பதிவு செய்த நாள்
19
மார்
2013
10:03
சென்னை: ஹஜ் செல்ல விண்ணப்பிக்கும் தேதியை, ஒரு மாதம் நீட்டிக்க வேண்டும் என, இந்திய தேசிய முஸ்லிம் லீக் தலைவர், ஜவகர் அலி கோரிக்கை விடுத்துள்ளார். அவர், அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழகத்திலிருந்து, ஹஜ் பயணம் மேற்கொள்ள விண்ணப்பிக்கும்போது, சர்வதேச பாஸ்போர்ட்டுடன் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும் என, இந்தாண்டிலிருந்து, புதிய விதிமுறை அமல்படுத்தப்பட்டு உள்ளது. மேலும், ஹஜ் செல்ல விண்ணப்பிக்க கடைசி தேதி, இம்மாதம், 20ம் தேதி என, அறிவிக்கப்பட்டு உள்ளது. பாஸ்போர்ட்டுடன் விண்ணப்பித்த பலருக்கு, ஒப்புதல் கடிதம் கிடைக்கவில்லை. எனவே, விண்ணப்பிக்கும் கடைசி நாளை, மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டிக்க வேண்டும். 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு, சான்றிதழ்களிலிருந்து விலக்கு அளித்து, பாஸ்போர்ட் வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.