Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பிள்ளைவயல் காளியம்மன் கோயில் ... ரமலான் சிந்தனைகள்:இவர்களை விசாரிக்க வேண்டாம்! ரமலான் சிந்தனைகள்:இவர்களை விசாரிக்க ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திட்டை குரு கோவிலில் 15ல் கும்பாபிஷேக விழா: ஏற்பாடு தீவிரம்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

13 ஜூலை
2013
10:07

தஞ்சாவூர்: தஞ்சையை அடுத்த திட்டை வசிஷ்டேஸ்வரர் கோவிலில் வரும் 15ம் தேதி கும்பாபிஷேக விழா நடக்கிறது. இதையொட்டி, தஞ்சை மண்டல ஹிந்து அறநிலைத்துறை அதிகாரிகள், அலுவலர்கள் தீவிர முன்னேற்பாடு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.தஞ்சையை அடுத்த திட்டையில் சுகுந்த குந்தளாம்பிகை சமேத வசிஷ்டேஸ்வரர் ஸ்வாமி கோவில், மூர்த்தி, தலம், தீர்த்தம் என்னும் மூன்று சிறப்பையும் பெற்றுள்ளது. ராமரின் குலகுரு வசிஷ்டர், இங்கு தவம் இருந்து பூஜித்ததால் வசிஷ்டேஸ்வரர் என, அழைக்கப்படுகிறார். வசிஷ்டேஸ்வரர் கோவிலில் ஸ்வாமிக்கும், அம்பாளுக்கும் இடையில் ராஜகுருவாக, குருபகவான் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். பழமையான திட்டை கோவில் 17 ஆண்டுக்கு பின் புதுப்பிக்கப்பட்டு, வரும் 15ம் தேதி கும்பாபிஷேக விழா நடக்கிறது.இதையொட்டி, 14ம் தேதி (ஞாயிறு) காலை 8 மணிக்கு கோ பூஜை, அஸ்வ பூஜை, விசேஷ சந்தி, 9 மணிக்கு யாகசாலை பூஜை, சண்ணவதி ஹோமம், பூர்ணாகுதி, தீபாராதனையுடன் இரண்டாம் கால யாகசாலை பூஜை நடக்கிறது.மாலை 4 மணிக்கு விசேஷ சந்தியுடன் யாகசாலை பூஜை துவங்குகிறது. 6 மணிக்கு கஜ பூஜை, சுவாசினி பூஜை, தீபலட்சுமி பூஜை, இரவு 8 மணிக்கு மூலிகை பொருட்கள், பழ வகைகளை கொண்டு மூலமந்திர ஹோமம், தீபாராதனை நடக்கிறது. இரவு 8 மணிக்கு நாகை நாகராஜ் தலைமையில் நகைச்சுவை பட்டிமன்றம் நடக்கிறது.கும்பாபிஷேக நாளில் (15ம் தேதி) காலை 5 மணிக்கு யாகசாலை பூஜை துவங்கும். 7:20 மணிக்கு உபசாரங்கள், தீபாராதனை, 9:05 மணிக்கு யாத்ராதானம் கடம் புறப்பாடு, 9:30 மணிக்கு ராஜகோபுரம், கட்ட கோபுரம், ஸ்வாமி அம்பாள் பரிவார விமானங்கள், மஹா கும்பாபிஷேகம், காலை 10 மணிக்கு மூலஸ்தான மஹா கும்பாபிஷேகம், விசேஷ அலங்கார தீபாராதனை நடக்கிறது. தொடர்ந்து, மாலை 4 மணிக்கு மஹா அபிஷேகம், 6 மணிக்கு ஸ்வாமிக்கும், அம்பாளுக்கும் திருக்கல்யாண உற்ஸவமும் நடக்கிறது. இரவு 9 மணிக்கு பஞ்ச மூர்த்திகள் சிறப்பு அலங்காரத்துடன் வீதியுலா நடக்கிறது. இரவு 9 மணிக்கு திருப்பத்தூரான் சேவியர் கலைக்குழுவினரின் நாட்டுப்புற பல்சுவை நிகழ்ச்சி நடக்கிறது.இதற்கான முன்னேற்பாடு பணியில், தஞ்சை மண்டல ஹிந்து அறநிலையத்துறை இணை கமிஷனர் குமரதுரை, உதவி கமிஷனர் ஞானசேகரன் தலைமையில், கோவில் செயல் அலுவலர் கோவிந்தராஜூ, தக்கார் ஜெயபால், ஆய்வாளர் சுரேஷ், கணக்கர் மணிமாறன் மற்றும் பணியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: லட்சக்கணக்கான பக்தர்களின் கோவிந்தா கோஷம் முழங்க, மதுரை வைகை ஆற்றில் பச்சைப்பட்டு உடுத்தி ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரையில் சித்திரைத் திருவிழாவில் வீர அழகர் பச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலையில் அதிகாலை முதலே பக்தர்கள் குவிந்தனர். ... மேலும்
 
temple news
பரமக்குடி; பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் (அழகர்) கோயில் சித்திரைத் திருவிழாவில் கள்ளழகர் அதிகாலை 3:30 ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்,  தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் அமைந்துள்ள சாரங்கபாணி கோவில், 108 வைணவ திவ்ய தேசங்களில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar