Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
குறுந்தொகை (பகுதி-7)
முதல் பக்கம் » குறுந்தொகை
குறுந்தொகை (பகுதி-8)
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 மார்
2013
01:03

குறுந்தொகை - 351. நெய்தல் - தோழி கூற்று

வளையோய் உவந்திசின் விரைவுறு கொடுந்தாள்
அளைவாழ் அலவன் கூருகிர் வரித்த
ஈர்மணல் மலிர்நெறி சிதைய இழுமென
உருமிசைப் புணரி உடைதரும் துறைவர்க்கு
உரிமை செப்பினர் நமரே விரியலர்ப்  5
புன்னை ஓங்கிய புலாலஞ் சேரி
இன்னகை ஆயத் தாரோடு
இன்னும் அற்றோஇவ் வழுங்க லூரே.  
- அம்மூவனார்.  

குறுந்தொகை - 352. பாலை - தலைவி கூற்று

நெடுநீ ராம்பல் அடைப்புறத் தன்ன
கொடுமென் சிறைய கூருகிர்ப் பறவை
அகலிலைப் பலவின் சாரல் முன்னிப்
பகலுறை முதுமரம் புலம்பப் போகும்
சிறுபுன் மாலை உண்மை  5
அறிவேன் தோழியவர்க் காணா ஊங்கே.  
- கடியலூர் உருத்திரங்கண்ணனார்

குறுந்தொகை - 353. குறிஞ்சி - தோழி கூற்று

ஆர்கலி வெற்பன் மார்புபுணை யாகக்
கோடுயர் நெடுவரைக் கவாஅற் பகலே
பாடின் அருவி ஆடுதல் இனிதே
நிரையிதழ் பொருந்தாக் கண்ணோ டிரவிற்
பஞ்சி வெண்திரிச் செஞ்சுடர் நல்லிற்  5
பின்னுவீழ் சிறுபுறந் தழீஇ
அன்னை முயங்கத் துயிலின் னாதே.  
- உறையூர் முதுகூற்றனார்.  

குறுந்தொகை - 354. மருதம் - தோழி கூற்று

நீர்நீ டாடிற் கண்ணுஞ் சிவக்கும்
ஆர்ந்தோர் வாயில் தேனும் புளிக்கும்
தணந்தனை யாயினெம் இல்லுய்த்துக் கொடுமோ
அந்தண் பொய்கை எந்தை எம்மூர்க்
கடும்பாம்பு வழங்குந் தெருவில்  5
நடுங்கஞர் எவ்வம் களைந்த எம்மே.  
- கயத்தூர்கிழார்.  

குறுந்தொகை - 355. குறிஞ்சி - தோழி கூற்று

பெயல்கண் மறைத்தலின் விசும்புகா ணலையே
நீர்பரந் தொழுகலின் நிலங்கா ணலையே
எல்லை சேறலின் இருள்பெரிது பட்டன்று
பல்லோர் துஞ்சும் பானாட் கங்குல்
யாங்குவந் தனையோ ஓங்கல் வெற்ப  5
வேங்கை கமழுமெஞ் சிறுகுடி
யாங்கறிந் தனையோ நோகோ யானே.  
- கபிலர்.  

குறுந்தொகை - 356. பாலை - செவிலி கூற்று

நிழலான் றவிந்த நீரில் ஆரிடைக்
கழலோன் காப்பக் கடுகுபு போகி
அறுசுனை மருங்கின் மறுகுபு வெந்த
வெவ்வெங் கலுழி தவ்வெனக் குடிக்கிய
யாங்கு வல்லுநள்கொல் தானே ஏந்திய  5
செம்பொற் புனைகலத் தம்பொரிக் கலந்த
பாலும் பலவென உண்ணாள்
கோலமை குறுந்தொடித் தளிரன் னோளே.  
- கயமனார்.  

குறுந்தொகை - 357. குறிஞ்சி - தோழி கூற்று

முனிபடர் உழந்த பாடில் உண்கண்
பனிகால் போழ்ந்து பணியெழில் ஞெகிழ்தோள்
மெல்லிய ஆகலின் மேவரத் திரண்டு
நல்ல என்னுஞ் சொல்லை மன்னிய
ஏனலஞ் சிறுதினை காக்குஞ் சேணோன்  5
ஞெகிழியிற் பெயர்ந்த நெடுநல் யானை
மின்படு சுடரொளி வெரூஉம்
வான்தோய் வெற்பன் மணவா ஊங்கே.  
- கபிலர்.

