தர்மபுரி: தர்மபுரி அடுத்த அதியமான்கோட்டை, ஸ்ரீதட்சண காசி கால பைரவர் கோவிலில், இன்று அஷ்டமி தேய்பிறை சிறப்பு பூஜைகள் நடக்கிறது. இதையொட்டி, காலை, 6 மணி முதல், 9 மணி வரையில் ஹோம பூஜைகள் மற்றும் அஷ்ட பைரவர் யாகம், அஷ்ட லட்சுமி யாகம், தொடர்ந்து, ஆயிரத்து எட்டு அர்ச்சனைகள், 12 ராசிகளுக்கும் சிறப்பு பூஜைகள், மங்கள ஆர்த்தி நடக்கிறது. இரவு, 10 மணிக்கு மேல் 12 அளவில் சத்ரு சம்ஹார ஹோமம் நடக்கிறது. ஏற்பாடுகளை கர்நாடகா மற்றும் தமிழக பக்தர்கள் செய்து வருகின்றனர்.