Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

முதல் பக்கம் » தகவல்கள்
இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் ஏலம்!
மார்ச் 21,2013
அ-
+
Temple images

சாத்தூர்: இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில், 2013 ஆண்டிற்கான 11 வருவாய் இனங்களுக்கு பொது ஏலம் நடந்தது. இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் தனபால் தலைமை வகித்தார். கோயில் செயல்அலுவலர் தனபாலன், பரம்பரை அறங்காவலர் குழுதலைவர் ராமமூர்த்திபூஜாரி முன்னிலை வகித்தனர். பொது ஏல முறையில் 4 இனங்களுக்கு மட்டும், 3 கோடியே 92 லட்சத்து 77 ஆயிரம் ரூபாய்க்கு பொது ஏல விடப்பட்டது. இணை ஆணையர் தனபால், ""பிரசாத ஸ்டால் நடத்தும் உரிமம் 21 லட்சம் ரூபாய்க்கும், பக்தர்கள் செலுத்தும் முடிகாணிக்கை 3 கோடியே 60 லட்சம் ரூபாய்க்கும், நவதானியங்கள் சேகரிப்புக்கு 7 லட்சத்து 10 ஆயிரம், பக்தர்கள் காணிக்கையாக வழங்கும் ஆடு,கோழி, சேவல் சேகரிக்கும் உரிமம் 4லட்சத்து 67 ஆயிரம் என, 3கோடியே 92 லட்சத்து 77 ஆயிரம் ரூபாய்க்கு, பொது ஏலம் விட்பட்டுள்ளது. ஏலம் விடாத 7 இனங்களுக்கு, மாற்று தேதி அறிவிக்கப்பட்டு பொது ஏலம் நடத்தப்படும், என்றார்.

Share  
Bookmark and Share

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2013 www.dinamalar.com. All rights reserved.