குறுந்தொகை - 358. முல்லை - தோழி கூற்று

வீங்கிழை நெகிழ விம்மி யீங்கே
எறிகண் பேதுற லாய்கோ டிட்டுச்
சுவர்வாய் பற்றுநின் படர்சே ணீங்க
வருவேம் என்ற பருவம் உதுக்காண்
தனியோர் இரங்கும் பனிகூர் மாலைப்  5
பல்லான் கோவலர் கண்ணிச்
சொல்லுப அன்ன முல்லைமென் முகையே.  
- கொற்றனார்.  
 
குறுந்தொகை - 359. மருதம் - தோழி கூற்று

கண்டிசிற் பாண பண்புடைத் தம்ம
மாலை விரிந்த பசுவெண் ணிலவிற்
குறுங்கால் கட்டில் நறும்பூஞ் சேக்கைப்
பள்ளி யானையின் உயிர்த்தனன் நசையிற்
புதல்வற் றழீஇயினன் விறலவன்  5
புதல்வன் தாயவன் புறங்கவைஇ யினளே.  
- பேயனார்.  

குறுந்தொகை - 360. குறிஞ்சி - தலைவி கூற்று

வெறியென உணர்ந்த வேல னோய்மருந்
தறியா னாகுதல் அன்னை காணிய
அரும்படர் எவ்வம் இன்றுநாம் உழப்பினும்
வாரற்க தில்ல தோழி சாரற்
பிடிக்கை அன்ன பெருங்குரல் ஏனல்  5
உண்கிளி கடியும் கொடிச்சிகைக் குளிரே
சிலம்பிற் சிலம்புஞ் சோலை
இலங்குமலை நாடன் இரவி னானே.  
- மதுரை ஈழத்துப் பூதன்றேவனார்.

குறுந்தொகை - 361. குறிஞ்சி - தலைவி கூற்று

அம்ம வாழி தோழி அன்னைக்
குயர்நிலை உலகமுஞ் சிறிதால் அவர்மலை
மாலைப் பெய்த மணங்கமழ் உந்தியொடு
காலை வந்த காந்தள் முழுமுதல்
மெல்லிலை குழைய முயங்கலும்  5
இல்லுய்த்து நடுதலுங் கடியா தோளே.  
- கபிலர். 

குறுந்தொகை - 362. குறிஞ்சி - தோழி கூற்று

முருகயர்ந் துவந்த முதுவாய் வேல
சினவ லோம்புமதி வினவுவ துடையேன்
பல்வே றுருவிற் சில்லவிழ் மடையொடு
சிறுமறி கொன்றிவள் நறுநுதல் நீவி
வணங்கினை கொடுத்தி யாயின் அணங்கிய  5
விண்தோய் மாமலைச் சிலம்பன்
ஒண்தார் அகலமும் உண்ணுமோ பலியே.  
- வேம்பற்றூர்க் கண்ணன் கூத்தனார்.

குறுந்தொகை - 363. பாலை - தோழி கூற்று

கண்ணி மருப்பின் அண்ணநல் லேறு
செங்கோற் பதவின் வார்குரல் கறிக்கும்
மடக்கண் மரையா நோக்கிவெய் துற்றுப்
புல்லரை உகாஅய் வரிநிழல் வதியும்
இன்னா அருஞ்சுரம் இறத்தல்  5
இனிதோ பெரும இன்றுணைப் பிரிந்தே.  
- செல்லூர்க் கொற்றனார்.  

குறுந்தொகை - 364. மருதம் - இற்பரத்தை கூற்று

அரிற்பவர்ப் பிரம்பின் வரிப்புற நீர்நாய்
வாளை நாளிரை பெறூஉம் ஊரன்
பொற்கோல் அவிர்தொடித் தற்கெழு தகுவி
எற்புறங் கூறும் என்ப தெற்றென
வணங்கிறைப் பணைத்தோள் எல்வளை மகளிர்  5
துணங்கை நாளும் வந்தன அவ்வரைக்
கண்பொர மற்றதன் கண்ணவர்
மணங்கொளற் கிவரும் மள்ளர் போரே. 
- அவ்வையார்.  

குறுந்தொகை - 365. குறிஞ்சி - தோழி கூற்று

கோடீர் இலங்குவளை நெகிழ நாளும்
பாடில கலிழ்ந்து பனியா னாவே
துன்னரும் நெடுவரைத் ததும்பிய அருவி
தன்ணென் முரசின் இமிழிசை காட்டும்
மருங்கிற் கொண்ட பலவிற்  5
பெருங்கல் நாடநீ நயந்தோள் கண்ணே. 
- மதுரை நல்வெள்ளியார்.  

குறுந்தொகை - 366. குறிஞ்சி - தோழி கூற்று

பால்வரைந் தமைத்த லல்ல தவர்வயிற்
சால்பளந் தறிதற் கியாஅம் யாரோ
வெறியாள் கூறவும் அமையாள் அதன்தலைப்
பைங்கண் மாச்சுனைப் பல்பிணி யவிழ்ந்த
வள்ளிதழ் நீலம் நோக்கி உள்ளகை  5
பழுத கண்ண ளாகிப்
பழூதன் றம்மவிவ் வாயிழை துணிவே.  
- பேரிசாத்தனார்.  

குறுந்தொகை - 367. மருதம் - தோழி கூற்று

கொடியோர் நல்கா ராயினும் யாழநின்
தொடிவிளங் கிறைய தோள்கவின் பெறீஇயர்
உவக்காண் தோழி அவ்வந் திசினே
தொய்யல் மாமழை தொடங்கலின் அவர்நாட்டுப்
பூச லாயம் புகன்றிழி அருவியின்  5
மண்ணுறு மணியின் தோன்றும்
தண்ணறுந் துறுகல் ஓங்கிய மலையே.  
- மதுரை மருதனிள நாகனார்.  

குறுந்தொகை - 368. மருதம் - தலைவி கூற்று

மெல்லிய லோயே மெல்லிய லோயே
நன்னாண் நீத்த பழிதீர் மாமை
வன்பின் ஆற்றுதல் அல்லது செப்பிற்
சொல்ல கிற்றா மெல்லிய லோயே
சிறியரும் பெரியரும் வாழும் ஊர்க்கே  5
நாளிடைப் படாஅ நளிநீர் நீத்தத்
திண்கரைப் பெருமரம் போலத்
தீதில் நிலைமை முயங்குகம் பலவே.  
- நக்கீரனார்.  

குறுந்தொகை - 369. பாலை - தோழி கூற்று

அத்த வாகை அமலை வானெற்
றரியார் சிலம்பி னரிசி யார்ப்பக்
கோடை தூக்குங் கானம்
செல்வாந் தோழி நல்கினர் நமரே.  
- குடவாயிற் கீரத்தனார்.  

குறுந்தொகை - 370. மருதம் - பரத்தை கூற்று

பொய்கை யாம்ப லணிநிறக் கொழுமுகை
வண்டுவாய் திறக்குந் தண்டுறை யூரனொடு
இருப்பி னிருமருங் கினமே கிடப்பின்
வில்லக விரலிற் பொருந்தியவன்
நல்லகஞ் சேரி னொருமருங் கினமே.  5
- வில்லகவிரலினார்.  

குறுந்தொகை - 371. குறிஞ்சி - தலைவி கூற்று

கைவளை நெகிழ்தலும் மெய்பசப் பூர்தலும்
மைபடு சிலம்பின் ஐவனம் வித்தி
அருவியின் விளைக்கும் நாடனொடு
மருவேன் தோழியது காமமோ பெரிதே.  
- உறையூர் முதுகூற்றனார்.  

குறுந்தொகை - 372. நெய்தல் - தோழி கூற்று

பனைத்தலைக், கருக்குடை நெடுமடல் குருத்தொடு மாயக்
கடுவளி தொகுத்த நெடுவெண் குப்பைக்
கணங்கொள் சிமைய வணங்குங் கானல்
ஆழிதலை வீசிய வயிர்ச்சேற் றருவிக்
கூழைபெய் எக்கர்க் குழீஇய பதுக்கை  5
புலர்பதங் கொள்ளா வளவை
அலரெழுந் தன்றிவ் வழங்க லூரே.  
- விற்றூற்று மூதெயினனார்.  

குறுந்தொகை - 373. குறிஞ்சி - தோழி கூற்று

நிலம்புடை பெயரினு நீர்தீப் பிறழினும்
இலங்குதிரைப் பெருங்கடற் கெல்லை தோன்றினும்
வெவ்வாய்ப் பெண்டிர் கௌவை அஞ்சிக்
கேடெவன் உடைத்தோ தோழி நீடுமயிர்க்
கடும்பல் ஊகக் கறைவிரல் ஏற்றை  5
புடைத்தொடு புடைஇப் பூநாறு பலவுக்கனி
காந்தளஞ் சிறுகுடிக் கமழும்
ஓங்குமலை நாடனொ டமைந்தநந் தொடர்பே.  
- மதுரைக் கொல்லம் புல்லனார்.  

குறுந்தொகை - 374. குறிஞ்சி - தோழி கூற்று

எந்தையும் யாயும் உணரக் காட்டி
ஒளித்த செய்தி வெளிப்படக் கிளந்தபின்
மலைகெழு வெற்பன் தலைவந் திரப்ப
நன்றுபுரி கொள்கையின் ஒன்றா கின்றே
முடங்கல் இறைய தூங்கணங் குரீஇ  5
நீடிரும் பெண்ணைத் தொடுத்த
கூடினும் மயங்கிய மைய லூரே.  
- உறையூர்ப் பல்காயனார்.  

குறுந்தொகை - 375. குறிஞ்சி - தோழி கூற்று

அம்ம வாழி தோழி இன்றவர்
வாரா ராயினோ நன்றே சாரற்
சிறுதினை விளைந்த வியன்கண் இரும்புனத்
திரவரி வாரின் தொண்டகச் சிறுபறை
பானாள் யாமத்துங் கறங்கும்  5
யாமங் காவலர் அவியா மாறே.  
- .......  
 
குறுந்தொகை - 376. நெய்தல் - தலைவன் கூற்று

மன்னுயிர் அறியாத் துன்னரும் பொதியிற்
சூருடை அடுக்கத் தாரங் கடுப்ப
வேனி லானே தண்ணியள் பனியே
வாங்குகதிர் தொகுப்பக் கூம்பி ஐயென
அலங்குவெயிற் பொதிந்த தாமரை  5
உள்ளகத் தன்ன சிறுவெம் மையளே.  
- படுமாத்து மோசிகொற்றனார்.  

குறுந்தொகை - 377. குறிஞ்சி - தலைவி கூற்று

மலரேர் உண்கண் மாணலந் தொலைய
வளையேர் மென்றோள் ஞெகிழ்ந்ததன் தலையும்
மாற்றா கின்றே தோழியாற் றலையே
அறிதற் கமையா நாடனொடு
செய்து கொண்டதோர் சிறுநன் னட்பே.  5
- மோசி கொற்றனார்.  

குறுந்தொகை - 378. பாலை - செவிலி கூற்று

ஞாயிறு காயாது மரநிழற் பட்டு
மலைமுதற் சிறுநெறி மணன்மிகத் தாஅய்த்
தண்மழை தலையின் றாக நந்நீத்துச்
சுடர்வாய் நெடுவேற் காளையொடு
மடமா அரிவை போகிய சுரனே.  5
- கயமனார்.  

குறுந்தொகை - 379. குறிஞ்சி - தோழி கூற்று

இன்றியாண் டையனோ தோழி குன்றத்துப்
பழங்குழி அகழ்ந்த கானவன் கிழங்கினொடு
கண்ணகன் தூமணி பெறூஉம் நாடன்
அறிவுகாழ்க் கொள்ளும் அளவைச் செறிதொடி
எம்மில் வருகுவை நீயெனப்  5
பொம்மல் ஓதி நீவி யோனே.  
-. ....  

குறுந்தொகை - 380. பாலை - தோழி கூற்று

விசும்புகண் புதையப் பாஅய் வேந்தர்
வென்றெறி முரசின் நன்பல முழங்கிப்
பெயலா னாதே வானம் காதலர்
நனிசேய் நாட்டர் நம்முன் னலரே
யாங்குச்செய் வாங்கொல் தோழி யீங்கைய  5
வண்ணத் துய்ம்மலர் உதிர
முன்னர்த் தோன்றும் பனிக்கடு நாளே.  
- கருவூர்க் கதப்பிள்ளை.  

குறுந்தொகை - 381. நெய்தல் - தோழி கூற்று

தொல்கவின் தொலைந்து தோணலஞ் சாஅய்
அல்லல் நெஞ்சமோ டல்கலும் துஞ்சாது
பசலை யாகி விளிவது கொல்லோ
வெண்குருகு நரலுந் தண்கமழ் கானற்
பூமலி பொதும்பர் நாண்மலர் மயக்கி  5
விலங்குதிரை உடைதருந் துறைவனொ
டிலங்கெயிறு தோன்ற நக்கதன் பயனே.  
- .......  

குறுந்தொகை - 382. முல்லை - தோழி கூற்று

தண்துளிக் கேற்ற பைங்கொடி முல்லை
முகைதலைத் திறந்த நாற்றம் புதல்மிசை
பூமலி தளவமொடு தேங்கமழ்பு கஞல
வம்புப் பெய்யுமால் மழையே வம்பன்று
காரிது பருவம் ஆயின்  5
வாரா ரோநம் காத லோரே.  
- குறுங்கீரனார்.  

குறுந்தொகை - 383. பாலை - தோழி கூற்று

நீயுடம் படுதலின் யான்தர வந்து
குறிநின் றனனே குன்ற நாடன்
இன்றை யளவை சென்றைக் கென்றி
கையுங் காலும் ஓய்வன அழுங்கத்
தீயுறு தளிரின் நடுங்கி  5
யாவதும் இலையான் செயற்குரி யதுவே.  
- படுமரத்து மோசிகீரனார்.  

குறுந்தொகை - 384. மருதம் - தோழி கூற்று

உழுந்துடைக் கழுந்திற் கரும்புடைப் பணைத்தோள்
நெடும்பல் கூந்தற் குறுந்தொடி மகளிர்
நலனுண்டு துறத்தி யாயின்
மிகநன் றம்ம மகிழ்நநின் சூளே.  
- ஓரம்போகியார்.

குறுந்தொகை - 385. குறிஞ்சி - தலைவி கூற்று

பலவிற் சேர்ந்த பழமார் இனக்கலை
சிலைவிற் கானவன் செந்தொடை வெரீஇச்
செருவுறு குதிரையிற் பொங்கிச் சாரல்
இருவெதிர் நீடமை தயங்கப் பாயும்
பெருவரை அடுக்கத்துக் கிழவோன் என்றும்  5
அன்றை யன்ன நட்பினன்
புதுவோர்த் தம்மவிவ் வழுங்க லூரே.  
- கபிலர்.  

குறுந்தொகை - 386. நெய்தல் - தலைவி கூற்று

வெண்மணல் விரிந்த வீததை கானல்
தண்ணந் துறைவன் தணவா ஊங்கே
வாலிழை மகளிர் விழவணிக் கூட்டும்
மாலையோ அறிவேன் மன்னே மாலை
நிலம்பரந் தன்ன புன்கணொடு  5
புலம்புடைத் தாகுதல் அறியேன் யானே.  
- வெள்ளிவீதியார்.

குறுந்தொகை - 387. முல்லை - தலைவி கூற்று

எல்லை கழிய முல்லை மலரக்
கதிர்சினந் தணிந்த கையறு மாலையும்
இரவரம் பாக நீந்தின மாயின்
எவன்கொல் வாழி தோழி
கங்குல் வெள்ளம் கடலினும் பெரிதே.  5
- கங்குல் வெள்ளத்தார்.   

குறுந்தொகை - 388. பாலை - தோழி கூற்று

நீர்கால் யாத்த நிரையிதழ்க் குவளை
கோடை ஒற்றினும் வாடா தாகும்
கவணை அன்ன பூட்டுப்பொரு தசாஅ
உமணெருத் தொழுகைத் தோடுநிரைத் தன்ன
முளிசினை பிளக்கு முன்பின் மையின்  5
யானை கைமடித் துயவும்
கானமும் இனியவாம் நும்மொடு வரினே.  
- அவ்வையார்.  

குறுந்தொகை - 389. குறிஞ்சி - தோழி கூற்று

நெய்கனி குறும்பூழ் காய மாக
ஆர்பதம் பெறுக தோழி அத்தை
பெருங்கல் நாடன் வரைந்தென அவனெதிர்
நன்றோ மகனே யென்றனென்
நன்றே போலும் என்றுரைத் தோனே.  5
- வேட்டகண்ணனார்.  

குறுந்தொகை - 390. பாலை - கண்டோர் கூற்று

எல்லும் எல்லின்று பாடுங் கேளாய்
செல்லா தீமோ சிறுபிடி துணையே
வேற்றுமுனை வெம்மையிற் சாத்துவந் திறுத்தென
வளையணி நெடுவேல் ஏந்தி
மிளைவந்து பெயரும் தண்ணுமைக் குரலே.  5
- உறையூர் முதுகொற்றனார்.  

குறுந்தொகை - 391. முல்லை - தலைவி கூற்று

உவரி யொருத்தல் உழாது மடியப்
புகரி புழுங்கிய புயனீங்கு புறவிற்
கடிதிடி உருமிற் பாம்புபை அவிய
இடியொடு மயங்கி இனிதுவீழ்ந் தன்றே
வீழ்ந்த மாமழை தழீஇப் பிரிந்தோர்  5
கையற வந்த பையுள் மாலைப்
பூஞ்சினை யிருந்த போழ்கண் மஞ்ஞை
தாஅம் நீர் நனந்தலை புலம்பக்
கூஉந் தோழி பெரும்பே தையவே.  
- பொன்மணியார்.

குறுந்தொகை - 392. குறிஞ்சி - தோழி கூற்று

அம்ம வாழியோ அணிச்சிறைத் தும்பி
நன்மொழிக் கச்ச மில்லை யவர்நாட்
டண்ணல் நெடுவரைச் சேறி யாயிற்
கடமை மிடைந்த துடவையஞ் சிறுதினைத்
துளரெறி நுண்டுகட் களைஞர் தங்கை  5
தமரின் தீராள் என்மோ அரசர்
நிரைசெல னுண்டோல் போலப்
பிரசந் தூங்கு மலைகிழ வோர்க்கே.  
- தும்பிசேர் கீரனார்.  
 
குறுந்தொகை - 393. மருதம் - தோழி கூற்று

மயங்குமலர்க் கோதை குழைய மகிழ்நன்
முயங்கிய நாடவச் சிலவே அலரே
கூகைக் கோழி வாகைப் பறந்தலைப்
பசும்பூண் பாண்டியன் வினைவ லதிகன்
களிறொடு பட்ட ஞான்றை  5
ஒளிறுவாட் கொங்கர் ஆர்ப்பினும் பெரிதே.  
- பரணர்.  

குறுந்தொகை - 394. குறிஞ்சி - தோழி கூற்று

முழந்தாள் இரும்பிடிக் கயந்தலைக் குழவி
நறவுமலி பாக்கத்துக் குறமகள் ஈன்ற
குறியிறைப் புதல்வரொடு மறுவந் தோடி
முன்னாள் இனிய தாகிப் பின்னாள்
அவர்தினைப் புனம் மேய்ந் தாங்குப்  5
பகையா கின்றவர் நகைவிளை யாட்டே.  
- குறியிரையார்.  

குறுந்தொகை - 395. பாலை - தலைவி கூற்று

நெஞ்சே நிறையொல் லாதே யவரே
அன்பின் மையின் அருள்பொருள் என்னார்
வன்கண் கொண்டு வலித்துவல் லுநரே
அரவுநுங்கு மதியினுக் கிவணோர் போலக்
களையார் ஆயினுங் கண்ணினிது படீஇயர்  5
அஞ்ச லென்மரும் இல்லை அந்தில்
அளிதோ தானே நாணே
ஆங்கவர் வதிவயின் நீங்கப் படினே.  
- ......  

குறுந்தொகை - 396. பாலை - செவிலி கூற்று

பாலும் உண்ணாள் பந்துடன் மேவாள்
விளையாடு ஆயமொடு அயர்வோ ளினியே
எளிதென உணர்ந்தனள் கொல்லோ முளிசினை
ஓமை குத்திய உயர்கோட் டொருத்தல்
வேனிற் குன்றத்து வெவ்வரைக் கவாஅன்  5
மழைமுழங்கு கடுங்குரல் ஓர்க்கும்
கழைதிரங் காரிடை அவனொடு செலவே.  
- கமயனார்.  

குறுந்தொகை - 397. நெய்தல் - தோழி கூற்று

நனைமுதிர் ஞாழற் தினைமருள் திரள்வீ
நெய்தல் மாமலர்ப் பெய்தல் போல
ஊதை தூற்றும் உரவுநீர்ச் சேர்ப்ப
தாயுடன் றலைக்கும் காலையும் வாய்விட்
டன்னா வென்னுங் குழவி போல  5
இன்னா செயினும் இனிதுதலை யளிப்பினும்
நின்வரைப் பினளென் தோழி
தன்னுறு விழுமங் களைஞரோ இலளே.  
- அம்மூவனார்.  

குறுந்தொகை - 398. பாலை - தலைவி கூற்று

தேற்றா மன்றே தோழி தண்ணெனத்
தூற்றுந் துவலைத் துயர்கூர் காலைக்
கயலே ருண்கட் கனங்குழை மகளிர்
கைபுணை யாக நெய்பெய்து மாட்டிய
சுடர்துய ரெடுப்பும் புன்கண் மாலை  5
அரும்பெறற் காதலர் வந்தென விருந்தயர்பு
மெய்ம்மலி யுவகையி னெழுதரு
கண்கலி ழுகுபனி யரக்கு வோரே.  
- பாலைபாடிய பெருங்கடுங்கோ.  

குறுந்தொகை - 399. மருதம் - தலைவி கூற்று

ஊருண் கேணி யுண்டுறைக் தொக்க
பாசி யற்றே பசலை காதலர்
தொடுவுழித் தொடுவுழி நீங்கி
விடுவுழி விடுவுழிப் பரத்த லானே.  
- பரணர்.  

குறுந்தொகை - 400. முல்லை - தலைவன் கூற்று

சேயாறு செல்வா மாயின் இடரின்று
களைகலம் காமம் பெருந்தோட் கென்று
நன்றுபுரிந் தெண்ணிய மனத்தை யாகி
முரம்புகண் உடைய வேகிக் கரம்பைப்
புதுவழிப் படுத்த மதியுடை வல்லோய்  5
இன்று தந்தனை தேரோ
நோயுழந் துறைவியை நல்க லானே.  
- பேயனார்.  

குறுந்தொகை - 401. நெய்தல் - தலைவி கூற்று

அடும்பி னாய்மலர் விரைஇ நெய்தல்
நெடுந்தொடை வேய்ந்த நீர்வார் கூந்தல்
ஓரை மகளி ரஞ்சியீர் ஞெண்டு
கடலிற் பரிக்குந் துறைவனொ டொருநாள்
நக்குவிளை யாடலுங் கடிந்தன்  5
றைதே கம்ம மெய்தோய் நட்பே.  
- அம்மூவனார்.  

 
மேலும் குறுந்தொகை »
temple news
குறைந்த அடிகளையுடைய பாட்டால் தொகுக்கப்பெற்ற நூல் ஆதலால் குறுந்தொகை எனப்பட்டது. இந்நூல் 400 பாடல்களைக் ... மேலும்
 
குறுந்தொகை - கடவுள் வாழ்த்து தாமரை புரையுங் காமர் சேவடிப்பவழத் தன்ன மேனித் திகழொளிக்குன்றி ... மேலும்
 
குறுந்தொகை - 51. நெய்தல் - தோழி கூற்று கூன்முண் முண்டகக் கூர்ம்பனி மாமலர்நூலறு முத்திற் காலொடு ... மேலும்
 
குறுந்தொகை - 101. குறிஞ்சி - தலைவன் கூற்று விரிதிரைப் பெருங்கடல் வளைஇய உலகமும்அரிதுபெறு சிறப்பிற் ... மேலும்
 
குறுந்தொகை - 151. பாலை - தலைவன் கூற்று வங்காக் கடந்த செங்காற் பேடைஎழாஅலுற வீழ்ந்தெனக் கணவற் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar