Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

இன்றைய செய்திகள் :
அஷ்டமி தேய்பிறை சிறப்பு பூஜை கொல்லங்கோடு பத்திரகாளி கோயிலில் தூக்கத்திருவிழா தொடக்கம்! கொல்லங்கோடு பத்திரகாளி கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மகாபாரதம் பெயர் காரணம் தெரியுமா?
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

03 ஏப்
2013
13:42

ஒவ்வொருவரும் அறிந்திருக்கும் ஐந்தாவது வேதம் இது! வியாசர் என்னும் மாமுனிவரால் ஒரு லட்சம் ஸ்லோகங்களால் எழுதப்பட்டது. இப்படி சொல்வதுகூடப் பிழை தான்! வியாசமுனிவர் சொல்லச் சொல்ல நாம்அன்போடு வணங்கும் கணபதி தான் பாரதத்தை எழுதினார். அதுவும் எப்படி? தன் தந்தங்களில் ஒன்றை ஒடித்து அதையே பேனாவாக, அதாவது எழுத்தாணியாக ஆக்கிக் கொண்டு எழுதினார். அப்படி எழுதப்பட்ட பாரதம், மகாபாரதமாக கருதப்படவும் ஒரு காரணம்உண்டு. தேவர்கள் எல்லாரும் ஒன்று சேர்ந்துவியாசர் எழுதிய பாரதத்தின் சிறப்பைஅறிந்து கொள்ள முயல்கின்றனர். உள்ளிருக்கும் லட்சம் ஸ்லோகங்களøயும் சொல்லி அவர்களுக்குப்புரியச் செய்வது ஒருபுறம்.அதற்கு அவசியம் இல்லாதபடி நாடியில் புரிய வைத்துவிட, ஒரு வழியைக் காண்கிறார் கணபதி. ஒரு பெரிய தராசைக் கொண்டு வரச் சொல்லி, அதில் ஒரு பக்கம் பாரதத்தையும், மறுபக்கத்தில் நான்கு வேதங்களையும் வைக்கிறார்.

பாரதம்உள்ள தட்டும், நான்கு வேதம்உள்ள தட்டும் சமமாக நிற்கிறது. தேவர்கள் வியக்கின்றனர். வேதங்கள் இறைவனிடமிருந்தே தோன்றிய அதுவே, மானுட வாழ்விற்கு ஆதாரமாக வழிகாட்டியாக எல்லாமுமாக உள்ளது.அதை அசுரர்கள் அழிக்க நினைத்த போதெல்லாம், மகாவிஷ்ணுவேஅதை மீட்டு வந்து பிரம்மனிடம் அளித்து பின் ரிஷிகளை அடைந்து அனைவருக்கும் பொதுவானது. அப்படிப்பட்ட வேதங்களுக்கு இணையான பாரதம் இருப்பதைஅறிந்த தேவர்கள், இது பாரதம் அல்ல. மகாபாரதம் என்றனர். மகாபாரதம் மட்டுமல்ல. ராமாயணமும் இதிகாசம். இந்த இரண்டையும் அதாவது இரண்டின் சாரத்தையும் திருக்குறள் போல சுருங்கச் சொல்வதும்உண்டு.

மண்ணாசையில்விளைந்தது மகாபாரதம்!
பெண்ணாசையில்விளைந்தது ராமாயணம்!

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple
தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோயில் மாசித்திருவிழா (பிப்.,12) கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple
சாத்தூர்: இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் தை கடைசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple
பொள்ளாச்சி: பொள்ளாச்சி ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் குண்டம் திருவிழாவையொட்டி, காலை மற்றும் மாலை ... மேலும்
 
temple
ராமேஸ்வரம்: தனுஷ்கோடி அருகே மண்ணுக்குள் புதையுண்ட சர்வரோக நிவாரண தீர்த்தம் 49 ஆண்டுகளுக்கு பின் ... மேலும்
 
temple
திருப்போரூர்: திருப்போரூர் அடுத்த, செம்பாக்கம், லலிதா திரிபுரசுந்தரி மூலிகையம்மன் கோவிலில் (பிப்.,12 ), ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2016 www.dinamalar.com. All rights reserved.