைக்குறியாக வேகொண்டாள்.

165. தருமத்திற் றிரிவில்லாடயாச்செய்தற் பொருட்டாக
நிருமித்த வகையினதாநெடுநகரை வலஞ்செய்து
திருமுத்தப் பீடிகைக்கட்சித்தரையுஞ் சிந்தித்தோர்
பெருமுத்தப் பெண்ணுருவங்கொண் டியைந்த பெற்றியளாய்.

166. அந்தரமே யாறாச்சென்றழனுதிவே லரசர்கட்
கிந்திரனே போன்றிருந்தவிறைமகன திடமெய்திக்
கந்திருவ மகளேன் யான்காவலனைக் காண்குறுவேன்
வந்திருந்த துரைவிரைந்து வாயிலோ யெனச்சொன்னாள்.

167. கருங்களிறுங் களிமாவுங் கந்தோடு பந்தியவே
நெருங்குபுபோய் நீருண்ணாதேர்பண்ணா நெடுங்கடைக்குப்
பெரும்படையுஞ் சாராதிப் பெண்பாவி மரநட்டிங்
கிருந்ததன் றிறத்தினாலெனக்கரிது புகலென்றான்.

168. வாயிலோ னுரைகேட்டு வடிக்கண்ணாண் முகநோக்கி
கோயிலையான் புகவிலக்குங்குறையென்னை முறைதிருத்தும்
பூசலிங் குடையையோபொருளிழவோ வுயிரிழவோ
நீயிலையார் புதனடற்குநிமித்தமிங் கென்னென்றாள்.

169. என்கருமம் வினவுதியேலிலிங்கியரு ளென்னோடு
நன்குரைப்பார்த் தரவ்வேண்டிநாவற்கொம் பிதுநட்டே
னுன்கரும நீ செய்வாய்நுழைந்தறிவு முடையையேல்
மன்பெரியான் றிருந்தவையுண்மாற்றந்தா வெனச்சொன்னாள்.

170. அப்படித்தே யெனின்வாயிலடைப்பொழிக யானைதே
ரெப்படியு மியங்குகநும்மிறைமகற்கு மிசைமினென்
றிப்படியா லிவையுரையாவிலைநாவ லிறுத்திட்டா
டுப்போடு கனிதொண்டை துயில்கொண்ட துவர்வாயாள்.

171. வேந்தனு மதுகேட்டே விம்முயிர்த்த வுவகையனாய்ப்
பூந்தடங்க ணல்லார் புகுதுக வெனப்புகலும்
போந்திருக்க வெனவிருக்கை பொருந்திய வாறவர்கட்
கீந்துலகத் தியற்கையு மினிதினிற் செய்திருந்தான்.

172. முதலவனோ டவனூலுமந்நூலின் முடிபொருளு
நுதலிய பொருணிகழ்வுந்நுங்கோளு மெமக்கறியத்
திதலைமா ணல்குலீர்தெருட்டுமி னெனச்சொன்னா
னதலையும் பெருங்கதவமடைப்பொழித்திட் டலைவேலான்.

173. நன்றாக வுரைத்தனைநீநரதேவ நின்னவையுள்
வென்றார்க்கோர் விழுப்பொருளும்தோற்றார்க்கோர் பெரந்துயரும்
ஒன்றாக வுரையாக்காலுரையேன்யா னெனச்சொன்னாள்
குன்றாத மதிமுகத்துக்குண்டலமா கேசியே.

174. அறத்தகைய வரசனுமதுகேட்டாங் கவர்க்குரைப்பான்
சிறப்பயர்வ னன்றாகவென்றார்கட் கின்றேயான்
புறப்படுப்பன் றோற்றாரைப்பொல்லாங்கு செய்தென்றாற்
கிறப்பவும் பெருதுவந்தாரிலங்கிழையா ரிருவருமே.

175. வேனிரைத்த விரிதானைவேத்தவையார் வியப்பெய்தக்
கோனுரைத்த வுரைகேட்டே குண்டலமா கேசியுந்
தானுரைத்தாள் தான்வேண்டுந்தலைவனூற் பொருணிகழ்ச்சி
தேனிரைத்த கருங்குழலா டானும்பின றெருட்டினாள்.

176. ஆதிதான் பெரியனாயறக்கெடு மளவெல்லா
மூதியமே யுணர்ந்தவனுறுதரும மேயுரைத்தான்
யாதனையுந் தான்வேண்டானயலார்க்கே துன்புற்றான்
போதியா னெம்மிறைவன்பொருந்தினா ருயக்கொள்வான்.

177. முந்துரைத்தான் முந்நூலு மந்நூலின் முடிபொருடா
மைந்துரைப்பி லுருவுழப்பறிவோடு குறிசெய்கை
சிந்தனைகட் செலவோடுவரவுமே நிலையில்லை
தந்துரைப்பி னெரிநுதிபோற்றாங்கேடு நிகழ்வென்றாள்.

178. சொல்லியவந் நான்மைமேற்றுணிவினையுந் தான்பெயர்த்து
நல்லவையை மனங்கொளீஇநான்மையின் முதல்வைத்த
வெல்லையில் குணத்தலைவரிலக்கணமென் றெடுத்ததன்மேற்
பல்வகைய பெருங்குற்றம் பதம்பதமாயக் கேளென்றாள்.

179. முன்னெனப் படுவதுதான்முதலில்லாத் தடுமாற்றம்
அன்ன தன்கட் பெரியனேலறங்கொண்ட தவமாகும்
பின்னதன்கட் பெரியனேற்பிறழ்வெய்துங் காலச்சொ
லென்னென்றான் பெரியவாறிருமையினுந் திரிந்தென்றாள்.

180. பெருமைமுன் பெற்றனனேற்பின்னைத்தான் முடிப்பதோர்
கருமமிங் கெவனாகுங்காட்டுதியேற் பெற்றிலன்முன்
றருமந்தான் கருதிநீசொன்னாயேற் றலைவரே
யொருமையா லறந்தெளிந்தவுழப்புலையர் முதலானார்.

181. தான்கெடினுந் தக்கார்கே டெண்ணற்க வென்பதனை
யூன்கொடுமை யுரைத்தான்துணர்ந்திலனே யாகாதோ
தான்கெடு மளவெல்லாநினைந்துரைத்த தத்துவந்தான்
மான்கடியு நோக்கினாய்வழியறக்கெட் டொழிவதோ.

182. வழிவாழக் கெடுகின்றார்மாந்தருள் மேலாயார்
பழிபாவ மோராதான்பற்றினார்ப் பாழ்செய்வான்
ஒழிபாவி தலைவனென்றுரைப்பதனை யுலகத்தார்
கிழியோடு மாறாக்காசென்றான்சொற் கேட்பவோ.

183. நுனைத்தலைய நுண்மயிரைநுனியுறீஇ விதிர்த்திட்டா
லனைத்துணைய தடங்கலுமறக்கிடந்த பிறந்துழப்பு
நினைக்குங்காற் பிறர்க்கேயாமென்றியா னீயன்னா
யனைத்துணைய பெரும்பாவமவன் செய்தா னாகானோ.

184. துன்பந்தான் றீவினையின் வழித்தோன்றுந் துன்பேயா
மென்பதனை நுமரேடீ யெப்பொழுது முரைப்பவாற்
பின்புந்தான் பிறர்பிறர்க்குப் பிறந்துழப்பே யாக்கினா
லன்பினான் முன்செய்த தருவினையே யாகாதோ.

185. தனக்கொன்றும் பயனின்றித்தளையாளென் றான்வருந்தி
யெனைப்பெருங் குப்பையுமெருச்சுமப்பாற் கண்டக்கால்
நினைப்பதொன் றுடைத்தவன்செய்நெடும்பாவ நிச்சலும்
மனக்கினிதா வவன்றன்னையாள்வார்மாண் புரையாயோ

186. அவ்வகையா லுழக்கின்றா னயலார்கள் படுகின்ற
வுய்வகையில் போந்டரையொழிப்பதன் பொருட்டாக
விவ்வகையா லருள்செய்யு மென்பதனை யெடுத்துரைத்தாள்
கொவ்வையந் துவர்ச் செவ்வாய்க்குண்டலமா கேசியே.

187. அருளினாற் பிறர்க்குழக்குமனனென்ற வவ்வுரையைப்
புரளல்நீ பிறப்பொழியும்பொழுதின்க ணவ்வருளைப்
பொருளன்மை கண்டானோபுற்கலர்தா முலர்ந்தாரோ
தெருளநீ யுரைத்துக்காண்டிருந்தவையா ரிடையென்றாள்.

188. ஊடுபுக் குயிரடுந் துயரந்தா னொழிக்கின்றான்.
வீடுபெற் றிறந்தனனேல் விளிகவன தருள்பாவி
யோடுகிற் றிலனொன்றுந் தாதையையே யுழப்பித்தோ
னாடைபற் றெனவுரைத்த வவன்போன்றா னாகாதோ.

189. அங்கிருவ ருளரன்றோ வறப்போக்கிப் போவாரென்
றிங்கிருந்து நீயஙரைத்தா லிவனருள்யார் தெளிகிற்பார்
அங்கிருவ ருளரெனினு மவரின் முன் னவையீரே
நங்கரும முலைப்பித்து நாம்போது மெனநக்காள்.

190. முன்கொன்றான் றன்றாயைமுழுமெய்யும் போர்த்திருந்து
தின்கின்றான் பிணம்வீடுந்தெருட்டுங்காற் சூனியமே
யென்கின்றா னிவன்போல்வாரிறைவரில் லெனவுரைப்பாய்
தன்கன்று சாக்கறப்பான்றயாப்பிறிதிற் குடையவனோ.

191. கண்ணொடுகா திவையிலள்கரந்தன முலையிரண்டு
முன்னும்வா யுதட்டோடுமூக்கில ளுறுநோய்த்தி
பெண்ணழகிற் கிவள்பிறராற்பேசவும் படுவாளோ
எண்ணுங்கா லென்பேதையெனவுரைக்கு மவனொத்தாள்.

192. பருவரலொன் றிலன்றாயைப்பழுப்பறித்தான் தலைவனிவள்
கருவரைமேற் றன்கணவன்காலனையுங் கவிழ்த்திட்டாள்
இருவரையும் போல்வாரிவ்விருநிலத்தின் மேலெங்கும்
பெருவழியார் பேரருளார்பிறர்யாரே யெனநக்காள்.

193. ஒண்ணுதலா யுன்றலைவனொழிவின்றி யுணர்கலான்
கண்முதலா வுரையவிக்கருவியிற் கண்டுகேட்
டெண்ணியு முணர்தலாவிலைசுமக்கு மொருவன்போ
னுண்ணுணர்வு தனக்கில்லானுரைத்ததுதா னூலாமோ.

194. ஐங்கந்த மெனல்பிழைப்பா மறிவினின்வே றாதலாற்
சிங்குந்தன் குறியுழப்புச்செய்கையென் றிவைமூன்று
மிங்கொன்று முருவினோடிரண்டென்னாய் மிகவுரைத்தாய்
சங்கந்தா மல்லவேற்றத்துவமுந் தலைப்பட்டாய்.

195. முன்னைத்தன் முழுக்கேடுமுழுக்கேட்டின் வழித்தோன்றும்
பின்னைத்தன் பிறிதறிவும்பெயர்த்துரைத்தல் பெரும்பேதாய்
என்னொக்கு மெனினெருநலிற்புகுந்தா னிடையிராத்
தன்னைத்தந் தெனைக்கொண்டுதான்சென்றா னெனலன்றோ.

196. கள்ளனுந் தானேயாய்க்கையாப்புண் டவனேபோ
லுள்ளந்தா னின்றவற்றை யுணர்ந்தவற்றோ டறக்கெட்டிங்
கெள்ளனைத்து மில்லென்றாலிறப்பறித லெவனாகுந்
தெள்ளியாய் தெளிந்திருந்துசிந்தித்துக் காணாயோ.

197. கோன்பட்டான் குந்தத்தாற்கத்துண்டா னேனாதி
தான்பட்டான் றளவீரன்தப்பியோ டவனருகே
யான்பட்டே னென்பவன் போல்யாத்திருந்தே சொல்லுதியால்
தான்பட்டான் பட்டார்க்குத் தன்பாட்டை யுரைக்குமோ!

198. பிறைப்பிறப்பும் பிள்ளைகடம்பிறப்பினையு மெடுத்துரைப்பின்
மறைபொருள்கள் வெளிப்பட்டாமன்னுந்தாங் கருதுபவால்
குறையென்னை வான்வயிற்றாற்குண்டலமா கேசியித்
தறையகத்துப் பிறப்புரைத்தாள்றத்துவமாக் கொள்வாமோ.

199. பின்னசந் தானமும் பிறிதில் சந் தானமு
மின்னவென் றிரண்டுரைத்தெத்துணையோ பொழுதோதிச்
சொன்னதன் பொருளெல்லாஞ்சுவடின்றி யறக்கெடுத்தற்
கன்னதே யெனிலாதனாழிநாட் டாகாதோ.

200. எண்ணிலாப் பலகந்த மிடையறா வென்றுரைப்பிற்
கண்ணுறா தொன்றுதலாற்கலப்பிலவா மாகவே
திண்ணிதா மிடையறவுதீண்டுமேற் றிரண்டொன்றா
அண்ணறான் முடிந்தறக்கே டரியதே போலுமால்.

201. வாசனையி னாமெனினும் வழியதனின் முதலதொன்
றாசனைத்து மில்லையே லறிந்துரைப்பு மரிதரோ
பேசினைநீ உளதெனினும் பெருந்தாமத் துண்ணூல்போல்
லோசனையி னெடியதோ ருயிருரைத்தா யாகாயோ.

202. பாதிரிப்பூப் புத்தோடு பாழ்ப்பினுந்தான் பல்வழியும்
தாதுரித்தாங் கேடின்மை யென்பதுநுன் றத்துவமோ
போதுரைத்த வோடுநீர் போலுடம்பு பொன்றிடினும்
மூதுரைத்த வாசம்போன் முடிவுயிர்க்கே யாகாதோ.

203. சத்திதான் சென்றதே யென்றியே லைந்தன்றிப்
பொத்திநீ யுரைக்கின்ற பொருளோடா றாகாவோ
சத்திதா னதுவன்றி யைந்துமே யாயினும்
பித்தியாய் முழுக்கேடு பேசினா யாகாயோ.

204. அலைபலவே யுரைத்தாளென்றருகிருந்தோர் கருதுதலுந்
தலைவனூல் பொருணிகழ்ச்சிதங்கண்மேற் குற்றங்க
ணிலைபெற வுரைத்தின்மைநிறுத்துவன்யா னென்றுதன்
தலைவனீ பொருள்களேதானாட்ட லுறவினால்.

205. கண்கொடுத்தான் றடிகொடுத்தான்கயப்புலிக்குத் தற்கொடுத்தான்
பெண்கொடுத்தா னுடம்பினையும் பிளந்திட்டுப் பிறர்க்கீந்தான்
மண்கொடுத்தான் மகக்கொடுத்தான்மன்னுந்தற் சேர்ந்தார்க்கு
விண்கொடுத்தா னவன்கொடுத்த விரித்துரைப்பன் கேளென்றாள்.

206. ஏதி லாரிடர் தீர்க்கு மெமவிறை
சாத கம்மிவை யென்று தலைத்தலை
யோகி னாணின் றொருபக லெல்லையுங்
கோதை வார்குழற் குண்டல கேசியே.

207. நூலு நாரு மிசைத்தன வொத்தலா
னீல கேசி நெடுங்க ணாள்சொல்லு
மாலும் பேயு முடையவர் செய்கையே
போலு நீ சொன்ன புத்தர் சரிதையை.

208. போழுங் கண்ணுந் தலையுந் தடிகளுந்
தாழ மின்றி யிவைதம்மி னோவென
வாழு மாந்த ருழைவரு வாரில்லை
கூழன் றன்னுழை யேகொளச் செல்பவோ.

209. பிளத்த லுள்ளிட்ட வாய்ச்செல் வதிந்திர
னளத்தற் கேலவன் றானறி யும்பிற
னுளத்தை யோரல னேலவன் றேவனாக்
கிளத்த றானோர் கிழமையும் போலுமே.

210. யாவ னாயினு மன்னவ னின்மையிற்
றேவ னென்று தெளியுந் தெளிந்தபின்
சாவ னென்பதோர் சங்கைய மின்றியே
யீவ னென்பதோ ரிச்சையுந் தோன்றுமே.

211. உறுதி யல்ல துணர்வடையான்றனக
கிறுதி யேலென்று மிந்திர னெண்ணலன்
மறுதி யின்மையின் மாணிழை நீயெங்குப்
பெறுதி முன்னெடு பின்னியை யாதவே.

212. ஆத னாற்குறந் தாங்கெழு வான்றும்ம
வேத மில்சுட ரேற்றொரு தாமென்றான்
சாத கம்மிவற் றானருள் சாதிப்பா
னோதி னார்க்கு முணர்வொருப் பாயதே.

213. எருது பாலின்மை யெண்ணலன் றும்மலே
கருது மாதனுங் கண் முத லாயின
தருத லல்லது தங்குறை யீதெனார்
மருதின் வாழ்பகை யானவிம் மாந்தரே.

214. பாக மேபிளந் தாற்பர காயமொன்
றாகு மேயென வீவ தாதன்மை
காக மேயுண்ணுங் கண்ணுமற் றன்னதே
யேக மெய்யும்விண் டாலியை யார்களே.

215. உள்ளந் தானிரு பாகினு முண்மையாற்
கொள்கின் றானிவ னேகொல்லு வான்றனை
யெள்ளி நேரு மறிவில்லை யேற்பிணங்
கொள்ளென் றீர்ந்து கொடுப்பினுங் கூடுமோ.

216. கூறு கூறுசெய் தாலுடம் புள்ளுயிர்
வேறு வேறு செலல்வெளி றாக்கொளாய்
பாறு வாயுரைக் கும்பர மாத்தங்க
டேறு வாருள ரோதெருண் டார்களே.

217. புத்த னார்வண்ணங் கண்ட புனையிழை
சித்த னேயென்னைச் சேர்மின மென்றலி
னத்த கன்னருள் செய்கல னாய்விடின்
மத்த கம்பிளந் தானென்றன் மாயமே.

218. ஆவ தின்மை யறிந்து மவத்தமே
சாவ தேயுங்கள் சத்துவர் சால்பெனிற்
காவல் பூண்ட கணவனோ டீமத்தின்
வேம வட்கும் விழுக்குண மாங்கொலோ.

219. சாந்தி யாகத் தரும முரைப்புழிக்
காந்தி பாவியைக் கண்டு கலகன்றா
னேந்தி வெம்படை யாலெறிந் தாற்கிடம்
போந்து கொண்டதும் பொய்யினுட் பொய்யன்றோ.

220. யானை யுள்ளா செங்குள தங்கெலாம்
வான நின்று வழிபடல் காண்டுமான்
மீனு மல்லவும் வேதனை யெய்துழித்
தான தாதற்றா தாகதர் தன்மையோ.

221. குரங்கு மாயவை கொல்லிய செல்வழி
யிரங்கி யேயுயக் கொண்டது மென்றியாற்
குரங்கு நேர்குதி யாக்குரங் கெங்குள
மரங்கள் பாய்ந்திடு மாண்பின வல்லவோ.

222. சீல நல்லவர் நீள்குவர் சேணெனிற்
கோல மில்குரங் காட்டிக் கொல் வார்களைக்
காலுங் கையு மெழற்கெனக் காண்கிலான்
வாலை நீட்டிக் கிடத்தறன் மாட்சியோ.

223. தாய்க்கொன் றான்றங்கு செங்குரு திப்புனல்
பேய்க்கொன் றீதல் பெருங்கொடை யென்பதை
வாய்க்கின் றாயினி மானுயர் மாசெலா
நாய்க்கென் றாலிது நல்லற மாங்கொலோ.

224. யான்செ யும்பொரு ளென்றங்கொ ரேகாந்தன்
தான்செய் திட்டனன் சாதக கற்பங்கள்
மான்செய் நோக்கி மதிப்பொழி நீயெனக்
கோன்சொ னானிது குண்டல கேசிக்கே.

225. முயலுரை யிதுவெனெ மூடிக் கொண்டிருக்ந்
தயலார்க் குரைப்பவ ராத ரல்லரோ
புயலிருங் கோந்தலி பொருந்தச் சொல்லினாள்
வியலவ ருரையொடு விரோத மில்லையே

226. அரசிறை யிட்ஜுசொலவவை நார்களு
முரைசெறி வுடையன வுரைத்த நீர்மைபூண்
முரைசொடு நெடுங்கொடி முலூங்க நாட்டுக
விரைவொடு படுகென வேந்த னேயினான்.

227. இருப்பதென் னினியன்னா யிதுநுமக் குரைத்தார்யார்
சும்க்கினைக் கடிதாகச் சொல்லெளூக் கெனலோடுக்
திருக்கிளர் மதிலுஞ்சை தென்றிசை யகனகரு
ளம்க்கசந் திரனென்னு மவாச்சிய னெளூச்சொன்னாள்

228. கட்டுரை பலசொல்லிக் காவல் நெடுங்கடை நாவலைமுன்
னட்டிவ ணகரிடை நகைசெய்து புகுந்தவிந் நன்னுதலை
வட்டிகொள் பறைகொட்டி வழுவுரை பலசொல்லி (வாரலென்று
பெட்டன பலசெய்து பெருநகர் வாயிலைப் புறப்படுத்தார்.

229. புனத்திடை நறுமலர்ப் பூங்கொடி யன்னதோர் பொற்பினளாய்
எனைப்பல நூல்களு மியல்பினி னறிபவ ளேதமில்லாள்
தனக்கினி யான்செயற் பாலதுதானென்னை யெனவுரைத்தான்
இனத்தகை யேற்றரி யிடியுறுமேறெனு மிவற்றை யொப்பான்.

230. ஆண்டகை அரசிறை அதுசொல்லக்கேட்டவவ் வறத்தகையா
டீண்டல னணிபிற புனைவெனுநினைவிலன் றினையனைத்தும்
வேண்டல னிலனொடு விழுநிதியினையவும் விறற்றகையா
யீண்டினி யறநெறி யுறுகெனவேந்திழை யியம்பினளே.

231. வந்தது மிதுபொருண் மன்னவயானென நன்னுதலா
ளிந்திர னனையநின் னிறைமையினறநெறி யிகழலென்றாங்
கந்தர நெறிசெலற் காயிழையரசனை விடுத்தருக்க
சந்திர னிருந்தவத் திசைமுன்னித்தளிரிய றானெழுந்தாள்.


அர்க்க சந்திர வாதம்

232. உஞ்சை மாநக ரெய்தின ளாயத
னிஞ்சி மாட்சியு மெல்லையில் செம்மலு
மஞ்சு தோய்நெடு மாடமும் வீதியு
மஞ்சி லோதி யவையவை கண்டபின்

233. பருக்கை மால்களி யானைப்பல் வேந்தரு
மிருக்க போதக வென்னும் பெருமையான்
றருக்க நீட்டமுந் தன்னிக ரில்லவ
னருக்க சந்திர னென்னு மவாச்சியன்.

234. போதி சத்துவர் புத்த ரெனப்படு
நீதி யிற்பெரி யாரன நீநூ;மையா
னோதி நூன்மும்மை யொப்ப வுணர்ந்தவன்
வாதி கட்கோர் வயப்புலி யேறனான்.

235. மாடமோங்கி மழைநுழைந் தின்குயில்
பாடு பூம்பொழிற் பாங்கரோர் பள்ளியுட்
பீட மேறிப் பெருந்தகை யார்க்கெலாம்
வீடு பேறும் வினையு முரைப்புழி.

236. சென்று தானெய்திச் சிற்பிடத் தாற்புக்குத்
துன்று நீண்மணித் தூணணிந் தெண்ணென
நின்று நீலவைம் பாற்பெய ராளுமங்
கொன்று பல்வகை யோத்துரை கேட்டனள்.

237. கொள்ளு மாறுந்தன் கோரகை யுட்கஞ்சி
மொள்ளு மாறு முதுகு நெளித்துண்டு
னள்ளு மாறு மணலெடுத் திட்டவை
மெள்ள மெள்ள விழுங்கு மவைகளும்.

238. வழிக்கு மாறுந்தம் மண்டையி னுண்டுமன்
ஒழிக்கு மாறும தூட்டு மவைகளும்
மழிக்கு மாறுந் தலைகளை மையிட்டு
விழிக்கு மாறும் வினைய விதியினால்.

239. இனைய வேசொல்லி யிட்ட தலையராய்
வினைய நூலை வியப்பெய்து வார்க்கெலா
மனைய தேநு மறநெறி யென்றனள்
முனைவன் றன்னெறி முன்ன முணர்ந்தவள்.

240. அவ்வு ரையம ரானுய ராசனச்
செவ்வ ரைம்மிசைத் தீத்திரள் போல்பவ
னிவ்வு ரையிவ ணென்னெனச் சொல்லினான்
றெவ்வ ரைத்திறல் வாட்டிய திண்மையான்.

241. வீரஞ் செய்து விழியல் வினையநூல்
பேர ததேல் பெரிது மழகிதே
யோரு மதோ ருறுவினை யென்பதைத்
தேரச் சொல்லுநின் றிண்பொரு ளென்றனள்.

242. வினைய தாகிய பெற்றி விரித்துநீ
தினையி னேரும் தெருட்டெனக் கென்னவே
அனைய வவ்விர தத்தோ டறிசல
மினைய கேளென் றெடுத்தன சொல்லுமே.

243. தன்னை யீந்ததும் தாரங்க ளீந்தது
மன்ன தன்பொருள் கேட்டறங் கொண்டவன்
மன்னு மில்லயன் மாந்தரைக் காணுமேற்
பின்னைச் செய்வன பேசலு மாகுமோ.

244. காம மூரிற் கணிகைய ரோடன்ன
தூய்மை யுண்மையிற் றோற்றங் கரந்தவட்
சேம மாவகைச் செல்கமற் றென்பதும்
வாம நூலின் மறைபொரு ளல்லவோ.

245. சிங்க தத்த ரெனப்படுந் தேரனார்
சங்க போதியி லாள்கட் டயாச்செய
விங்கி தென்னென வேழாய் தவசிகட்
கெங்கெங் காமி லெனவுரைத் தானரோ.

246. யாது மில்லை யுயிரென் றறநெறி
யோதி னானவ் வுயிரிலி தன்னொடு
வேத னைதணிப் பான்வினை வீட்டிற்கும்
சாத னைநிற்குஞ் சத்துவ னாமென்றீர்.

247. சித்த மோடிக் கலங்கித் திரியாத
நத்தம் பெற்றது நற்றவ மேற்கொண்டான்
பத்தின் மேலும் பழிசெய்யு மேற்பள்ளி
வத்தன கண்டீநூ; வழக்கின்கட் கூரியீர்.

248. போதி யாருரு வெய்திய புற்கலர்
வேதி யாற்கிடந் தாருள ராயினான்
ஞாதி யாரென நாட்டிய கூட்டமும்
ஓதி வைத்ததொன் றுண்மை யுணர்த்துமால்

249. ஆரம் பிச்சி யலிவிலங் கவ்வுருச்
சீரிற் கொத்தாள் கணிகை தெருண்டாள்பெண்
ஒரு மில்லா ளுயிரிலி யூமையுந்
தார மாக்கொடி ரென்றல் சலமதோ.

250. பிறந்த வில்லினுள் வாழ்க்கை பிழைப்பெனு
மறங்கொண் டான்கொண் டவாச்சிய வேடத்தாற்
சிறந்த வல்லன சிங்கின வெங்கணுந்
துறந்த வான்பொருள் சொல்லவும் வல்லையோ.

251. உரைப்ப பேரரு ளுண்பன மீனொடூன்
றிரைப்ப மெல்லனை செய்வ விழுத்தவம்
கரைப்ப தீவினை கண்டது சூனியம்
புரைப்பின் மார்க்கம் பொருத்த முடைத்தரோ.

252. எல்லா மசுசியு மென்ப வனவா
லல்லா லழுக்குற் றவனடிக் கேத்தலர்
சொல்லார் சுகமுஞ் சுகத னவனென்று
பல்லார் வருத்தம் பழுதெனப் பண்ணுப.

253. நிலையா வெனெச்சொல்லி நேர்ப்ப பொருடூயே
மலையோ ரனையந்ன் மாட மெடுப்ப
விலையே யுயிரென் றிறந்த நினைப
புலைசே யமர்ந்தவர் புத்தியின் வண்ணமே

254. மயித்திரம் பாவித்து மற்றவற் றூனை
யசிப்பன வேபோ லமர்ந்ததிருந்த துண்ணுஞ்
சயித்தியங் காணித் தலையினை முட்டும்
பயித்தியங் கொண்டவர் பண்புமா தொக்கும்

255. புத்த ருருவுக்கும் போலிக்கும் போலியை
மத்தகத் தேத்தி வணங்கி வழிபடுஞ்
செத்த பொழுதினச் செந்தடி மென்றிடு
மத்த னுடைய வருள்வகை வண்ணம்.

256. பேனறாக் கூறை பெருமுடுகுநாறுமேற் றுக்கந் துக்கம்
மானறா நோக்கி மணற்சுமையுந்தான்பெரிதாற் றுக்கந் துக்கந்
கூனிறாக் கண்டாலுங் கொள்ளமுடியாதேற் றுக்கந் துக்கந்
தானறாப் பறொழிலுந் தான்றுக்கமாதலாற் சருவ்வந் துக்கம்.

257. பொய்பொத்திச் சொல்லினவும்போங்கூலி கொண்டனவும்
வையத்தஞ் சுட்டனவும்வாழ்மருது கொன்றனவும்
கையத்தி னூனுக்கேகன்றிக் கலாய்த்தனவு
மையத்தை யின்றியடுப வாலோவழல்நரகத் துள்ளேயடுப வாலோ.

258. பற்றே மிகப்பெருக்கிப் பறொடர்ப்பா டேயாக்கி
யற்றீர் போற் காட்டி யடைக்கலமே வவ்வுநீர்
பெற்றீரே பேயுடம் பன்றேற் பெரும்பாலு
மெற்றே யிருணரகிற் கீர்க்கு மாலோ
விரக்கமொன் றில்லீரை யீர்க்கு மாலோ.

259. ஆங்கவ ளறங்கூறக்கேட்ட வவாச்சியன்றான்
றேங்கம ழொலிகோதாய்சித்தமே யல்லதில்லை
தீங்கொழுக் கென்றதெல்லாந்தீவினையென் னல்வேண்டார்
பூங்கமழ் காராடைபோர்த்தவெம் புத்தரென்றான்

260. துத்தலே வேண்டிநின்றுதோந்தொடர்ப் பாடுநீக்காய்
சித்தமே நல்லதென்றாற்றேற்றலு மாவதுண்டோ
கத்திகொண்டில் லில்வாழ்பேய்காறலை வேறுசெய்து
குத்தவதின் னும்போழ்திற்கூடுமோகன் மையேடா.

261. உள்ளமும் பாயிரம்மு மொக்குமேல் வீடுமுண்டாம்
கொள்ளுமேற் குற்றமதாக் கூடுமே பற்றுமாங்கண்
விள்ளுமேல் வேறதாய வேடமு மன்னதேயாங்
கள்ளமே சொல்லிநின்று கன்றினாற் காட்டலாமோ.

262. புனைந்துநீ சொல்லும் வீடும்போகவுண் டாக தந்தே
நினைந்துநாங் காணி னெல்லாநின்றதொன் றில்லை யென்றாற்
றுனைந்துதா னுண்மை நன்றுசூனிய மாதற் கென்றாட்
கினைந்தினைந் தேங்கி நல்லாயென்செயற் பால தென்றான்.

263. செத்தவ ரப்பொழுதே தேவருட் செல்பவேனு
மத்தலை யின்பநோக்கா ரஞ்சுவ மாக்களந்தோ
தொத்துள வாகவென்னான் சூனிய வீடுசொன்ன
புத்தனை நோதுமத்த புலம்பனீ போகவென்றாள்.

264. புன்னெறி யவைகளெல்லாம்போக்கிய பாக்கியத்தாய்
நன்னெறி நன்ஞானங்காட்சியு நன்குகொண்டென்
சொன்னெறி திரிவாயேற்சோர்வில்பே ரின்பமெய்தி
மன்னுதி யென்றுமற்றுங்கூறினாண் மாதராளே.

265. காட்டுழல் களிநல் யானைகால்கையி னோர்ப்பித் தேறித்
தோட்டியிட் டூர்வ தேபோற்சூரிய சோமன் றானும்
வாட்டடங் கண்ணி நல்லாள்வாக்கெனுந் தூக்க யிற்றாற்
பூட்டுபு கொள்ளப் பட்டான்போதியார்க் காதி யன்னான்.

266. அருக்கமா சந்திரனையறங்கொளீஇ யாங்கவனை
யிருக்கும்வா யொருப்படுத்திங்கீதுநுனக் குரைத்தாரைப்
பொருக்கநீ சொல்லென்னப்புத்தனார் முதன்மாணி
முருக்குவாய்சென் றவனாம்மொக்கல னெனச்சொன்னான்.

 
மேலும் நீலகேசி »

நீலகேசி பகுதி-1 மார்ச் 15,2013

நீலகேசி என்பது ஐஞ்சிறு காப்பியங்கள் எனப்படும் ஐந்து தமிழ் இலக்கிய நூல்களுள் ஒன்று. சமண சமய நூலான ... மேலும்
 

நீலகேசி பகுதி-3 மார்ச் 15,2013

மொக்கல வாதம் 267. நீவருத லொழியென்றுநிறைபதும புரத்துக்கேமாதிரந்தா னெறியாகமனம்போலச் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar