Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஈரோடு பெரியமாரியம்மன் கோவிலில் ... பங்குனி உத்திர விரத முறையும் பலனும்! பங்குனி உத்திர விரத முறையும் பலனும்!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
உலகெங்கும் பாசத் திருவிழா.. ஹோலிப் பண்டிகை கோலாகலம்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

25 மார்
2013
01:03

மலைவாழ் மக்களிடையே நிலவளப் பண்டிகையாக கொண்டாடப்பட்டு வந்த திருவிழாவே இன்று ஹோலியாக உருப்பெற்றிருக்கிறது என்பர். ஹோலி என்னும் வார்த்தை, ஹோலகா என்ற சொல்லின் திரிபே என்று கூறுவர். ஹோலகா என்பது முற்றிய நிலையில் உள்ள மொச்சைக் கதிர்களைக் குறிக்குமாம். முன் காலத்தில் இந்நாளில் கோதுமை, பார்லி முதலியவற்றால் வேள்வி செய்வர். வேள்வியின் நிறைவில் யாகத்தின் சாம்பலை நெற்றியில் பூசிக்கொள்வதோடு அனைத்து திசைகளிலும் தூவுவர். இதுவே வண்ணங்களைத் தூவும் வழக்கத்தின் காரணமாக இருக்கலாம். ஹோலியை ஹுதாஷிணி என்றும் கூறுவர். ஹுதாஷிணி இருளையும் தீமையையும் எதிர்த்துப் போராடுபவள் என்று பொருள்.வேடிக்கை விநோதங்கள் நிறைந்த வடநாட்டுப்பண்டிகை ஹோலி. கிருஷ்ணனைக் கொல்ல வந்த பூதனை என்னும் அரக்கியைக் கொன்ற நாளாக இந்நாளை மக்கள் கொண்டாடுகின்றனர். கேலியும் கூத்தும் மட்டுமே பிரதிபலிக்கும் விதத்தில் ஹோலி என்றாலே ஜாலி என்று மாறிவிட்டது. ஆனால், ஆன்மிக அடிப்படையிலேயே விழாக்கள் ஏற்படுத்தப்பட்டன. சாயத்தண்ணீரைப் பீய்ச்சி அடிப்பது, கலர்ப்பொடி தூவுவது ஆகியவை, உறவுகள் பலப்படவேண்டும், பகையை மறந்து ஒன்றுசேரவேண்டும் என்பதற்காக ஏற்படுத்தப்பட்ட விஷயங்களாகும். சிவபெருமான் மன்மதனை எரித்த காமதகனவிழாவாக தென்னிந்தியாவிலும், பூதனை என்னும் அரக்கியை பாலகிருஷ்ணர் கொன்ற நாளாக வடநாட்டிலும் இந்நாள் கொண்டாடப்படுகிறது. நம் மனதில் இருக்கும் வேண்டாத தீய எண்ணங்களை அழிப்பதற்காக மன்மதன், பூதனை போன்ற உருவபொம்மைகளை தீயிலிடுவர்.

தாயின் வயிற்றில் இருக்கும்போதே நாராயண நாமத்தைக் கேட்டு பக்தியில் திளைத்தவன் பிரகலாதன். உண்ணும்போதும் உறங்கும்போதும் ஓம் நமோ நாராயணாய என்னும் எட்டெழுத்து மந்திரத்தை அவன் மறந்ததில்லை. பிள்ளையின் விஷ்ணு பக்தி தந்தை இரண்யனுக்கு பிடிக்கவில்லை. அவனை அடித்துப் பார்த்தான். அடங்கவில்லை. மலையில் உருட்டி விட்டான். உயிர் போகவில்லை. நஞ்சைக் கொடுத்துப் பார்த்தான். அஞ்சவில்லை. அசுரகுரு சுக்ராச்சாரியாரிடம் படிக்க அனுப்பினான். மனதில் பக்தி வளர்ந்ததே ஒழிய பாடத்தில் ஈடுபாடில்லை. இறுதியில், தன் தங்கை ஹோலிகாவை அழைத்தான். அவளுக்கு விசேஷ சக்தியுண்டு. நெருப்பு அவளைத் தீண்டாது. பிரகலாதனை மடியில் வைத்துக் கொண்டு தீக்குள் புகுமாறு தங்கையிடம் கட்டளையிட்டான். ஆனால், வழக்கத்துக்கு மாறாக ஹோலிகாவின் உடலில் தீ பற்றிக் கொண்டது. பிரகலாதனோ, சிரித்துக் கொண்டு அமர்ந்திருந்தான். இறைசக்தியின் முன் தீயசக்திகள் அழிந்து போகும் என்ற உண்மையை இறைவன் உணர்த்தினார். இந்நாளே ஹோலிபண்டிகையாகக் கொண்டாடப்படுவதாக ஒரு கதை உண்டு. இந்நாளில் ஒம் நமோநாராயணாய என்ற எட்டெழுத்து மந்திரத்தை ஜெபித்தும், பிரகலாதனைப் போற்றியும் வழிபடுவது சிறப்பாகும். வடமாநிலங்களில் இவ்விழா கொண்டாடப்படுகிறது. அநியாயம் அழிந்தநாள் என்பதால், மக்கள் வண்ண  பொடிகளை தூவி மகிழ்கின்றனர். வடநாட்டில் மதுரா போன்ற நகரங்களில், கிருஷ்ணலீலையை நினைவுகூரும் வண்ணம் ஹோலிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. மக்கள் ஒன்றுகூடி ஆடிப்பாடி வண்ணக்கலவை நீரைப் பாய்ச்சி விளையாடுகிறார்கள்.

ஹோலி என்றால், மனதில் உள்ள பொறாமை, தீய எண்ணம், அகங்காரம் அனைத்தையும் சுட்டெரித்து அறிவுச்சுடரை ஏற்றும் புனித நாள் என்றும் கூறுவர். பிரான்ஸ் நாட்டில் இந்த விழாவை மார்ச் 19-ஆம் தேதி தமது ஆண்டுக்கணக்கின் கடைசி நாளாகக் கொண்டாடுகிறார்கள். அந்த தினத்தை அவர்கள் முட்டாள் தினம் என்கிறார்கள். ஜோக்கர் எனப்படும் கோமாளிகள் போல் வேஷம் தரித்து நகைச்சுவையுடன் கொண்டாடுகிறார்கள். ஜெர்மானியர்கள், ஈஸ்டர் சமயத்தில் ஹோலிøய் போன்று ஒரு விழாவைக் கொண்டாடுகிறார்கள். இரண்டு பெரிய மரத்துண்டுகளை நட்டுவைத்து, அதன் எதிரில் புற்கள் நிறைந்த பீப்பாயை வைத்து மூடிவிடுவார்கள். மாலை நேரத்தில் அதைக் கொளுத்துவார்கள். அப்பொழுது, அந்தத் தீயைச் சுற்றி ஆடிப்பாடி மகிழ்வார்கள். தீ எரிந்து தணிந்ததும் அந்தச் சாம்பலை எடுத்துப் பூசிக்கொண்டு ஒருவரையொருவர் அணைத்த வண்ணம் நடனமாடுவார்கள்.  ஆப்பிரிக்கர்கள், தங்கள் நாட்டில் ஒரு காலத்தில் ஆட்சிபுரிந்த போகா என்ற கொடுங்கோல் மன்னனின் கொடுமையிலிருந்து விடுதலைபெற்ற நாளாகக் கொண்டாடுகிறார்கள். அந்தங் கொடுங்கோல் மன்னனை உயிருடன் பிடித்து எரித்ததை நினைவூட்டும்படி, அவன் உருவ பொம்மையை உருவாக்கி, அதற்கு தீயிட்டுக் கொளுத்தி ஆடிப்பாடி மகிழ்கிறார்கள்.

செக்கோஸ்லோவிய நாட்டில் நடைபெறும் போலியாகோனன்ஸ் என்ற விழா நமது ஹோலி விழாவைப் போன்றதே தண்ணீரில் நறுமண திரவத்தைக் கலந்து ஒருவர்மீது ஒருவர் தெளித்து மகிழ்வர். தாய்லாந்தில் ஸாங்கக்ரான் என்ற பெயரில் ஏப்ரல் மாதத்தில் கொண்டாடுகிறார்கள். மிக அமைதியாக இந்த விழா நடைபெறும். அன்று புத்த விகாருக்குச் சென்று வழிபடுவர். நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் பரிசுகள் கொடுத்து வண்ணப் பொடிகளை ஒருவர்மீது ஒருவர் பூசி, அன்பைப் பரிமாறிக்கொள்வார்கள். மியான்மர், (பர்மா) மற்றும் ஸ்ரீலங்காவில் நமது நாட்டைப்போலவே ஹோலி கொண்டாடுகிறார்கள். அங்கு மிக அமைதியாக இந்த விழா எந்தவித ஆடம்பரமுமின்றி நடைபெறும். இவ்விதமாக உலகம் முழுவதும் கொண்டாடப்படும் ஹோலிப் பண்டிகை, உறவையும் நட்பையும் வெளிப்படுத்தும் பாசத்திருவிழா என்றே சொல்லலாம்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: லட்சக்கணக்கான பக்தர்களின் கோவிந்தா கோஷம் முழங்க, மதுரை வைகை ஆற்றில் பச்சைப்பட்டு உடுத்தி ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரையில் சித்திரைத் திருவிழாவில் வீர அழகர் பச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலையில் அதிகாலை முதலே பக்தர்கள் குவிந்தனர். ... மேலும்
 
temple news
பரமக்குடி; பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் (அழகர்) கோயில் சித்திரைத் திருவிழாவில் கள்ளழகர் அதிகாலை 3:30 ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்,  தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் அமைந்துள்ள சாரங்கபாணி கோவில், 108 வைணவ திவ்ய தேசங்களில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar