Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பரிபாடல் (பகுதி-4) பரிபாடல் (பகுதி-6)
முதல் பக்கம் » பரிபாடல்
பரிபாடல் (பகுதி-5)
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 மார்
2013
05:03

பூ மலி வையைக்கு இயல்பு.

பரிபாடல் - 21. செவ்வேள்

பாடியவர் :: நல்லச்சுதனார்
இசையமைத்தவர் :: கண்ணகனார்
பண் :: காந்தாரம்

கடவுள் வாழ்த்து

பரங்குன்றத்துப் பெருமானைப் பரவுதல்

ஊர்ந்ததை--எரி புரை ஓடை இடை இமைக்கும் சென்னி,
பொரு சமம் கடந்த புகழ் சால், வேழம்.
தொட்டதை--தைப்பு அமை சருமத்தின், தாள் இயை தாமரை
துப்பு அமை துவர் நீர்த் துறை மறை அழுத்திய,
வெரிநத் தோலொடு, முழு மயிர் மிடைந்த,  5

வரி மலி அர உரி வள்பு கண்டன்ன,
புரி மென் பீலிப் போழ் புனை அடையல்.
கையதை--கொள்ளாத் தெவ்வர் கொள் மாமுதல் தடிந்து,
புள்ளொடு பெயரிய பொருப்புப் புடை திறந்த வேல்;
பூண்டதை--சுருளுடை வள்ளி இடை இடுபு இழைத்த  10

உருள் இணர்க் கடம்பின் ஒன்ணுபடு கமழ் தார்.
அமர்ந்ததை--புரையோர் நாவில் புகழ் நலம் முற்றி,
நிரை ஏழ் அடுக்கிய நீள் இலைப் பாலை
அரை வரை மேகலை, அளி நீர்ச் சூழி,
தரை விசும்பு உகந்த தண் பரங்குன்றம்.  15

குன்றத்து அடி உறை இயைக! எனப் பரவுதும்--
வென்றிக் கொடி அணி வெல்வ! நிற் தொழுது.

பரங்கின்றின்மேல் ஓவியத்தின் அழகு போன்ற காட்சிகள்

சுடு பொன் ஞெகிழத்து முத்து அரி சென்று ஆர்ப்ப,
துடியின் அடி பெயர்த்து, தோள் அசைத்துத் தூக்கி,
அடு நறா மகிழ் தட்ப ஆடுவாள் தகைமையின்,  20

நுனை இலங்கு எகெனச் சிவந்த நோக்கமொடு
துணை அணை கேள்வணைத் துனிப்பவள் நிலையும்;
நிழல் காண் மண்டிலம் நோக்கி,
அழல் புனை அவிர் இழை திருத்துவாள் குறிப்பும்;
பொதிர்த்த முலையிடைப் பூசிக் சந்தனம்  25

உதிர்த்து, பின் உற ஊட்டுவாள் விருப்பும்;
பல் ஊழ் இவை இவை நினைப்பின், வல்லோன்
ஓவத்து எழுது எழில் போலும்--மா தடிந்-
திட்டோய்! நின் குன்றின்மிசை.

குன்றத்தில் வேறுபட்ட பல ஒலிகள் ஒருங்கு இசைத்தல்

மிசை படு சாந்தாற்றி போல, எழிலி  30

இசை படு பக்கம், இரு பாலும் கோலி,
விடு பொறி மஞ்ஞை பெயர்பு உடன் ஆட;
விரல் செறி தூம்பின் விடு துளைக்கு ஏற்ப,
முரல் குரற் தும்பி அவிழ் மலர் ஊத;
யாணர் வண்டினம் யாழ் இசை பிறக்க;  35

பாணி முழவு இசை அருவி நீர் ததும்ப;
ஒருங்கு பரந்தவை எல்லாம் ஒலிக்கும்-
இரங்கு முரசினான் குன்று.

சுனை நீரில் பாய்ந்து ஆடிய காதலர்

தாழ் நீர் இமிழ் சுனை நாப்பண் குளித்து, அவண்
மீ நீர் நிவந்த விறலிழை,  கேள்வனை  40

வேய் நீர் அழுந்து தன் கையின் விடுக என,
பூ நீர் பெய் வட்டம் எறிய, புணை பெறாது
அரு நிலை நீரின் அவள் துயர் கண்டு,
கொழுநன் மகிழ் தூங்கி, கொய் பூம் புனல் வீழ்ந்து,
தழுவும் தகை வகைத்து--தண் பரங்குன்று.  45

குன்றத்தில் பலவகை மணத்துடன் வரும் காற்றுக்கள்

வண்டு ஆர் பிறங்கல் மைந்தர் நீவிய
தண் கமழ் சாந்தம் தைஇய வளியும்,
கயல் புரை கண்ணியர் கமழ் துகள் உதிர்த்த
புயல் புரை கதுப்பகம் உளரிய வளியும்,
உருள்இணர்க் கடம்பின் நெடுவேட்கு எடுத்த  50

முருகு கமழ் புகை நுழைந்த வளியும்,
அசும்பும் அருவி அரு விடர்ப் பரந்த-
பசும் பூண் சேஎய்!-நின் குன்றம் நன்கு உடைத்து.

சீர்க்கு இசைய ஆடுபவளது மேனியழகும் கண்ணழகும்

கண் ஒளிர் திகழ் அடர், இடுசுடர் படர் கொடி மின்னுப் போல்,
ஒண் நகை தகை வகை நெறிபெற இடைஇடை இழைத்து யாத்த  55

செண்ணிகைக் கோதை கதுப்போடு இயல,
மணி மருள் தேன் மகிழ் தட்ப, ஒல்கிப்
பிணி நெகிழப் பைந் துகில், நோக்கம் சிவப்பு ஊர,
பூங் கொடி போல நுடங்குவாள், ஆங்குத் தன்
சீர்தகு கேள்வன் உருட்டும் துடிச் சீரான்,  60

கோடு அணிந்த முத்து ஆரம் ஒல்க ஓசிபவள் ஏர்-
ஆடை அசைய, அணி அசைய, தான் அசையும்
வாடை உளர் கொம்பர் போன்ம்.
வாளி புரள்பவை போலும், துடிச் சீர்க்குத்
தோள் ஊழ் பெயர்ப்பவள் கண்.  65

முருகவேளை வாழ்த்துதல்

மாறு அமர் அட்டவை மற வேல் பெயர்ப்பவை;
ஆறு இரு தோளவை; அறு முகம் விரித்தவை;
நன்று அமர் ஆயமோடு ஒருங்கு, நின் அடி உறை
இன்று போல் இயைக! எனப் பரவுதும்-
ஒன்றார்த் தேய்த்த செல்வ! நிற் தொழுதே.  70

பரிபாடல் - 22. வையை

(இப்பாடலின் இடையில் சில சொற்களும் இறுதிட்ட குறியும் கிடைக்கவில்லை)

பாடியவர் :: தெரியவில்லை
இசையமைத்தவர் :: தெரியவில்லை
பண் :: தெரியவில்லை

மழை பெய்தலும் நீர்ப் பெருக்கும்

ஒளிறு வாட் பொருப்பன் உடல் சமத்து இறுத்த
களிறு நிரைத் தவைபோல் கொண்மூ நெரிதர,
அரசு படக் கடந்த ஆனாச் சீற்றத்தவன்
முரசு அதிர்பவைபோல் முழங்கு இடி பயிற்றி,
ஒடுங்கார் உடன்றவன் தானை வில் விசை  5

விடும் கணை ஒப்பின் கதழ் உறை சிதறூஉ,
கண் ஒளிர் எகின் கடிய மின்னி, அவன்
வண்மைபோல் வானம் பொழிந்த நீர்-மண்மிசை
ஆனாது வந்து தொகுபு ஈண்டி, மற்று-அவன்
தானையின் ஊழி....தாவூக் கத்தின்,  10

போன நிலம் எல்லாம் போர் ஆர் வயல் புகுத-
..... ......... நீக்கிப் பு.. ..... .....
கான மலைத்தரை கொன்று மணல பினறி
வான மலைத்த ......வ ........ ....... ........
..... லைத்தவ மண முரசு எறிதா,  15

தானைத் தலைத்தலை வந்து மைந்து உற்று,

மைந்தரும் மகளிரும் கரையையும் வையையும் சேர்கின்ற அழகு

பொறிவி யாற்றுறி--துவர், புகை, சாந்தம்
எறிவன எக்குவ ஈரணிக்கு ஏற்ற,
நறவு அணி பூந் துகில் நன் பல ஏந்தி,
பிற தொழின ....ம் பின்பின் தொடர;  20

செறி வினைப் பொலிந்த செம் பூங் கண்ணியர்,
ஈர் அமை வெட்சி இதழ் புனை கோதையர்,
தார் ஆர் முடியர், தகை கெழு மார்பினர்;
மாவும், களிறும், மணி அணி வேசரி,
காவு நிறையக் கரை நெரிபு ஈண்டி;  25

வேல் ஆற்றும் பொய்ம்பனின், விரை மலர் அம்பினோன்
போல், ஆற்று முன்பின் புனை கழல் மைந்தரொடு,
தார் அணி மைந்தர் தவப் பயன் ஆம் எனக்
கார் அணி கூந்தல், கயற் கண், கவிர் இதழ்,
வார் அணி கொம்மை, வகை அமை மேகலை,  30

ஏர் அணி இலங்கு எயிற்று, இலங்கு நகையவர்-
சீர் அணி வையைக்கு அணிகொல்லோ? வையைதன்
நீர் அணி நீத்தம் இவர்க்கு அணிகொல்? எனத்
தேருநர் தேருங்கால், தேர்தற்கு அரிது காண்-
தீரமும் வையையும் சேர்கின்ற கண் கவின்.  35

திருமருத முன்துறைக் காட்சிகள்

மண் கணை முழவின் இன் கண் இமிழ்விற்கு
எதிர்வ பொருவி ..... மேறு மாறு இமிழ்ப்ப,
கவர் தொடை நல் யாழ் இமிழ, காவில்
புகர் வரி வண்டினம் பூஞ் சினை இமிர,
ஊது சீர்த்தீம் குழல் இயம்ப, மலர்மிசைத்  40

தாது ஊது தும்பி தவிர்பு அல இயம்ப,
..... துடிச் சீர் நடத்த வளி நடன்
மெல் இணர்ப் பூங்கொடி மேவர நுடங்க,
ஆங்கு அவை தத்தம் தொழில் மாறு கொள்ளும்-
தீம் புனல் வையைத் திருமருத முந்துறையால்.  45

கோடுளர் குரல் பொலி ஒலி துயல் இருங் கூந்தல்,
.... ..... .......புரை தீர் நெடு மென்
தோள் தாழ்பு தழை மலர் துவளா வல்லியின்,
நீள் தாழ்பு தோக்கை, நித்தில வரிச் சிலம்பு,

பரிபாடல் - பரிபாடல்-திரட்டு

1. திருமால்

(முதல் செய்யுளான இது தொல்காப்பியம் செய்யுள் இயல்,
சூ.121, பேராசிரியர் நச்சினார்க்கினியர், உரையில் கண்டெடுக்கப்பட்டது.)

இருந்தையூர் அமர்ந்த இறைவனது அடி பரவுதல்

வான் ஆர் எழிலி மழை வளம் நந்த,
தேன் ஆர் சிமைய மலையின் இழிதந்து,
நான் மாடக் கூடல் எதிர்கொள்ள, ஆனா
மருந்து ஆகும் தீம் நீர் மலி துறை மேய
இருந்தையூர் அமர்ந்த செல்வ! நின் .. . .5

திருந்துஅடி தலை உறப் பரவுதும், தொழுது.

இருந்தையூரின் சிறப்புகள்
மலை, குளம், வயல், ஆகியவற்றின் வளம்

ஒருசார்-அணி மலர் வேங்கை, மராஅ, மகிழம்,
பிணி நெகிழ் பிண்டி, நிவந்து சேர்பு ஓங்கி,
மணி நிறம் கொண்ட மலை.
ஒருசார்-தண் நறுந் தாமரைப் பூவின் இடைஇடை ... ..  10

வண்ண வரி இதழ்ப் போதின்வாய் வண்டு ஆர்ப்ப,
விண் வீற்றிருக்கும் கய மீன் விரி தகையின்
கண் வீற்றிருக்கும் கயம்.
ஒருசார்-சாறுகொள் ஓதத்து இசையொடு மாறுஉற்று
உழவின் ஓதை பயின்று, அறிவு இழந்து ... .  15

திரிநரும், ஆர்த்து நடுநரும், ஈண்டித்,
திரு நயத்தக்க வயல்.

அந்தணர் இருக்கை

ஒருசார்-அறத்தொடு வேதம் புணர் தவம் முற்றி,
விறல் புகழ் நிற்ப, விளங்கிய கேள்வித்
திறத்தின் திரிவு இல்லா அந்தணர் ஈண்டி, .. ..  20

அறத்தின் திரியா, பதி.

வணிகரும் உழவர்களும் வாழும் தெருக்கள்

ஆங்கு ஒருசார்-உண்ணுவ, பூசுவ, பூண்ப, உடுப்பவை
மண்ணுவ, மணி பொன் மலைய, கடல்,
பண்ணியம், மாசு அறு பயம் தரு காருகப்
புண்ணிய வணிகர் புனை மறுகு ஒருசார் . . .  25

விளைவதை வினை எவன் மென் புல வன் புலக்
களமர் உழவர் கடி மறுகு பிறசார்
ஆங்க அனையவை நல்ல நனி கூடும் இன்பம்
இயல் கொள நண்ணியவை

ஆதிசேடனது திருக்கோயிலில் மைந்தரும் மகளிரும் வழிபடுதல்

வண்டு பொரேரென எழ,  30

வண்டு பொரேரென எழும்;
கடிப் புகு வோரிக் கதவமிற் றோட்டி-
கடிப்பு இகு காதில் கனம் குழை தொடர-
மிளிர் மின் வாய்ந்த விளங்கு ஒளி நுதலார்
ஊர் களிற்றன்ன செம்மலோரும் . . . .  35

வாய் இருள் பனிச்சை வரி சிலைப் புருவத்து
ஒளி இழை ஒதுங்கிய ஒண் நுதலோரும்,
புலத்தோடு அளவிய புகழ் அணிந்தோரும்,
நலத்தோடு அளவிய நாண் அணிந்தோரும்,
விடையோடு இகலிய விறல் நடையோரும் . .. . .  40

நடை மடம் மேவிய நாண் அணிந்தோரும்,
கடல் நிரை திரையின் கரு நரையோரும்-
மடையர், குடையர், புகையர், பூ ஏந்தி
இடை ஒழிவு இன்றி, அடியுறையார் ஈண்டி, .. .45

விளைந்தார் வினையின் விழுப் பயன் துய்க்கும்
துளங்கா விழுச் சீர்த் துறக்கம் புரையும்-
இரு கேழ் உத்தி அணிந்த எருத்தின்
வரை கெழு செல்வன் நகர்.

பூ முடி நாகர் கோயிலின் எழும் ஓசைகள் முதலியன

வண்டொடு தும்பியும் வண் தொடை யாழ் ஆர்ப்ப, ...  50

விண்ட கட கரி மேகமொடு அதிரத்
தண்டா அருவியொடு இரு முழவு ஆர்ப்ப,
அரி உண்ட கண்ணாரொடு ஆடவர் கூடிப்
புரிவுண்ட பாடலொடு ஆடலும் தோன்ற,
சூடு நறவொடு தாமம் முகிழ் விரியச் .. .55

சூடா நறவொடு காமம் விரும்ப,
இனைய பிறவும், இவை போல்வனவும்,
அனையவை எல்லாம் இயையும்-புனை இழைப்
பூ முடி நாகர் நகர்.

குளவாய் அமர்ந்தான் நகரில் மகளிரும் மைந்தரும் வணங்கிப் பேறு பெறுதல்

மணி மருள் தகை வகை நெறி செறி ஒலி பொலி
அவிர் நிமிர் புகழ் கூந்தல். ...  60

பிணி நெகிழ் துளையினை தெளி ஒளி திகழ் ஞெகிழ் தெரி அரி
மது மகிழ்பு அரி மலர் மகிழ் உண்கண், வாணுதலோர்-
மணி மயில் தொழில் எழில் இகல் மலி திகழ் பிறிது
இகழ் கடுங் கடாக் களிற்று அண்ணலவரோடு,
அணி மிக வந்து இறைஞ்ச, அல் இகப்ப, பிணி நீங்க,
நல்லவை எல்லாம் இயைதரும்-தொல் சீர்
வரை வாய் தழுவிய கல் சேர் கிடக்கைக்
குளவாய் அம்ர்ந்தான் நகர்.

ஆதிசேடனின் சிறப்புக்களைப் போற்றுதல்

திகழ் ஒளி முந்நீர் கடைந்த அக் கால், வெற்புத்
திகழ்பு எழ வாங்கித் தம் சீர்ச் சிரத்து ஏற்றி, ...  65

மகர மறி கடல் வைத்து நிறுத்துப்
புகழ்சால் சிறப்பின் இரு திறத்தோர்க்கும்
அமுது கடைய, இரு வயின் நாண் ஆகி,
மிகாஅ இரு வடம் ஆழியான் வாங்க,
உகாஅ வலியின் ஒரு தோழம் காலம் .. .70

அறாஅது அணிந்தாரும் தாம்;
மிகாஅ மறலிய மே வலி எல்லாம்
புகாஅ, எதிர் பூண்டாரும் தாம்;
மணி புரை மாமலை ஞாறிய ஞாலம்
அணிபோல் பொறுத்தாரும் தாஅம்; பணிபு இல் சீர்ச் .....  75

செல் விடைப் பாகன் திரிபுரம் செற்றுழிக்
கல் உயர் வென்னி இமய வில் நாண் ஆகித்
தொல் புகழ் தந்தாரும் தாம்

விண்ணப்பம்

அணங்குடை அருந் தலை ஆயிரம் விரித்த
கணங்கொள் சுற்றத்து அண்ணலை வணங்கி,
நல் அடி ஏத்தி நிற் பரவுதும்-
எல்லேம் பிரியற்க எம் சுற்றமொடு ஒருங்கே. .. .82

 
மேலும் பரிபாடல் »
temple news
பரிபாடல் என்னும் இசைப்பாக்களால் தொகுக்கப்பட்டதால் பரிபாடல் எனப் பெயர் பெற்றது. 70 பாடல்களில் 22 ... மேலும்
 
பரிபாடல் - உரைச்சிறப்புப் பாயிரம் (நிலைமண்டில ஆசிரியப்பா) கண்ணுதற் கடவு ளண்ணலங் குறுமுனிமுனைவேன் ... மேலும்
 
பரிபாடல் - 5. செவ்வேள் பாடியவர் :: கடுவன் இளவெயினனார்இசையமைத்தவர் :: கண்ணனாகனார்பண் :: பாலையாழ் பாய் இரும் ... மேலும்
 
தலைமகளிரது செய்தி வளி பொரு சேண் சிமை வரையகத்தால்  90 தளி பெருகும் தண் சினையபொழில் கொளக் குறையா ... மேலும்
 
பரிபாடல் - 15. திருமால் பாடியவர் :: இளம்பெருவழுதியார்இசையமைத்தவர் :: மருத்துவன் நல்லச்சுதனார்பண் :: ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar