Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சன்னியாசிகள் ஏன் பிட்சை வாங்க ... ஒரு ஆதர்ச குடும்பம் எப்படியிருக்க வேண்டும்? ஒரு ஆதர்ச குடும்பம் எப்படியிருக்க ...
முதல் பக்கம் » துளிகள்
அபயம் தந்து நல்வழி காட்டும் மஹாவஜ்ரேச்வரி!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

12 செப்
2013
05:09

மஹாவஜ்ரேச்வரி தேவி சிவந்த வடிவினன்; சிவந்த ஆடைகளும், செஞ்சந்தன மாலை அணிந்தவளாகவும் காட்சி தருகிறாள். மாணிக்கக் கற்கள் பதித்த கிரீடமும் செவ்வொளியையே பரப்புகிறது. கருணை பொழியும் முக்கண்களும் நான்கு திருக்கரங்களும் கொண்டு விளங்குகிறாள் வஜ்ரேச்வரீ. பாசாங்குசங்களை தனது மேற்கைகள் இரண்டில் தரித்து, இடது கையில் கரும்பு வில்லையும், வலக்கையில் மாதுளம் பழத்தையும் தரித்தபடி தனது யந்த்ரம் பதிக்கப்பட்ட சிம்மாசனத்தின் மீது வீற்றிருக்கிறாள். தேவியைப் போலவே தோற்றம் கொண்ட சக்தி கணங்கள், சூழ்ந்திருக்க, தேவியின் சிம்மாசனமோ, குருதிக்கடலின் நடுவே பயணிக்கும் தங்க நிற படகின் மேல் மெதுவாக அசைந்தாடுகிறது.

அறிவுக்கு இவளே அதிதேவதை. அறிவு மயக்கமே மாயை. அந்த மாயையை வென்று ஞான அறிவை ப்ரகாசிக்கச் செய்வதே வஜ்ரேச்வரியின் பணி. வஜ்ரம் என்றால் வைரம் என்று அர்த்தம். வைரம் உறுதியான ஒன்று; ஒளிமிக்கது; விலைமதிக்க முடியாதது. சித்தத்தை ஒருநிலைப்படுத்தி இவளை எண்ணுவோர்க்கு, வைரம் போன்ற உறுதியான உள்ளமும், தன்னிகரில்லாத புகழும், ஞானமும் கிட்டும். இவளை வழிபடுவதால் வாழ்வில் எதிர்ப்படும் தீமைகள் அகலும். தீமை என்பது துன்பம் மட்டும் அல்ல; நாம் பண்ணிய பழைய வினைகள், அதனால் நாம் அனுபவிக்கும் துன்பம், நோய், வறுமை, எதிரிகள் தொல்லை, எதிர்ப்புகள்... உட்பட நம் மனத்துள் தோன்றும் தகாத எண்ணங்களும் தீமைதான்.

எந்த வடிவில் இவை இருந்தாலும், வஜ்ரேச்வரி அவற்றை அழித்து விடுகிறாள். தன் பக்தன் தடையேதுமில்லாமல், சிந்தை முழுவதையும் வழிபாட்டில் செலுத்தும்படியான சூழ்நிலையைத் தருகிறாள். சகலவிதமான ஐஸ்வர்யங்களையும் வாரி வழங்கி அவனை இன்ப மயமாக்குகிறாள். அறியாமையையும் போக்குகிறாள். ஞானிகளின் மனத்தையும் தன் சக்தியால் ஆட்டுவிக்கும் தன்மைக்குத்தான் மாயை என்று பெயர். அது ஒழிந்தால் மட்டுமே பூர்ண ஞானம் சித்திக்கும். இந்த மாயை ஒரு சாதகனை தவறான வழியில் இட்டுச் செல்லவும் வாய்ப்பு உண்டு. அப்படி குழப்பம் உண்டாகும் வேளையில் இவளை த்யானித்தால், அம்பிக்கை அபயம் தந்து நல்வழி காட்டுவாள்.

வஜ்ரேச்வரி நித்யாவுக்கான அர்ச்சனை

ஓம் மஹாவஜ்ரேச்வர்யை நம
ஓம் நித்யாயை நம
ஓம் விதிஸ்தாயை நம
ஓம் சாருஹாஸின்யை நம
ஓம் உஷாயை நம
ஓம் அநிருத்த பத்ன்யை நம
ஓம் ரேவத்யை நம
ஓம் ரைவதாத்மஜாயை நம
ஓம் ஹலாயுத ப்ரியாயை நம
ஓம் மாயாயை நம
ஓம் கோகுலாயை நம
ஓம் கோகுலாலயாயை நம
ஓம் க்ருஷ்ணானுஜாயை நம
ஓம் க்ருஷ்ணரஜாயை நம
ஒம் நந்த துஹிதாயை நம
ஓம் ஸுதாயை நம
ஓம் கம்ஸ வித்ராவிண்யை நம
ஓம் க்ருத்தாயை நம
ஓம் ஸித்த சாரண ஸேவிதாயை நம
ஓம் கோக்ஷீராங்காயை நம
ஓம் த்ருதவத்யை நம
ஓம் பவ்யாயை நம
ஓம் கோபஜன ப்ரியாயை நம
ஓம் சாகம்பர்யை நம
ஓம் ஸித்தவித்யாயை நம
ஓம் வ்ருத்தாயை நம
ஓம் ஸித்திகர்யை நம
ஓம் க்ரியாயை நம
ஓம் தாவாக்னயே நம
ஓம் விச்வரூபாயை நம
ஓம் விச்வேச்யை நம
ஓம் திதி ஸம்பவாயை நம
ஓம் ஆதார சக்ர நிலயாயை நம
ஓம் த்வாரசாலாயை நம
ஓம் அவகாஹின்யை நம
ஓம் ஸூக்ஷ்மாயை நம
ஓம் ஸூக்ஷ்மதராயை நம
ஓம் ஸ்தூலாயை நம
ஓம் ஸுப்ரபஞ்சாயை நம
ஓம் நிராமயாயை நம
ஓம் நிஷ்ப்ரபஞ்சாயை நம
ஓம் க்ரியாதீதாயை நம
ஓம் க்ரியா ரூபாயை நம
ஓம் பலப்ரதாயை நம
ஓம் ப்ராணாக்யாயை நம
ஓம் மந்த்ர மாத்ரே நம
ஓம் ஸோம ஸூர்யாம்ருத ப்ரதாயை நம
ஓம் சந்த க்யாதாயை நம
ஓம் சித் ரூபாயை நம
ஓம் பரமானந்த தாயின்யை நம
ஓம் நிரானந்தாயை நம

வஜ்ரேச்வரியை ஆராதனை செய்ய  வசந்த காலமும் (சித்திரை-வைகாசி) க்ரீஷ்ம காலமும் (ஆனி-ஆடி) விசேஷமானவை. முறையான உபதேசம் பெற்று மூன்று லட்சம் முறை இவளது மூலமந்த்ரத்தை ஜபம் செய்து, முப்பதாயிரம் ஹோமத்தை கொன்றை, மகிழம், இலுப்பை, சென்பகம் ஆகிய பூக்களை த்ரிமதுவினுடன் சேர்த்து ஹோமம் செய்து, அந்தணர்களுக்கு உணவும் அளித்து, மணமுள்ள சந்தனம், கஸ்தூரி, குங்குமப்பூ ஆகியவை கலந்த சுகந்த ஜலத்தால் தர்ப்பணமும் செய்தால் வஜ்ரேச்வரி அம்பிகை ப்ரீதியாவாள்.

த்ரிமதுரத்தில் செந்தாமரைப் பூக்களைத் தோய்த்து ஹோமம் செய்தால் செல்வவளம் கிடைக்கும். செங்கழுநீர், செண்பகப்பூ ஆகியவற்றை தேனில் தோய்த்து செய்யும் ஹோமத்தால் இந்த்ரனுக்குச் சமமாக வாழும் ப்ராப்தி கிட்டும். எள்ளினால் செய்யும் ஹோமம் ஆரோக்கியத்தைக் கொடுக்கும்.

மூன்று ஜன்ம நட்சத்திர தினங்களில் அருகம்புல், சீந்தில் கொடி ஆகியவற்றைக் கொண்டு ஹோமம் செய்ய ஆயுள் விருத்தியாகும்; செல்வவளம் பெருகும்; புகழ் கிட்டும்.

நெய்  பாயாஸம், பால்- இவற்றால் செய்யப்படும் ஹோமம் சௌபாக்யத்தைக் கொடுக்கும். அருகம் புல்லை த்ரிமதுரத்தில் தோய்த்து செய்யும் ஹோமம் வியாதியை ஒழிக்கும். வஜ்ரேச்வரியை அவளது யந்த்ரத்தில் ஆராதித்து, ஹோமம் செய்து பூஜிப்பவர்க்கு எதிரித் தொல்லை என்பதே இருக்காது.

மஹாவஜ்ரேச்வரி நித்யாவுக்கான பூஜை
முதலில் ஸ்ரீலலிதா தேவியை மகாநித்யாவாக தியானிக்க வேண்டும்.

யா பஞ்சதச்யாத்மக மந்த்ர ரூபா
பஞ்சோபசார ப்ரிய மானஸாம்பா
பஞ்சாக ஹாத்ரீம் மஹதீம் சிவாம்தாம்
அ கார ரூபாம் ப்ரணமாமி நித்யாம்

என்று கூறி லலிதா தேவியின் படத்துக்கோ யந்த்ரத்துக்கோ பூக்களைப் போடவும். பின்னர் சந்தனம் குங்குமத்தால் பொட்டு இடவும். பின்னர் அன்றைய நித்யாவான வஜ்ரேச்வரி நித்யாவை, அவளது யந்த்ரத்திலோ, படத்திலோ த்யானிக்கவும்.

வஜ்ரேச்வரீம் வஜ்ரதரேந்த்ர மந்த்ர லக்ஷ்யாம்
வஸிஷ்டாதி மஹர்ஷி பூஜ்யாம்
வரிஷ்டமன்னத ஸுக ப்ரதாத்ரீம்
ஊகாரரூபாம் ப்ரணமாமி நித்யாம்

என்று கூறி, வஜ்ரேச்வரி நித்யா தேவியின் படத்துக்கோ யந்த்ரத்துக்கோ பூக்களைப் போடவும். பின்னர் சந்தன குங்குமத்தால் பொட்டு வைக்கவும்.

மேற்கூறிய நாமாவைச் சொல்லி செம்பருத்திப் பூக்களால் அர்ச்சனைச் செய்து, பின்னர் தூபம் தீபம் காட்டவும். நைவேத்யமாக தேன் சமர்ப்பிக்கவும். (முடிந்தால் தேங்காய் பழம், வெற்றிலை பாக்கு நைவேத்யம் செய்ய வேண்டும்). பின்னர் வஜ்ரேச்வரி தேவியின் காயத்ரியைக் கூறி கற்பூர ஆரத்தி செய்து பூக்களைப் போட்டு ப்ரார்த்தனை செய்யவும்.

மஹாவஜ்ரேச்வரி தேவிக்கு உகந்தவை:
நாட்கள் : வளர்பிறை சஷ்டி, தேய்பிறை தசமி
புஷ்பம்: செம்பருத்தி, நைவேத்யம்: தேன்

மஹாவஜ்ரேச்வர்யை வித்மஹே வஜ்ரநித்யாயை தீமஹி
தன்னோ நித்யா ப்ரசோதயாத்
என்பது இவளது காயத்ரி மந்த்ரம்.

 
மேலும் துளிகள் »
temple news
யுத்த பூமியில் ராவணனே ஸ்ரீராமனைக் கண்டு வியக்கிறான்; சத்ரோ: ப்ரக்க்யாத வீர்யஸ்ய ரரூஜ நீயஸ்ய விக்ரமை: ... மேலும்
 
temple news
மனிதர்கள் எவ்வாறு வாழ வேண்டும் என்பதை உணர்த்துவதற்காக, பகவான் மகாவிஷ்ணு எடுத்த உன்னதமான அவதாரம் ... மேலும்
 
temple news
விஷு காலம் என்பது பகல், இரவு பொழுது சம அளவாய் இருக்கும் நாள. சித்திரை மற்றும் ஐப்பசி விஷு, புண்ணிய ... மேலும்
 
temple news
குன்று இருக்கும் இடம் எல்லாம் குமரன் இருக்குமிடம் என்பர். மலையும் மலைசார்ந்த இடம் குறிஞ்சி. ... மேலும்
 
temple news
பித்ருக்கள் எனப்படும் முன்னோர் உலகில் நமக்கு வளர்பிறை பகல் நேரமாகவும், தேய்பிறை இரவு நேரமாகவும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar