Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பரிபாடல் (பகுதி-2) பரிபாடல் (பகுதி-4)
முதல் பக்கம் » பரிபாடல்
பரிபாடல் (பகுதி-3)
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 மார்
2013
05:03

தலைமகளிரது செய்தி

வளி பொரு சேண் சிமை வரையகத்தால்  90

தளி பெருகும் தண் சினைய
பொழில் கொளக் குறையா மலர,
குளிர் பொய்கை அளறு நிறைய,
மருதம் நளி மணல் ஞெமர்ந்த
நனி மலர்ப் பெரு வழி,  95

சீறடியவர் சாறு கொள எழுந்து;
வேறுபடு சாந்தமும், வீறுபடு புகையும்,
ஆறு செல் வளியின் அவியா விளக்கமும்,
நாறு கமழ் வீயும், கூறும் இசை முழவமும்,
மணியும், கயிறும், மயிலும், குடாரியும்,  100

பிணிமுகம், உளப்படப் பிறவும், ஏந்தி;
அரு வரைச் சேராத் தொழுநர்,
கனவின் தொட்டது கை பிழையாகாது
நனவின் சேஎப்ப நின் நளி புனல் வையை
வரு புனல் அணிக எனவரம் கொள்வோரும்,  105

கரு வயிறு உறுக எனக் கடம்படுவோரும்,
செய் பொருள் வாய்க்கா எனச் செவி சார்த்துவோரும்,
ஐ அமர் அடுக என அருச்சிப்போரும்,
பாடுவார் பாணிச் சீரும், ஆடுவார் அரங்கத் தாளமும்,
மஞ்சு ஆடு மலை முழக்கும்,  110

துஞ்சாக் கம்பலைசுசுசுசுசுசு
பைஞ் சுனைப் பாஅய் எழு பாவையர்
ஆய் இதழ் உண்கண் அலர் முகத் தாமரை,
தாட் தாமரை, தோட்தமனியக் கய மலர்,
எம் கைப் பதுமம், கொங்கைக் கய முகை,  115

செவ் வாய் ஆம்பல் செல் நீர்த் தாமரை,
புனற் தாமரையொடு, புலம் வேறுபாடுறாக்
கூர் ஏயிற்றார் குவிமுலைப் பூணொடு,
மாரண் ஒப்பார் மார்பு அணி கலவி;
அரிவையர் அமிர்த பானம்  120

உரிமை மாக்கள் உவகை அமிர்து உய்ப்ப;
மைந்தர் மார்வம் வழி வந்த,
செந் தளிர் மேனியார், செல்லல் தீர்ப்ப;

பரங்குன்றை வாழ்த்தல்

என ஆங்கு,
உடம் புணர் காதலரும் அல்லாரும் கூடி,  125

கடம்பு அமர் செல்வன் கடி நகர் பேணசுசுசுசு
மறு மிடற்று அண்ணற்கு மாசிலோள் தந்தசுசுசுசு
நெறி நீர் அருவி அசும்பு உறு செல்வம்,
மண் பரிய வானம் வறப்பினும், மன்னுகமா,
தண் பரங்குன்றம்! நினக்கு.  130

பரிபாடல் - 9. செவ்வேள்

கடவுள் வாழ்த்து

பாடியவர் :: குறும்பூதனார்
இசையமைத்தவர் :: மருத்துவன் நல்லச்சுதனார்
பண் :: பாலையாழ்

முருகவேளை வாழ்த்துதல்

இரு நிலம் துளங்காமை வடவயின் நிவந்து ஓங்கி,
அரு நிலை உயர் தெய்வத்து அணங்குசால் தலை காக்கும்,
உருமுச் சூழ் சேண் சிமைசுசுசுஉயர்ந்தவர் உடம்படசுசுசுசுசு
எரி மலர்த் தாமரை இறை வீழ்த்த பெரு வாரி
விரி சடைப் பொறை ஊழ்த்து, விழு நிகர் மலர் ஏய்ப்ப,  5

தணிவுறத் தாங்கிய தனி நிலைச் சலதாரி
மணி மிடற்று அண்ணற்கு, மதி ஆரல் பிறந்தோய்! நீ.
மை இரு நூற்று இமை உண்கண் மான் மறி தோள் மணந்த ஞான்று,
ஐ-இருநூற்று மெய்ந் நயனத்தவன் மகள் மலர் உண்கண்,
மணி மழை தலைஇயென, மா வேனில் கார் ஏற்று,  10

தணி மழை தலையின்று, தன் பரங்குன்று.

தமிழது சிறப்பிற்குக் காரணம்

நான்மறை விரித்து, நல் இசை விளக்கும்
வாய்மொழிப் புலவீர்! கேண்மின், சிறந்தது;
காதற் காமம், காமத்துச் சிறந்தது;
விருப்போர் ஒத்து மெய்யுறு புணர்ச்சி:  15

புலத்தலின் சிறந்தது, கற்பே; அது தான்
இரத்தலும் ஈதலும் இவை உள்ளீடாப்
பரத்தை உள்ளதுவே: பண்புறு கழறல்,
தோள் புதிது உண்ட பரத்தை இல் சிவப்புற
நாள் அணிந்து, உவக்கும் சுணங்கறையதுவே;  20

கேள் அணங்குற மனைக் கிளந்துள, சுணங்கறை;
சுணங்கறைப் பயனும் ஊடலுள் ளதுவே.
அதனால், அகறல் அறியா அணி இழை நல்லார்
இகல் தலைக்கொண்டு துனிக்கும் தவறு இலர்; இத்
தள்ளாப் பொருள் இயல்பின் தண் தமிழ் ஆய்வந்திலார்  25

கொள்ளார், இக் குன்று பயன்.

வள்ளியும் முருகனும் சிறந்தவாறு

ஊழ் ஆரத்து ஓய் கரை நூக்கி, புனல் தந்த
காழ் ஆரத்து அம் புகை சுற்றிய தார் மார்பின்,
கேழ் ஆரம் பொற்ப வருவானைத் தொழாஅ,
வாழிய, மாயா! நின் தவறு இலை; எம் போலும்  30

கேழ் இலார்சுசுசுசு மாண் நலம் உண்கோ, திரு உடையார்
மென் தோள்மேல் அல்கி நல்கலம் இன்று?சுசுசுசு
வை எயிற்று எய்யா மகளிர் திறம் இனிப்
பெய்ய உழக்கும், மழைக் கா; மற்று ஐய!
கரையா வெந் நோக்கத்தான் கை சுட்டி, பெண்டின்  35

இகலின் இகந்தாளை, அவ் வேள் தலைக் கண்ணி
திருந்து அடி தோயத் திறை கொடுப்பானை,
வருந்தல் என, அவற்கு மார்பு அளிப்பாளை,
குறுகல் என்று ஒள்ளிழை கோதை கோலாக
இறுகிறுக யாத்துப் புடைப்ப;  40

ஒருவர் மயில் ஒருவர் ஒண் மயிலோடு ஏல,
இருவர் வான் கிளி ஏற்பில் மழலை,
செறி கொண்டைமேல் வண்டு சென்று பாய்ந்தன்றே,
வெறி கொண்டான் குன்றத்து வண்டு.

வள்ளியின் பாங்கியரும் தேவசேனையின் பாங்கியரும் இகழ்தல்

தார் தார் பிணக்குவார்; கண்ணி ஓச்சித் தடுமாறுவார்;  45

மார்பு அணி கொங்கை வார் மத்திகையாப் புடைப்பார்;
கோதை வரிப் பந்து கொண்டு எறிவார்சுசுசுசு
பேதை மட நோக்கம் பிறிதாக, ஊத
நுடங்கு நொசி நுசுப்பார்சுசுசுசுசுசுநூழில் தலைக்கொள்ள:
கயம்படு கமழ் சென்னிக் களிற்று இயல் கைம்மாறுவார்;  50

வயம்படு பரிப் புரவி மார்க்கம் வருவார்
தேர் அணி அணி கயிறு தெரிபு வருவார்
வரி சிலை வளைய மார்பு உற வாங்குவார்
வாளி வாளிகள் நிலைபெற மறலுவார்
தோள் வளை ஆழி சுழற்றுவார்சுசுசு  55

மென் சீர் மயில் இயலவர்
வாள் மிகு வய மொய்ம்பின்
வரை அகலத்தவனைசுசுசுசுவானவன் மகள்
மாண் எழில் மலர் உண்கண்
மட மொழியவர் சுசுசுசுஉடன் சுற்றி,  60

கடி சுனையுள் குளித்து ஆடுநரும்,
அறை அணிந்த அருஞ் சுனையான்
நற உண் வண்டாய் நரம்பு உளர்நரும்,
சிகை மயிலாய்த் தோகை விரித்து ஆடுநரும்;
கோகுலமாய்க் கூவுநரும்,  65

ஆகுலம் ஆகுநரும்சுசுசுசு
குறிஞ்சிக் குன்றவர் மறம் கெழு வள்ளி தமர்
வித்தகத் தும்பை விளைத்தலான், வென் வேலாற்கு
ஒத்தன்று, தண் பரங்குன்று.

வாழ்த்தி வேண்டல்

கடுஞ் சூர் மா முதல் தடிந்து அறுத்த வேல்  70

அடும் போராள! நின் குன்றின்மிசை
ஆடல் நவின்றோர் அவர் போர் செறுப்பவும்,
பாடல் பயின்றோரைப் பாணர் செறுப்பவும்,
வல்லாரை வல்லார் செறுப்பவும்,
அல்லாரை அல்லார் செறுப்பவும், ஓர் சொல்லாய்,  75

செம்மைப் புதுப் புனற்
தடாகம் ஏற்ற தண் சுனைப் பாங்கர்,
படாகை நின்றன்று;
மேஎ எகினவை;
வென்று உயர்த்த கொடி விறல் சான்றவை;  80

கற்பு இணை நெறியூடு அற்பு இணைக் கிழமை
நயத் தகு மரபின் வியத் தகு குமர!
வாழ்த்தினேம் பரவுதும், தாழ்த்துத் தலை, நினை யாம்சுசுசுசு
நயத்தலின் சிறந்த எம் அடியுறை,
பயத்தலின் சிறக்க, நாள்தொறும் பொலிந்தே.  85

பரிபாடல் - 10. வையை

(பருவம் கண்டு வன்புறை எதிர் அழிந்த தலைமகளது ஆற்றாமை கண்டு, தோழி தூது விட, சென்ற
பாணன், பாசறைக்கண், தலைமகற்குப் பருவ வரவும், வையை நீர் விழவு அணியும், ஆங்குப் பட்ட
செய்தியும், கூறியது.)

பாடியவர் :: கரும்பிள்ளைப் பூதனார்
இசையமைத்தவர் :: மருத்துவன் நல்லச்சுதனார்
பண் :: பாலையாழ்

மலைவரை மாலை அழி பெயல்சுசுசுசுசுகாலை,
செல வரை காணாக் கடல்தலைக் கூடசுசுசுசு
நில வரை அல்லல் நிழத்த, விரிந்த
பலவுறு போர்வைப் பரு மணல் மூஉய்,
வரி அரி ஆணு முகிழ் விரி சினைய  5

மாந் தீம் தளிரொடு வாழையிலை மயக்கி,
ஆய்ந்து அளவா ஓசை அறையூஉப், பறை அறையப்
போந்ததுசுசுசுசுவையைப் புனல்.

புனலாடும் பொருட்டு மகளிர் வையைக் கரை சேர்தல்

புனல் மண்டி ஆடல் புரிவான், சனம் மண்டி,
தாளித நொய்ந் நூல் சரணத்தர், மேகலை  10

ஏணிப்படுகால் இறுகிறுகத் தாள் இடீஇ,
நெய்த்தோர் நிற அரக்கின் நீரெக்கி யாவையும்
முத்து நீர்ச் சாந்து அடைந்த மூஉய்த் தத்தி;
புக அரும் பொங்குஉளைப் புள் இயல் மாவும்,
மிக வரினும் மீது இனிய வேழப் பிணவும்,  15

அகவரும் பாண்டியும், அத்திரியும், ஆய் மாச்
சகடமும், தண்டு ஆர் சிவிகையும், பண்ணி;
வகை வகை ஊழ் ஊழ் கதழ்பு மூழ்த்து ஏறி;
முதியர், இளையர்: முகைப் பருவத்தர்,
வதி மண வம்பு அலர் வாய் அவிழ்ந்தன்னார்சுசுசுசு  20

இரு திரு மாந்தரும் இன்னினியோரும்சுசுசுசுசு
விரவு நரையோரும் வெறு நரையோரும்சுசுசுசுசு
பதிவத மாதர், பரத்தையர்; பாங்கர்;
அதிர் குரல் வித்தகர் ஆக்கிய தாள
விதி கூட்டிய இய மென் நடை போல,  25

பதி எதிர் சென்று, பரூஉக் கரை நண்ணிசுசுசுசுசு

கரை சேர்ந்த மகளிர் செயல்

(அலர்வாய் அவிழ்ந்தன்ன பருவத்தையுடைய கற்புடைமகளிர் பரத்தையர் இவர்களின் செயல்)


நீர் அணி காண்போர்; நிரை மாடம் ஊர்குவோர்;
பேர் அணி நிற்போர்; பெரும் பூசல் தாக்குவோர்;
மா மலி ஊர்வோர்; வயப் பிடி உந்துவோர்;
வீ மலி கான் யாற்றின் துருத்தி குறுகி,  30

தாம் வீழ்வார் ஆகம் தழுவுவோர்; தழுவு எதிராது,
யாமக் குறை ஊடல் இன் நசைத் தேன் நுகர்வோர்;
காமக் கணிச்சியால் கையறவு வட்டித்து,
சேமத் திரை வீழ்த்து சென்று, அமளி சேர்குவோர்:

முகைப் பருவத்து மகளிரின் செயல்கள்

தாம் வேண்டு காதற் கணவர் எதிர்ப்பட,  35

பூ மேம்பாடு உற்ற புனை சுரும்பின், சேம
மட நடைப் பாட்டியர்த் தப்பி, தடை இறந்து,
தாம் வேண்டும் பட்டினம் எய்திக் கரை சேரும்
ஏழுறு நாவாய் வரவு எதிர்கொள்வார்போல்,
யாம் வேண்டும் வையைப் புனல் எதிர்கொள் கூடல்சுசுசுசுசு  40

களிறு பிடிகளின் ஒத்த அன்பு

ஆங்க அணி நிலை மாடத்து அணி நின்ற பாங்காம்
மடப் பிடி கண்டு, வயக் கரி மால் உற்று,
நலத்த நடவாது நிற்ப; மடப் பிடி,
அன்னம் அனையாரோடு ஆயா நடை, கரிமேல்
செல் மனம் மால் உறுப்ப, சென்று; எழில் மாடத்துக்  45

கை புனை கிளர் வேங்கை காணிய வெருவுற்று,
மை புரை மடப் பிடி, மட நல்லார் விதிர்ப்புற,
செய் தொழில் கொள்ளாது, மதி செத்துச் சிதைதர;
கூம் கை மத மாக் கொடுந் தோட்டி கைந் நீவி
நீங்கும் பதத்தால், உருமுப் பெயர்த்தந்து  50

வாங்கி, முயங்கி வயப் பிடி கால்கோத்து,
சிறந்தார் நடுக்கம் சிறந்தார் களையல்சுசுசுசுசுசு
இதையும் களிறும் பிணையும் இரியச்
சிதையும் கலத்தைப் பயினான் திருத்தும்
திசை அறி நீகானும் போன்ம்.  55

மகளிர், மைந்தர் இவர்கள் செயல்

பருக் கோட்டு யாழ்ப் பக்கம் பாடலோடு ஆடல்
அருப்பம் அழிப்ப, அழிந்த மனக் கோட்டையர்,
ஒன்றோடு இரண்டா முன்தேறார், வென்றியின்,
பல் சனம் நாணிப் பதைபதைப்புசுசுசுசுசுமன்னவர்
தண்டம் இரண்டும் தலைஇத் தாக்கி நின்றவை  60

ஒன்றியும், உடம்பாடு ஒலி எழுதற்கு அஞ்சி,
நின்ற நிகழ்ச்சியும் போன்ம்.
காமம் கனைந்து எழ, கண்ணின் களி எழ,
ஊர் மன்னும் அஞ்சி ஒளிப்பாரவர் நிலைசுசுசுசுசு
கள்ளின் களி எழக் காத்தாங்கு, அலர் அஞ்சி,  65

உள்ளம் உளை எழ, ஊக்கத்தான் உள் உள்
பரப்பி மதர் நடுக்கிப் பார் அலர் தூற்றக்
கரப்பார், களி மதரும் போன்ம்.
கள்ளொடு காமம் கலந்து, கரை வாங்கும்
வெள்ளம் தரும், இப் புனல்.  70

மகளிரது நீர் விளையாட்டு

புனல் பொருது மெலிந்தார் திமில் விட,
கனல் பொருத அகிலின் ஆவி கா எழ,
நகில் முகடு மெழுகிய அளறு மடை திறந்து
திகை முழுது கமழ, முகில் அகடு கழி மதியின்
உறை கழி வள்ளத்து உறு நறவு வாக்குநர்,  75

அரவு செறி உவவு மதியென அங்கையில் தாங்கி,
ஏறி மகர வலயம் அணி திகழ் நுதலியர்,
மதி உண் அரமகளென, ஆம்பல் வாய் மடுப்ப;
மீப்பால் வெண் துகில் போர்க்குநர்; பூப் பால்
வெண் துகில் சூழ்ப்பக் குழல் முறுக்குநர்;  80

செங் குங்குமச் செழுஞ் சேறு,
பங்கம் செய் அகில் பல பளிதம்,
மறுகுபட அறை புரை அறு குழவியின்
அவி அமர் அழலென அரைக்குநர்;
நத்தொடு, நள்ளி, நடை இறவு, வய வாளை,  85

வித்தி அலையில், விளைக! பொலிக! என்பார்;
இல்லது நோக்கி, இளிவரவு கூறாமுன்,
நல்லது வெகி, வினை செய்வார்;
மண் ஆர் மணியின் வணர் குரல் வண்டு ஆர்ப்ப,
தண் அம் துவர் பல ஊட்டிச் சலம் குடைவார்;  90

எண்ணெய் கழல இழை துகள் பிசைவார்;
மாலையும் சாந்தும் மதமும் இழைகளும்,
கோலம் கொள, நீர்க்குக் கூட்டுவார்; அப் புனல்
உண்ணா நறவினை ஊட்டுவார்; ஒண் தொடியார்
வண்ணம் தெளிர, முகமும் வளர் முலைக்  95

கண்ணும் கழியச் சிவந்தன; அன்ன வகை
ஆட்டு அயர்ந்துசுசுசுசுசுஅரி படும் ஐ விரை மாண் பகழி
அரம் தின் வாய் போன்ம் போன்ம் போன்ம்சுசுசுசுசுசுசுசுசுசுசு
பின்னும், மலர்க் கண் புனல்

புனல் விளையாட்டால் மெலியாத மைதர் செயல்

தண்டித் தண்டின் தாய்ச் செல்வாரும்,  100

கண்டல் தண் தாது திரை நுரை தூவாரும்,
வெய்ய திமிலின் விரை புனலோடு ஓய்வாரும்,
மெய்யது உழவின் எதிர் புனல் மாறு ஆடிப்
பைய விளையாடுவாரும், மென் பாவையர்
செய்த பூஞ் சிற்றடிசில் இட்டு உண்ண ஏற்பார்,  105

இடுவார் மறுப்பார் சிறுகு இடையார்
பந்தும் கழங்கும் பல களவு கொண்டு ஓடி,
அம் தண் கரை நின்று பாய்வாராய், மைந்தர்
ஒளிறு இலங்கு எகொடு வாள் மாறு உழக்கி,
களிறு போர் உற்ற களம்போல, நாளும்  110

தெளிவு இன்று, தீம் நீர்ப் புனல்.

புனலாடி மீண்டவாறு

மதி மாலை மால் இருள் கால் சீப்ப, கூடல்
வதி மாலை, மாறும் தொழிலான், புது மாலை
நாள் அணி நீக்கி, நகை மாலைப் பூ வேய்ந்து,
தோள் அணி, தோடு, சுடர் இழை, நித்திலம்;  115

பாடுவார் பாடல், பரவல், பழிச்சுதல்,
ஆடுவார் ஆடல், அமர்ந்த சீர்ப் பாணி,
நல்ல கமழ் தேன் அளி வழக்கம், எல்லாமும்,
பண் தொடர் வண்டு பரிய எதிர் வந்து ஊத,
கொண்டிய வண்டு கதுப்பின் குரல் ஊத,  120

தென் திசை நோக்கித் திரிதர்வாய்; மண்டு கால் சார்வா,
நளிர் மலைப் பூங்கொடித் தங்குபு உகக்கும்
பனி வளர் ஆவியும் போன்ம், மணி மாடத்து
உள் நின்று தூய பனிநீருடன் கலந்து,
கால் திரிய ஆர்க்கும் புகை.  125

வையையை வாழ்த்துதல்

இலம்படு புலவர் ஏற்ற கை ஞெமரப்
பொலம் சொரி வழுதியின், புனல் இறை பரப்பி,
செய்யில் பொலம் பரப்பும் செய் வினை ஓயற்கசுசுசுசு
வருந்தாது வரும் புனல் விருந்து அயர் கூடல்,
அருங் கறை அறை இசை வயிரியர், உரிமை  130

ஒருங்கு அமர் ஆயமொடு, ஏத்தினர் தொழவே.


பரிபாடல் - 11. வையை

(வரைவு மலிந்த தோழி, கன்னிப் பருவத்துத் தைந் நீராடத் தவம் தலைப்பட்டேம்
என வையையை நோக்கி, தலைமகன் கேட்ப, சொல்லியது.)

பாடியவர் :: நல்லந்துவனார்
இசையமைத்தவர் :: நாகனார்
பண் :: பாலையாழ்


மழை பொழிய வையையில் நீர் பொருகி ஓடுதல்

விரி கதிர் மதியமொடு, வியல் விசும்பு, புணர்ப்ப,
எரி, சடை, எழில் வேழம், தலையெனக் கீழ் இருந்து,
தெரு இடைப்படுத்த மூன்று ஒன்பதிற்று இருக்கையுள்சுசுசு
உருகெழு வெள்ளி வந்து ஏற்றியல் சேர,
வருடையைப் படிமகன் வாய்ப்ப, பொருள் தெரி  5

புந்தி மிதுனம் பொருந்த, புலர் விடியல்
அங்கி உயர் நிற்ப, அந்தணன் பங்குவின்
இல்லத் துணைக்கு உப்பால் எய்த, இறை யமன்
வில்லின் கடை மகரம் மேவ, பாம்பு ஒல்லை
மதியம் மறைய, வரு நாளில்சுசுசுசுவாய்ந்த  10

பொதியில் முனிவன் புரை வரைக் கீறி
மிதுனம் அடைய, விரி கதிர் வேனில்
எதிர் வரவு மாரி இயைக என இவ் ஆற்றால்
புரை கெழு சையம் பொழி மழை தாழ,
நெரிதரூஉம் வையைப் புனல்.  15

தோழி திருமதத் துறையின் சிறப்புக் கூறுதல்

வரையன புன்னாகமும்,
கரையன சுரபுன்னையும்,
வண்டு அறைஇய சண்பக நிரை, தண் பதம்
மனைமாமரம், வாள்வீரம்,
சினை வளர் வேங்கை, கணவிரி காந்தள்,  20

தாய தோன்றி தீயென மலரா,
ஊதை அவிழ்த்த உடை இதழ் ஒள் நீலம்,
வேய் பயில் சோலை அருவி தூர்த்தரப்
பாய் திரை உந்தித் தருதலான்சுசுசுசுஆய் கோல்
வயவர் அரி மலர்த் துறை என்கோ?  25

அரி மலர் மீப் போர்வை, ஆரம் தாழ் மார்பின்,
திரை நுரை மென் பொகுட்டுத் தேம் மணச் சாந்தின்
அரிவையது தானை என்கோ? கள் உண்ணூஉப்
பருகு படி மிடறு என்கோ?சுசுசுசுபெரிய
திருமருத நீர்ப் பூந் துறை.  30

கண்டார் கூற்று

ஆம் நாள் நிறை மதி அலர்தரு பக்கம் போல்,
நாளின், நாளின், நளி வரைச் சிலம்பு தொட்டு,
நிலவுப் பரந்தாங்கு, நீர் நிலம் பரப்பி,
உலகு பயம் பகர; ஓம்பு பெரும் பக்கம்
வழியது பக்கத்து அமரர் உண்டி  35

மதி நிறைவு அழிவதின், வரவு சுருங்க;
எண் மதி நிறை, உவா இருள் மதி போல
நாள் குறைபடுதல் காணுநர் யாரே?
சேண் இகந்து கல் ஊர்ந்த மாண் இழை வையை!
வயத் தணிந்து ஏகு, நின் யாணர் இறு நாள் பெற!  40

மா மயில் அன்னார், மறையில் புணர் மைந்தர்,
காமம் கள விட்டு, கைகொள் கற்பு உற்றென,
மல்லல் புனல் வையை! மா மலை விட்டு, இருத்தல்
இல்லத்து நீ தனிச் சேறல் இளிவரல்:
என ஆங்குசுசுசுசுசுசுசு  45

கடை அழிய நீண்டு அகன்ற கண்ணாளைக் காளை
படையொடும் கொண்டு பெயர்வானைச் சுற்றம்
இடை நெறித் தாக்குற்றது ஏய்ப்ப, அடல் மதுரை
ஆடற்கு நீர் அமைந்தது, யாறு

வையை போர்க்களத்தை ஒத்தல்

ஆற்று அணி, வெள் வாள் விதிர்ப்போர், மிளிர் குந்தம் ஏந்துவோர்,  50

கொள்வார் கோல் கொள்ளக் கொடித் திண் தேர் ஏறுவோர்,
புள் ஏர் புரவி பொலம் படைக் கைம்மாவை
வெள்ள நீர் நீத்தத்துள் ஊர்பு ஊர்பு உழக்குநரும்,
கண் ஆரும் சாயற் கழித் துரப்போரை
வண்ண நீர் கரந்த வட்டு விட்டு எறிவோரும்,  55

மணம் வரு மாலையின் வட்டிப்போரைத்
துணி பிணர் மருப்பின் நீர் எக்குவோரும்,
தெரி கோதை நல்லார் தம் கேளிர்த் திளைக்கும்
உருகெமு தோற்றம் உரைக்குங்கால், நாளும்
பொரு களம் போலும் தகைத்தேசுசுசுசுபரி கவரும்  60

பாய் தேரான் வையை அகம்.

இளவேனிற் காலத்து ஆடல்
நீர் அணி வெறி செறி மலர் உறு கமழ் தண்
தார் வரை அகலத்து, அவ் ஏர் அணி நேர் இழை
ஒளி திகழ் தகை வகை செறி பொறி
புனை வினைப் பொலங் கோதையவரொடு,  65

பாகர் இறை வழை மது நுகர்பு, களி பரந்து,
நாகரின் நல் வள வினை வயவு ஏற நளி புணர்மார்,
காரிகை மது ஒருவரின் ஒருவர் கண்ணின் கவர்புற,
சீர் அமை பாடற் பயத்தால் கிளர் செவி தெவி,
உம்பர் உறையும் ஒளி கிளர் வான் ஊர்பு ஆடும்  70

அம்பி கரவா வழக்கிற்றே, ஆங்கு அதை
கார் ஒவ்வா வேனில் கலங்கித் தெளிவரல்,
நீர் ஒவ்வா வையை! நினக்கு.

தைந் நீராடல்

கனைக்கும் அதிகுரல் கார் வானம் நீங்க,
பனிப் படு பைதல் விதலைப் பருவத்து,  75

ஞாயிறு காயா நளி மாரிப் பின் குளத்து,
மா இருந் திங்கள் மறு நிறை ஆதிரை
விரிநூல் அந்தணர் விழவு தொடங்க,
புரி நூல் அந்தணர் பொலம் கலம் ஏற்ப,
வெம்பாதாக, வியல் நில வரைப்பு! என  80

அம்பா ஆடலின் ஆய் தொடிக் கன்னியர்,
முனித் துறை முதல்வியர் முறைமை காட்ட,
பனிப் புலர்பு ஆடி, பரு மணல் அருவியின்
ஊதை ஊர்தர, உறை சிறை வேதியர்
நெறி நிமிர் நுடங்கு அழல் பேணிய சிறப்பின்,  85

தையல் மகளிர் ஈர் அணி புலர்த்தர,
வையை! நினக்கு மடை வாய்த்தன்று.
மையாடல் ஆடல் மழ புலவர் மாறு எழுந்து,
பொய் ஆடல் ஆடும் புணர்ப்பின் அவர், அவர்
தீ எரிப் பாலும் செறி தவம் முன் பற்றியோ,  90

தாய் அருகா நின்று தவத் தைந் நீராடுதல்?
நீ உரைத்தி, வையை நதி!

மகளிர் செயல்கள்

ஆயிடை, மா இதழ் கொண்டு, ஓர் மட மாதர் நோக்கினாள்,
வேய் எழில் வென்று வெறுத்த தோள்; நோக்கி,
சாய் குழை பிண்டித் தளிர் காதில், தையினாள்;  95

பாய் குழை நீலம் பகலாகத் தையினாள்;
குவளைக் குழைக்காதின் கோலச் செவியின்
இவள் செரீஇ, நான்கு விழி படைத்தாள் என்றுசுசுசுசு
நெற்றி விழியா நிறை திலகம் இட்டாளே,
கொற்றவை கோலம் கொண்டு, ஒர் பெண்.  100

பவள வளை செறித்தாட் கண்டு, அணிந்தாள், பச்சைக்
குவளைப் பசுந் தண்டு கொண்டு.
கல்லகாரப் பூவால் கண்ணி தொடுத்தாளை,
நில்லிகா! என்பாள்போல், நெய்தல் தொடுத்தாளேசுசுசுசுசு
மல்லிகா மாலை வளாய்.  105

மகளிர் கருத்தும், வேண்டுகோளும்

தண்டு தழுவா, தாவு நீர் வையையுள்,
கண்ட பொழுதில், கடும் புனல் கை வாங்க,
நெஞ்சம் அவள் வாங்க, நீடு புணை வாங்க,
நேரிழை நின்றுழிக் கண் நிற்ப, நீர் அவன்
தாழ்வுழி உய்யாது தான் வேண்டும் ஆறு உய்ப்ப;  110

ஆயத்துடன் நில்லாள் ஆங்கு அவன் பின் தொடரூஉ,
தாய் அத் திறம் அறியாள், தாங்கி, தனிச் சேறல்;
ஆயத்தில் கூடு எந்று அரற்றெடுப்பத் தாக்கிற்றேசுசுசுசு
சேய் உற்ற கார் நீர் வரவு.
நீ தக்காய், தைந் நீர்! நிறம் தெளிந்தாய் என்மாரும்,  115

 கழுத்து அமை கை வாங்காக் காதலர்ப் புல்ல,
விழுத் தகை பெறுக! என வேண்டுதும் என்மாரும்,
பூ வீழ் அரியின் புலம்பப் போகாது,
யாம் வீழ்வார், ஏமம் எய்துக! என்மாரும்,
 கிழவர் கிழவியர் என்னாது, ஏழ்காறும்,  120

மழ ஈன்று மல்லற் கேள் மன்னுக! என்மாரும்சுசுசுசுசு

ஒருவன் உவந்தவை காட்டுதல்

கண்டார்க்குத் தாக்கு அணங்கு, இக் காரிகை; காண்மின்:
பண்டாரம், காமன் படை, உவள் கண்; காண்மின்:
நீல் நெய் தாழ் கோதையவர் விலக்க நில்லாது,
பூ ஊது வண்டினம் யாழ் கொண்ட கொளை கேண்மின்:  125

கொளைப் பொருள் தெரிதரக் கொளுத்தாமல், குரல் கொண்ட
கிளைக்கு உற்ற உழைச் சுரும்பின் கேழ் கெழு பாலை இசை ஒர்மின்:
பண் கண்டு திறன் எய்தாப் பண் தாளம் பெறப் பாடி,
கொண்ட இன் இசைத் தாளம் கொளை சீர்க்கும் விரித்து ஆடும்
தண் தும்பியினம் காண்மின்: தான் வீழ் பூ நெரித்தாளை  130

முனை கெழு சின நெஞ்சின் முன் எறிந்து, பின்னும்,
கனை வரல் ஒரு தும்பி காய் சினத்து இயல் காண்மின்.
என ஆங்குசுசுசுசுசுசுசுசு
தலைமகன் கேட்ப, தோழி வையையை நோக்கிக் கூறுதல்
இன்ன பண்பின் நின் தைந் நீராடல்சுசுசுசுசுசுசு
மின் இழை நறு நுதல் மகள் மேம்பட்ட  135

கன்னிமை கனியாக் கைக்கிளைக் காம
இன் இயல் மாண் தேர்ச்சி இசை பரிபாடல்சுசுசுசுசு
முன் முறை செய் தவத்தின் இம் முறை இயைந்தேம்;
மறு முறை அமையத்தும் இயைக!
நறு நீர் வையை நயத் தகு நிறையே!  140

பரிபாடல் - 12. வையை

(கார்ப் பருவத்து வையை நீர் விழவணியில் பல் வேறு வகைப்பட்ட இன்பம் கூறி, இல் வகைப்பட்ட
இன்பத்தை உடைய நின்னையும் நினைத்திலர் என, வையையை நோக்கி, தலைமகன் கேட்ப, தோழி
இயற்பழித்தது.)

பாடியவர் :: நல்வழுதியார்
இசையமைத்தவர் :: நன்னாகனார்
பண் :: பாலையாழ்

வையையில் கடல்போல் நீர் பெருகி வருதல்

வளி பொரு மின்னொடு வான் இருள் பரப்பி,
விளிவு இன்று, கிளையொடு மெல் மலை முற்றி,
தளி பொழி சாரல் ததர் மலர் தாஅய்;
ஒளி திகழ் உத்தி உருகெழு நாகம்,
அகரு, வழை, ஞெமை, ஆரம், இனைய  5

தகரமும், ஞாழ்லும், தாரமும், தாங்கி,
நளி கடல் முன்னியது போலும், தீம் நீர்
வளி வரல் வையை வரவு.

புனல் வரவு காண மகளிர் சென்ற வகை

வந்து மதுரை மதில் பொரூஉம், வான் மலர் தாஅய்,
அம் தண் புனல் வையை யாறு எனக் கேட்டு,  10

மின் அவிர் ஒளி இழை வேயு மோரும்,
பொன் அடர்ப் பூம் புனை திருத்துவோரும்,
அகில்கெழு சாந்தம் மாற்றி ஆற்றப்
புகைகெழு சாந்தம் பூசுவோரும்,
கார் கொள் கூந்தல் கதுப்பு அமைப்போரும்,  15

வேர் பிணி பல் மலர் வேயுமோரும்,
புட்டகம் பொருந்துவ புனைகுவோரும்,
கட்டிய கயில் அணி காழ் கொள்வோரும்;
வாச நறு நெய் ஆடி, வான் துகள்
மாசு அறக் கண்ணாடி வயக்கி, வண்ணமும்  20

தேசும் ஒளியும் திகழ நோக்கி,
வாச மணத் துவர் வாய்க் கொள்வோரும்;
இடு புணர் வளையொடு தொடு தோள்வளையார்,
கட்டு வடக் கழலினர், மட்டு மாலையர்,
ஓசனை கமழும் வாச மேனியர்,  25

மட மா மிசையோர்,
பிடிமேல் அன்னப் பெரும் படை அனையோர்சுசுசுசுசுசு

நீர் வரவு காணச் சென்ற மைந்தர் செயல்

கடு மா கடவுவோரும், களிறுமேல் கொள்வோரும்,
வடி மணி நெடுந் தேர் மா முள் பாய்க்குநரும்,
விரைபு விரைபு மிகை மிகை ஈண்டி,  30

ஆடல் தலைத்தலை சிறப்ப, கூடல்
உரைதர வந்தன்று, வையை நீர்; வையைக்
கரை தர வந்தன்று, காண்பவர் ஈட்டம்;
நிவந்தது, நீத்தம் கரைமேலா: நீத்தம்
கவர்ந்தது போலும், காண்பவர் காதல்.  35

கண்டவர் காணவருவார்க்கு அங்கே தாம் கண்டவற்றைக் கூறல்
கூடினோர் மொழிகள் முற்றும் கேட்கப்படாமைக்குக் காரணம் உரைத்தல்

முன் துறை நிறை அணி நின்றவர் மொழி மொழி
ஒன்று அல, பலபல உடன் எழுந்தன்று; அவை
எல்லாம் தெரியக் கேட்குநர் யார்? அவை
கில்லா; கேள்வி கேட்டன சிலசில:
ஒத்த குழலின் ஒலி எழ முழவு இமிழ்  40

மத்தரி தடாரி தண்ணுமை மகுளி
ஒத்து அளந்து; சீர் தூக்கி; ஒருவர் பிற்படார்;
நித்தம் திகழும் நேர் இறை முன்கையால்
அத் தக அரிவையார் அளத்தல் காண்மின்.

கேட்டன கூறல்

நாணாள்கொல்சுசுசுசுசுசுதோழி! நயன் இல் பரத்தையின்  45

தோள் நலம் உண்டு, துறந்தான் என, ஒருத்தி
யாணர் மலி புனல் நீத்தத்து இரும் பிடி
சேண வெரிநின் சிறந்தானோடு ஏறினாள்,
நாணுக் குறைவு இலள்; நங்கை மற்று? என்மரும்,
கோட்டியுள் கொம்பர் குவி முலை நோக்குவோன்  50

ஓட்டை மனவன்; உரம் இலி என்மரும்,
சொறிந்ததூஉம் சொற்றதூஉம் பற்றாள்; நிறம் திரிந்தாள்;
நெஞ்சத்தை நீத்தாள், நெறி செல்வான் பின்: நிறை
அஞ்சிக் கழியாமோ, அன்பு உற்றால்? என்மரும்,
பூண் ஆரம் நோக்கிப் புணர் முலை பார்த்தான், உவன்;  55

நாணாள் அவனை, இந் நாரிகை என்மரும்சுசுசுசுசு
கண்டவர் காண வருவார்க்கு உவந்தவற்றைக் காட்டல்
அமிர்து அன நோக்கத்து அணங்கு ஒருத்தி பார்ப்ப,
கமழ் கோதை கோலாப் புடைத்து, தன் மார்பில்
இழையினைக் கை யாத்து, இறுகிறுக்கி வாங்கி,
பிழையினை என்ன, பிழை ஒன்றும் காணான்,  60

தொழுது பிழை கேட்கும் தூயவனைக் காண்மின்.
பார்த்தாள், ஒருத்தி நினை என, பார்த்தவளைப்
பொய்ச் சூளாள் என்பது அறியேன், யான் என்று இரந்து,
மெய்ச் சூள் உறுவானை, மெலியல்,  பொய்ச் சூள் என்று,
ஒல்லுவ சொல்லாது, உரை வழுவச் சொல்ல;  65

உறைத்தும் செறுத்தும் உணர்த்துவானைப்
புல்லாது ஊடிப் புலந்து நின்றவள்
பூ எழில் வண்ண நீர் பூரித்த வட்டு எறிய,
வேல் எழில் உண்கண் எறி நோக்கம் பட்ட புண்
பாய் குருதி சோர, பகை இன்று உளம் சோர,  70

நில்லாது நீங்கி நிலம் சோர; அல்லாந்து
மல் ஆர் அகலம் வடு அஞ்சி, மம்மர் கூர்ந்து,
எல்லாத் துனியும் இறப்ப, தன் காதலன்
நல் ஏர் எழில் ஆகம் சேர்வித்தல், எஞ்ஞான்றும்
வல்லதால், வையைப் புனல்.  75

என ஆங்குசுசுசுசுசுசு
மல்லிகை, மௌவல், மணம் கமழ் சண்பகம்,
அல்லி, கழுநீர், அரவிந்தம், ஆம்பல்,
குல்லை, வகுளம், குருக்கத்தி, பாதிரி,
நல் இணர் நாகம், நறவம், சுரபுன்னை,  80

எல்லாம் கமழும் இரு சார் கரை கலிழ;
தேறித் தெளிந்து, செறி இருள் மால் மலை;
பாறைப் பரப்பில் பரந்த சிறை நின்று;
துறக்கத்து எழிலைத் தன் நீர் நிழல் காட்டும்:
கார் அடு காலை, கலிழ் செங் குருதித்தேசுசுசுசு  85

போர் அடு தானையான் யாறு
சுடு நீர் வினைக் குழையின் ஞாலச் சிவந்த
கடி மலர்ப் பிண்டி தன் காதில் செரீஇ,
விடு மலர்ப் பூங் கொடி போல நுடங்கி,
அடிமேல் அடிமேல் ஒதுங்கி, தொடி முன்கைக்  90

காரிகை ஆகத் தன் கண்ணி திருத்தினாள்,
நேர் இறை முன்கை நல்லவள்; கேள் காண்மின்.

நீர்விழவின் சிறப்பு

துகில் சேர் மலர் போல், மணி நீர் நிறைந்தன்று ;
புனல் என, மூதூர் மலிந்தன்று, அவர் உரை ;
உரையின் உயர்ந்தன்று, கவின்  95

போர் ஏற்றன்று, நவின்று ; தகரம்
மார்பு அழி சாந்தின் மணல் அளறு பட்டன்று ;
துகில் பொசி புனலின், கரை கார் ஏற்றன்று
விசும்பு கடி விட்டன்று, விழவுப் புனல் ஆங்க.

வையையை வாழ்த்துதல்

இன்பமும், கவினும், அழுங்கல் மூதூர்,
நன்பல நன்பல நன்பல--வையை!--
நின் புகழ் கொள்ளாது, இம் மலர் தலை உலகே.  100

பரிபாடல் - 13. திருமால்

பாடியவர் :: நல்லெழுதியார்
இசையமைத்தவர் :: பெயர் அறியப்படவில்லை
பண் :: நோதிறம்

கடவுள் வாழ்த்து

திருமாலைத் தொழுவார் பெறும் பேறு

மணி வரை ஊர்ந்த மங்குல் ஞாயிற்று
அணி வனப்பு அமைந்த பூந் துகில், புனை முடி,
இறு வரை இழிதரும் பொன் மணி அருவியின்
நிறனொடு மாறும் தார், புள்ளுப் பொறி புனை கொடி,
விண் அளி கொண்ட வியன் மதி அணி கொளத்  5

தண் அளி கொண்ட அணங்குடை நேமி மால்!
பருவம் வாய்த்தலின் இரு விசும்பு அணிந்த
இரு வேறு மண்டிலத்து இலக்கம் போல,
நேமியும் வளையும் ஏந்திய கையாந்--
கருவி மின் அவிர் இலங்கும் பொலம் பூண்,  10

அருவி உருவின் ஆரமொடு, அணிந்த நின்
திரு வரை அகலம் --தொழுவோர்க்கு
உரிது அமர் துறக்கமும் உரிமை நன்கு உடைத்து.

எங்குமாய் எல்லாமாய் நிறைந்த பெருமை

சுவைமை, இசைமை, தோற்றம், நாற்றம், ஊறு,
அவையும் நீயே, அடு போர் அண்ணால்!  15

அவைஅவை கொள்ளும் கருவியும் நீயே;
முந்து யாம் கூறிய ஐந்தனுள்ளும்,
ஒன்றனில் போற்றிய விசும்பும் நீயே;
இரண்டின் உணரும் வளியும் நீயே;
மூன்றின் உணரும் தீயும் நீயே;  20

நான்கின் உணரும் நீரும் நீயே;
அதனால், நின் மருங்கின்று--மூ-ஏழ் உலகமும்,
மூலமும், அறனும், முதன்மையின் இகந்த
காலமும், விசும்பும், காற்றொடு கனலும்  25

பல்வேறு தோற்றத்துடன் விளங்கும் ஒரு முதல்வன்

தன் உரு உறழும் பாற்கடல் நாப்பண்,
மின் அவிர் சுடர் மணி ஆயிரம் விரித்த
கவை நா அருந் தலைக் காண்பின் சேக்கைத்
துளவம் சூடிய அறிதுயிலோனும்--
மறம் மிகு மலி ஒலி மாறு அடி தானையால்,  30

திறன் இகந்து வரூஉம் அவர் உயிர் அகற்றும்
விறல் மிகு வலி ஒலி பொலிபு அகழ் புழுதியின்,
நிறன் உழும் வளை வாய் நாஞ்சிலோனும்--
நானிலம் துளக்கு அற முழு முதல் நாற்றிய
பொலம் புனை இதழ் அணி மணி மடற் பேர் அணி  35

இலங்கு ஒளி மருப்பின் களிறும் -- ஆகி,
மூஉரு ஆகிய தலைபிரி ஒருவனை!

புகழ்ந்து போற்றுதல்

படர் சிறைப் பல் நிறப் பாப்புப் பகையைக்
கொடியெனக் கொண்ட கோடாச் செல்வனை;
ஏவல் இன் முது மொழி கூறும்,  40

சேவல் ஓங்கு உயர் கொடிச் செல்வ! நல் புகழவை;
கார், மலர்ப் பூவை, கடலை, இருள், மணி,
அவை ஐந்தும் உறழும் அணி கிளர் மேனியை;
வலம்புரி, வாய்பொழி, அதிர்பு வான், முழக்குச் செல்,
அவை நான்கும் உறழும்--அருள், செறல், வயின் மொழி;  45

முடிந்ததும், முடிவதும், முகிழ்ப்பதும், அவை மூன்றும்
கடந்து, அவை அமைந்த கழலின் நிழலவை;
இருமை வினையும் இல, ஏத்துமவை;
ஒருமை வினை மேவும் உள்ளத்தினை;
அடை இறந்து அவிழ்ந்த வள் இதழ்த் தாமரை--  50

அடியும், கையும், கண்ணும், வாயும்;
தொடியும், உந்தியும், தோள் அணி வலயமும்,
தாளும், தோளும், எருத்தொடு, பெரியை;
மார்பும், அல்குலும், மனத்தொடு, பரியை;
கேள்வியும், அறிவும், அறத்தொடு, நுண்ணியை;  55

வேள்வியும், மறனும், விருப்பொடு வெய்யை;
அறாஅ மைந்தின், செறாஅச் செங்கண்,
செரு மிகு திகிரிச் செல்வ! வெல் போர்
எரி நகை இடை இடுபு இழைத்த நறுந் தார்ப்
புரி மலர்த் துழா அய் மேவல் மார்பினோய்!--  60

அன்னை எனநினைஇ, நின் அடி தொழுதனெம்;
பல் மாண் அடுக்க இறைஞ்சினெம் வாழ்த்தினெம்--
முன்னும் முன்னும் யாம் செய் தவப் பயத்தால்;
இன்னும் இன்னும் எம் காமம் இதுவே!  64

பரிபாடல் -  14. செவ்வேள்

(பருவன் கண்டு அழிந்த தலைமகள் கேட்ப, முருகவேளைப் பரவுவாளாய், இம் பருவத்தே தலைமகன்
வரும் என்பதுபடத் தோழி வற்புறுத்தியது.)

பாடியவர் :: கேசவனார்
இசையமைத்தவர் :: கேசவனார்
பண் :: நோதிறம்


முருகனது குன்றில் கார்காலத் தன்மை மிகுதல்

கார் மலி கதழ் பெயல் தலைஇ, ஏற்ற
நீர் மலி நிறை சுனை பூ மலர்ந்தனவே;
தண் நறுங் கடம்பின் கமழ் தாது ஊதும்
வண்ண வண்டு இமிர் குரல் பண்ணை போன்றனவே;
அடியுறைமகளிர் ஆடும் தோளே,  5

நெடு வரை அடுக்கத்து வேய், போன்றனவே;
வாகை ஒண் பூப் புரையும் முச்சிய
தோகை ஆர் குரல் மணந்து தணந்தோரை,
நீடன்மின் வாரும் என்பவர் சொல் போன்றனவே;
நாள் மலர்க் கொன்றையும் பொலந் தார் போன்றன;  10

வெல் இணர் வேங்கை வியல் அறைத் தாயின,
அழுகை மகளிர்க்கு உழுவை செப்ப;
நீர் அயல் கலித்த நெரி முகைக் காந்தள்
வார் குலை அவிழ்ந்த வள் இதழ் நிரைதொறும்,
விடு கொடிப் பிறந்த மென் தகைத் தோன்றிப்  15

பவழத்து அன்ன வெம் பூத் தாஅய்,
கார் மலிந்தன்று, நின் குன்று போர் மலிந்து,

முருகனைப் புகழ்ந்து போற்றுதல்

சூர் மருங்கு அறுத்த சுடர்ப் படையோயே!
கறை இல் கார் மழை பொங்கி அன்ன
நறையின் நறும் புகை நனி அமர்ந்தோயே!  20

அறு முகத்து ஆறு-இரு தோளால் வென்றி
நறு மலர் வள்ளிப் பூ நயந்தோயே!
கெழீஇக் கேளிர் சுற்ற, நின்னை
எழீஇப் பாடும் பாட்டு அமர்ந்தோயே!
பிறந்த ஞான்றே, நின்னை உட்கிச்  25

சிறந்தோர் அஞ்சிய சீர் உடையோயே!
இரு பிறப்பு, இரு பெயர், ஈர நெஞ்சத்து,
ஒரு பெயர், அந்தணர் அறன் அமர்ந்தோயே!--

விண்ணப்பம்

அன்னை ஆகலின், அமர்ந்து யாம் நின்னை,
துன்னித் துன்னி, வழிபடுவதன் பயம்
இன்னும் இன்னும் அவை ஆகுக--
தொன் முதிர் மரபின் நின் புகழினும் பலவே!  32

 
மேலும் பரிபாடல் »
temple news
பரிபாடல் என்னும் இசைப்பாக்களால் தொகுக்கப்பட்டதால் பரிபாடல் எனப் பெயர் பெற்றது. 70 பாடல்களில் 22 ... மேலும்
 
பரிபாடல் - உரைச்சிறப்புப் பாயிரம் (நிலைமண்டில ஆசிரியப்பா) கண்ணுதற் கடவு ளண்ணலங் குறுமுனிமுனைவேன் ... மேலும்
 
பரிபாடல் - 5. செவ்வேள் பாடியவர் :: கடுவன் இளவெயினனார்இசையமைத்தவர் :: கண்ணனாகனார்பண் :: பாலையாழ் பாய் இரும் ... மேலும்
 
பரிபாடல் - 15. திருமால் பாடியவர் :: இளம்பெருவழுதியார்இசையமைத்தவர் :: மருத்துவன் நல்லச்சுதனார்பண் :: ... மேலும்
 
பூ மலி வையைக்கு இயல்பு. பரிபாடல் - 21. செவ்வேள் பாடியவர் :: நல்லச்சுதனார்இசையமைத்தவர் :: கண்ணகனார்பண் :: ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar