Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

இன்றைய செய்திகள் :
ஆலயதரிசனம் செய்வது எதற்கு? ஆலயதரிசனம் செய்வது எதற்கு? விளமல் மதுரபாஷினி கோயிலில் ஆடிப்பூர உற்சவ பெருவிழா! விளமல் மதுரபாஷினி கோயிலில் ஆடிப்பூர ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆடி கிருத்திகை: திருத்தணி கோயிலில் கோலாகலம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

31 ஜூலை
2013
10:05

திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், ஆடிக் கிருத்திகை திருவிழாவையொட்டி, நேற்று ஆடிப் பரணி விழாவில், ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் காவடிகள் எடுத்து வந்து, 10 மணி நேரம் காத்திருந்து மூலவரை வழிபட்டனர். திருத்தணி முருகன் கோவிலில் ஆடிக் கிருத்திகை திருவிழா, நேற்று முன்தினம் ஆடி அஸ்வினியுடன் துவங்கியது. நேற்று, ஆடி பரணியை முன்னிட்டு, தமிழகம், ஆந்திரா, கர்நாடகம் மற்றும் புதுச்சேரி உட்பட அண்டை மாநிலங்களில் இருந்து, பக்தர்கள் நேற்று முன்தினம் இரவே திருத்தணிக்கு வந்தனர். மலர், மயில், பால் மற்றும் அன்னக் காவடிகள் எடுத்து சிலம்பாட்டத்துடன் பக்தி பாடல்களை பாடியவாறு, மலையடிவாரத்தில் உள்ள சரவணப் பொய்கை குளத்தில் புனித நீராடி, காவடிகளுக்கு சிறப்பு பூஜை நடத்தினர். மீண்டும் சிலம்பாட்டத்துடன் அரோகரா, அரோகரா பக்தி கோஷம் மற்றும் பாடல்களை பாடிவாறு மலைக் கோவிலுக்குச் சென்றனர். சில பக்தர்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்ற, உடல் முழுவதும் அலகு குத்தி மலை கோவிலுக்கு சென்று, தங்களது நேர்த்தி கடனை தீர்த்தனர். பக்தர்கள் மூலவரை தரிசிக்க பொதுவழியில், 10 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

பச்சை மரகத கல்: விழாவையொட்டி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், பச்சை மாணிக்க மரகத கல், தங்க கீரிடம், தங்க வேல் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து சிறப்பு தீபாராதனை நடத்தப்பட்டது. அதே போல், உற்சவ பெருமானுக்கு காவடி மண்டபத்திலும், ஆறுமுக சுவாமி, ஆபத்சாகய விநாயகர் மற்றும் வள்ளி, தெய்வானை சன்னிதிகளும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. நேற்று நள்ளிரவு வரை, ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் காவடிகளுடன் வந்து, முருகப் பெருமானை தரிசித்தனர். பக்தர்கள் வசதிக்காக தேவஸ்தான குடில்களில் இருந்து, இரண்டு பேருந்துகள் மலைக் கோவிலுக்கு தேவஸ்தானம் சார்பில் விடப்பட்டன. சரவணப் பொய்கையில் பக்தர்கள் குளத்தில் இறங்கி குளிப்பதற்கு பதிலாக, குழாய்கள் மூலம் தண்ணீர் விடப்பட்டது.
ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கர் ஜெயசங்கர், இணை ஆணையர் (பொறுப்பு) திருமகள், மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர். இன்று ஆடிக் கிருத்திகை மற்றும் முதல் நாள் தெப்பத் திருவிழா நடக்கிறது.
கட்டண தரிசனத்திலும் கூட்டம்: பக்தர்களின் வசதிக்காக, மலைக்கோவில் வளாகத்தில், 150 ரூபாய் மற்றும் 50 ரூபாய் சிறப்பு நுழைவு கட்டண டிக்கெட் வினியோகம் செய்யப்பட்டது. 50 ரூபாய் டிக்கெட் பெற்ற பக்தர்கள், ஐந்து மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்தும், 150 ரூபாய் டிக்கெட் பெற்ற பக்தர்கள் இரண்டு மணி நேரமும் காத்திருந்து மூலவரை தரிசித்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் பொற்றாமரைக்குளத்தில் மூன்றாண்டுகளாக தண்ணீர் வற்றாமல் உள்ளது. ... மேலும்
 
temple
மதுரை : மதுரை அருகே கீழடியில் இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறை நடத்தும் அகழாய்வில், பழங்கால கட்டடங்கள் ... மேலும்
 
temple
உடுமலையில் இருந்து மறையூர் செல்லும் வழியில் சின்னாறு செக்போஸ்டிலிருந்து, 5 கி.மீ., தொலைவில் சுற்றிலும் ... மேலும்
 
temple
நெட்டப்பாக்கம்: கடலுார் மாவட்டம், நல்லாத்துாரில் உள்ள  வரதராஜப் பெருமாள் கோவிலில், பிரார்த்தனை ... மேலும்
 
temple
சிதம்பரம்: சிதம்பரம் மேலமடம் அகோர சிவாச்சாரியார் சுவாமி திருமடத்திற்கு, 100 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2016 www.dinamalar.com. All rights reserved.