Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

தகவல்கள் :
முதல் பக்கம் » தகவல்கள்
கும்பகோணம் ராஜகோபாலசுவாமி கும்பாபிஷேகம்!
மார்ச் 16,2013
அ-
+
Temple images

ஆயிரம் ஆண்டு பழமையான கும்பகோணம் ராஜகோபாலசுவாமி கோயிலில் மார்ச்18ல் கும்பாபிஷேகம் நடக்கிறது. ஹரிசொல் எனப்பட்ட அரசாலற்றங்கரையில் தோப்புத்தெரு அக்ரஹாரத்தில் இக்கோயில் உள்ளது. மூலவராக சீதாராமர் வீற்றிருக்கிறார். லட்சுமணன் ஜடாமகுடம், முடியில் கொன்றைப்பூ, பிறைச்சந்திரனுடன் காட்சி தருகிறார். உற்சவர் ராஜகோபாலர் பாமாவுடன் இருக்கிறார். இவர் பெயராலே கோயில் வழங்கப்படுகிறது. ஆண்டாள், ஆஞ்சநேயர், நிகமாந்த மகாதேசிகன், தும்பிக்கையாழ்வாருக்கு சந்நிதிகள் உள்ளன. ஆஞ்சநேயர் சிகைமுடி, வாலில் மணி, கையில் சவுகந்திக மலரேந்தி  தெற்கு நோக்கி அருள்பாலிக்கிறார்.கும்பாபிஷேக நிகழ்ச்சி நான்குநாள் நடக்கிறது. மார்ச்15 மாலை 6 விஷ்வக்சேன ஆராதனம், வாஸ்து ஹோமம் நடக்கிறது. மார்ச்16 காலை 9 யாகசாலை பிரவேசம், பகல்12 முதல் கால பூர்ணாஹுதி, மாலை6 இரண்டாம் கால யாகசாலை நடத்தப்படும். மார்ச் 17 காலை 9 மூன்றாம் கால யாகசாலை, மாலை4 மூலவர், உற்சவருக்கு 81 கலச திருமஞ்சனம், இரவு 7 நான்காம் காலயாகசாலை நடக்கும். மார்ச் 18 காலை 5 ஐந்தாம் கால யாகசாலை, 6- 7.15 மணிக்குள் கும்பாபிஷேகம் நடக்கிறது. இரவு7க்கு கருடவாகனத்தில் சுவாமி பவனி வருகிறார்.

போன்: 99406 55506, 0435 - 2421 446.

Share  
Bookmark and Share

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2013 www.dinamalar.com. All rights reserved.