Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பிறவியின் பயனை அடைய என்ன செய்ய ... எந்த மரத்துப் பிள்ளையார் என்ன பலன் தருவார்? எந்த மரத்துப் பிள்ளையார் என்ன பலன் ...
முதல் பக்கம் » துளிகள்
பெற்றோர் மற்றும் பிள்ளைகள் ஒருவருக்கொருவர் எதிர்பார்ப்பது என்ன?
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

03 டிச
2013
02:12

பெற்றோர் பிள்ளைகளிடம் எதிர்பார்ப்பது: மகனே, மகளே! உங்களை உலகிற்குத் தந்த எங்களின் பெருமையை, மதிப்பை எப்போதும் மதித்து நடந்து கொள்ளுங்கள். பெரியவர்கள் அனுபவசாலிகள். ஆகவே உங்களது நன்மைக்காகச் சில அறிவுரைகளைச் சொல்வார்கள் என்பதை நம்புங்கள்.
* ஆடி ஓடி விளையாடுங்கள். ஆனால் உங்களுக்கு அதிலேயே பொழுது கழிந்துவிடக் கூடாது என்பதால் நாங்கள் அவ்வப்போது குறுக்கிடுவோம். பொறுத்துக் கொள்ளுங்கள்!
* செய், சரி, நல்லது என்பதைச் சொல்ல நாங்கள் தயார். இடையிலேயே சில வேண்டாம், கூடாது என்று வருவதெல்லாம் இயல்புதான். பெரிதுபடுத்தாதீர்கள்.
* எல்லா இடத்திற்கும் உங்களை அழைத்துச் செல்ல இயலாமல் போகலாம். அதற்காக வருத்தப்பட வேண்டாமே!
*நீங்கள் தனிமையை விரும்பலாம். ஆனால் உங்கள் தனிமை உங்களுக்கு நன்மை தராவிட்டால் என்ன செய்வது? அதனால்தான் நாங்கள் பக்கத்தில் துணைக்கு நிற்கிறோம். எங்கள் கவலை எங்களுக்கு.
*நீங்கள் சொல்லும் பதிலை நாங்கள் கேட்டுக் கொண்டுதான் இருக்கிறோம். நம்புங்கள். வேறு எங்கு பார்த்தாலும் கவனம் எங்கள் பிள்ளைகளான உங்கள் மீதுதான்.
*மொபைலில் நீங்கள் நீண்ட நேரம் பேசுவது தவறல்லதான். ஆனால் காலத்தின், பணத்தின் அருமையை யோசியுங்கள்.
*நல்ல பொருளைத் தொலைத்து விட்டு வந்தால் கொஞ்சவா முடியும்? திட்டுவோம். அடுத்து அது மாதிரி நிகழாமல் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றுதான். பாசமில்லாத கொடியவர்கள் அல்லவே நாங்கள்?
* உங்களுக்குப் பிடித்தமான உடைகளை வாங்கித் தருகிறோம். ஆனால் அது நம் குடும்ப கவுரவத்திற்கு ஏற்றதாக இருக்குமா என்று யோசியுங்கள்.
* உங்களை அரவணைப்பதைவிட, உங்கள் இனிய பேச்சைக் கேட்பதை விடவா உலகில் எங்களுக்குப் பேரின்பம் உள்ளது? அந்த வாய்ப்பை அவ்வப்போது தாருங்கள்.
*நீங்கள் சினிமாவில் வரும் ஆரவார இசையை ரசிக்கலாம். அதே நேரம் பெரியவர்களான நாங்கள் ரசிக்கும் பக்திப் பாடல்களையும் கேட்க மறுக்காதீர்கள். கேலி செய்யாதீர்கள்.
*உங்களுக்கு உயர்ந்த லட்சியம் காட்டவும் நற்பண்புகளை உணர்த்தவும் நாங்கள் முன்மாதிரியாக இருக்கிறோம் என்பதை மறவாதீர்கள்.
* கண்மணிகளே! டி.வி. பாருங்கள். தடுக்கவில்லை. மனதைக் கெடுத்துவிடும் சிலவற்றை நீங்கள் பார்த்துவிடக் கூடாதே என்ற பயம் எங்களுக்கு உள்ளது. அதனால்தான் சதா டி.வி பார்க்காதே என எச்சரிக்கிறோம், நச்சரிக்கவில்லை.
*உங்கள் நன்மைக்காக உங்களிடம் சுறுசுறுப்பு, வேலையில் திறமை, சுகாதாரமான பழக்கங்கள் இவற்றை நாங்கள் எதிர்பார்ப்பது தவறா?
* நாங்கள் வேலையாக இருக்கும்போது நீங்கள் அருகில் வந்து இதை அடுக்கவா, இதை வெட்டித்தரவா, அதைக் கொண்டு போய் அங்கு வைக்கவா என்று கேட்டு சிறு உதவி செய்து உங்கள் அன்பை இப்படியும் வெளிப்படுத்தலாமே!
* உங்கள் ஆற்றலைப் புரிந்து கொள்ளுமாறு உங்களுக்கு எந்தத் துறையில் ஆர்வம் உள்ளது என எங்களிடம் கூறுங்கள்.
* வாய்ப்புகளையும் வசதிகளையும் நாங்கள் செய்து தருகிறோம். சாதனைகளை உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறோம்!
* படிப்பின் சுமை, வீட்டுச்சுமை அதிகம் உள்ளதால் உங்களை நாங்கள் வீட்டு வேலை செய்ய அதிகம் ஏவுவதில்லை. உங்களைப் புறக்கணிக்கிறோம் என்று நினைக்காதீர்கள்.
* நீங்கள் பெரியவர்களான எங்களைக் கேலி செய்வதாகவோ, அவமானப்படுத்துவதாகவோ தோன்றும்படிகூட நடந்து விடாதீர்கள். எங்களால் அவற்றைக் தாங்கிக் கொள்ள முடியாது.
*எங்கள் கவலைகளை எல்லாம் நாங்கள் உங்களிடம் சொல்வதில்லை. பிஞ்சுகளான உங்களிடம் பிரச்னை, கவலை என்று திணித்து வருத்தப்பட வைக்க நாங்கள் விரும்பவில்லை. இது பெருந்தன்மை என்று புரிந்து கொள்ளுங்கள்.

1. மகனே, மகளே! உங்களோடு விளையாட எங்களுக்கும் ஆசைதான். வேலைச் சுமைகள் இருக்கும்போது, விளையாட வர இயலாவிட்டால் எங்கள் நிலைமையை அனுசரித்து நடந்து கொள்ளுங்கள்.

2. உங்களுக்குத் தந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற நாங்கள் பாடுபடுகிறோம். நிறைவேற்ற முடியாது என்றால் வாக்குறுதி தரத் தயங்குவோம். நம் குடும்ப நிதிநிலைமை, செலவுகள், சந்தர்ப்பம், சூழ்நிலை இவற்றை அறிந்து நடந்து கொள்ளுங்களேன்.

3. நாங்கள் கோயிலில் பூஜை செய்வது உங்களுக்காகவே, நீங்களும் எங்களுக்காக வேண்டலாமே!

4. எங்களுடன் சிறிது நேரம் அமர்ந்து எங்கள் பழங் கதைகளைக் கேட்டால் என்ன? அதில் எங்கள் உள்ளம் பூரிக்குமே! போரடிக்குதுப்பா என்று கூறி ஓடாதீர்கள்.

5. வாழ்வை அமைத்துக் கொள்வதில் நட்புக்கு பெரும் பங்குண்டு. உங்கள் நண்பர்களை எங்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்.

6. நீங்கள் படித்த செய்திகள், கதைகள், ரசித்த படக் காட்சிகள், நடனங்கள் குறித்து எங்களிடமும் பகிர்ந்து கொண்டால் என்ன?

7. எந்தப் பாடத்தையும், எந்த ஆசிரியரையும் வெறுக்கக் கூடாது என்று நாங்கள் சொல்வது உங்கள் நன்மைக்காகவே. குருவை எப்போதும் மதித்திடுங்கள்.

8. நண்பர்களுடன் நீங்கள் எங்கும் செல்லலாம். பேசலாம். அதற்கு எங்கள் அனுமதி உண்டு.

9. உங்களை முழுமையாக நம்புகிறோம். எங்கள் நம்பிக்கை பொய்க்காகதபடி நீங்கள் நடந்து கொள்ளுங்கள்.

10. நாங்கள் உங்களிடம் சிறு குறைகளைக் கண்டால் கூட சுட்டிக் காட்டுகிறோம். ஏன்? குறைகள் நீங்கி நீங்கள் அப்பழுக்கற்றவர்களாக மாற வேண்டித்தான்.

11. இன்றைய போட்டி உலகில் திறமைசாலியே முன்னுக்கு வர முடியும். எங்கள் பிள்ளைகள் திறமைசாலிகளாகத் திகழ வேண்டும் என நாங்கள் எதிர்பார்ப்பது தவறா?

12. தினமும் ஒருமுறையாவது எங்களுடன் சேர்ந்து உண்ணுங்கள். வளரும்போது இந்த வாய்ப்புகள் குறையும். வேலை, திருமணம் என்று ஆகி பிரிந்து செல்ல நேரிடும்.

13. உங்களுக்கு நாங்கள் சிறந்த பாதுகாவலர்கள். உங்கள் கவலையை எங்களிடம் கொட்டிவிடுங்கள். மனதில் வைத்துக் கொண்டு வேகாதீர்கள்.

14. உங்கள் நண்பர்களிடம் எங்கள் பெற்றோர்கள் பாசமானவர்கள், நல்லவர்கள் என்பதை நீங்கள் முதலில் உணர்ந்து பின் அவர்களுக்கும் புரிய வையுங்கள்.

15. நாங்கள் கோபத்தில் ஏதாவது வார்த்தைகளைப் பேசிவிட்டால், சூழ்நிலையைப் புரிந்து கொண்டு அதை மனதிலிந்து நீக்கிவிடுங்கள். பின் நீங்கள் அப்படி பேசியிருக்க வேண்டாம் என எடுத்துச் சொல்லுங்கள். நாங்களும் சாதாரண மனிதர்கள்தானே!

16. சந்தையில் காய்கறி வாங்குவது, தபால் ஆபீஸ், பேங்க் செல்வது போன்ற சிறு உதவிகளைச் செய்து பெரிய மகிழ்ச்சியை எங்களுக்குத் தரலாமே! உங்கள் தகுதியை நிரூபிக்கவும் வாய்ப்பு கிடைக்குமே?

மேலும் இந்த அனுபவங்கள் உங்கள் வாழ்க்கைக்கும் உதவும்.

17. புத்தகப் புழவாக இருக்காதீர்கள்.

18. நல்ல சமையல் செய்தால் அம்மாவைப் பாராட்டுங்கள். அழகான ஓர் உடைவாங்கித் தந்தால் அப்பாவுக்கு அன்புடன் ஒரு முத்தம் தரலாமே! நோட்டைத் தைத்துத் தந்த தங்கைக்கு ஒரு ரோஜாப்பூ! பட்டன் தைத்துத் தந்த பாட்டிக்கு ஒரு சபாஷ். இப்படி உங்களால் முடிந்ததைச் செய்து நன்றியைத் தெரிவிக்கலாமே!

பிள்ளைகள் பெற்றோரிடம் எதிர்பார்ப்பது : * அம்மா அப்பாக்களே, உங்கள் பிள்ளையாகிய நான் சொல்லும் சில நல்ல விஷயங்களைக் காதுகொடுத்துக் கேளுங்கள். நான் ஏதாவது நல்ல வேலையைச் செய்தால் என்னைத் தவறாமல் பாராட்டுங்கள்; மனம் திறந்து ஊக்குவியுங்கள்.
* உங்களுக்குச் சிலவற்றைக் கற்றுத் தர என்னையும் அனுமதியுங்கள். நீங்களே என்றும் கற்றுத் தருபவராக இருக்காதீர்கள்.
* பொது இடங்களில் என் மீது உங்களின் அதிகப் பாசத்தைக் கொட்டி வெளிப்படுத்தாதீர்கள். அப்போது நான் நெளிவேன்.
* உங்கள் இளம்வயதில் நீங்கள் செய்ததைப் போன்றே என்னையும் சில சோதனைகளை மேற்கொள்ளவிடுங்கள்.
* நான் அதிகம் விரும்பும் விளையாட்டுக்கள், கொஞ்சம் ஊர் சுற்றுவது போன்றவற்றை இழக்கச் செய்யாதீர்கள்.
* என் தனிமைக்கும் சிறிது மதிப்பளியுங்கள்.
* நான் ஏதாவது கேட்டுவிட்டால் உடனே, இல்லை அல்லது உனக்கு அது வேண்டாம் என்பதைவிட, சரி, செய், நான் பார்த்துக் கொள்கிறேன் போன்ற வார்த்தைகளை அதிகம் கூறுங்கள்.
* சிறிய காரியங்களுக்காக நீங்கள் செல்லும் போது, என்னையும் உடன் அழைத்துச் செல்லுங்கள். எனக்கும் அவற்றைக் கற்றுக் கொடுங்கள்.
* நான் பார்க்க வேண்டிய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை நிர்ணயத்துச் சொல்லுங்கள். ஒரேடியாக டி.வி.யைப் பார்க்காதே என்று சொல்லிவிடாதீர்கள்.
* வாழ்நாள் முழுவதற்கும் நிலைக்கும் திறனை அல்லது சிறப்பு ஆற்றலை நான் பெற உதவுங்கள்.
* அம்மாவே, என்னிடம் உங்களுக்குள்ள எதிர்பார்ப்புகளுக்கு என்னிடம் காரணம் கூறி, என் வளர்ச்சியில் உங்களோடு என்னையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.
* குடும்ப வேலைகள் முன்னிட்டு நான் எல்லோரிடமும் நெருக்கமான உணர்வை ஏற்படுத்திக் கொள்ள உதவுங்கள்.
* நல்ல விஷயங்களை எனக்கு விளக்கிக் கூற நேரம் ஒதுக்குங்கள். விளக்கினால் மட்டும் போதாது, நான் அதைப் புரிந்து கொண்டேனா என என்னை விசாரியுங்கள்.
* சிறிது வளர்ந்ததும் சில சமயம் நான் விசித்திரமாக உணர்கிறேன். எனவே நான் விசித்திரமாக நடந்து கொள்வதை மனதில் கொள்ளாதீர்கள்.
* சில நேரங்களில் என்னை விட்டு விலகியிருங்கள். எப்போதும் என்னைப் பொத்திப் பொத்தி வைக்காதீர்கள்.
* சில சமயங்களில் நான் நடந்து கொள்வது உங்களைக் கேலி செய்வது போல் இருக்கலாம். என்னை அறியாமலே நடந்துவிடுகிறது. இதை ஒரு பொருட்டாக எண்ணாதீர்கள்.
* குடும்பப் பிரச்னைகள் அல்லது மற்ற பிரச்னைகள் பற்றியும், பணப் பிரச்னை, வீட்டுப் பிரச்னை போன்றவற்றைப் பற்றியும் என்னிடம் சொல்லுங்கள். இவற்றை என்னிடம் கூறாமல் தவிர்த்தால் பிறகு தானாகத் தெரியவரும்போது என் மனம் மிகவும் புண்படும்.
* பல விளையாட்டுகளைக் குடும்பத்துடன் விளையாடுவது மகிழ்ச்சியாக இருக்கும். அதற்கு நேரம் ஒதுக்குங்கள்.
* நீங்கள் என்னிடம் கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றுங்கள்.
* நான் தவறு செய்யும்போது, தவறைப் புரிய வைத்து மன்னிப்பு கேட்கப் பழக்குங்கள்.
* உணவு விஷயத்தில் நான் கேட்டுக் கொண்டிருப்பதைத் தொடர்ந்து கொடுக்காதீர்கள்.
* நீங்கள் கேள்வி கேட்கும்பொழுது, நான் சொல்லும் பதிலை உன்னிப்பாகக் கேளுங்கள்.
* என்னிடம் நீங்கள் காட்டும் அன்பை வெளிப்படுத்தும் சிறந்த வழி நீங்கள் என்னைக் கவனித்துக் கேட்பதுதான்.
* எனக்காகக் கடவுளிடம் பிரார்த்தனை செய்து கொண்டிருங்கள். அது எனக்குப் பாதுகாப்பு உணர்வைத் தரும்.

1. பெற்றோர்களே, என் நண்பர்களுடன் அதிக நேரம் மொபைலில் நான் பேசினால் அது தவறு என்பதை மென்மையாகப் புரிய வையுங்கள்.

2. என் சகோதர-சகோதரிகள் மற்றும் நண்பர்கள் என்று என்னை யாருடனும் ஒப்பிடாதீர்கள். நாம் ஒவ்வொருவரும் மாறுபட்டவர்கள். அதை உணர்ந்து எங்களைத் தனித்தனியாகப் பாருங்கள்.

3. நான் ஏதேனும் தவறு செய்திருந்தால் அதற்காகச் சிந்திக்க எனக்கு நேரம் தாருங்கள். பின்னர் நான் செய்த தவறு என்ன, நான் செய்யத் தவறியது என்ன என்பதை என்னிடம் விளக்குங்கள்.

4. நான் கவுரவக் குறைவான ஆடையை அணிய மாட்டேன். ஆனாலும் எனக்குப் பிடித்த உடைகளை வாங்கிக் கொடுங்கள்.

5. பெற்றோர்களாகிய உங்களின் அரவணைப்பை நான் என்றும் விரும்புகிறேன்.

6. நான் விரும்பும் இசையையோ அல்லது உடைகளையோ கேலி செய்யாதீர்கள்.

7. மிக உயர்ந்த நற்பண்புகளை எனக்கு உணர்த்துங்கள்.

8. குறிப்பிட்ட ஒன்றில் மட்டும் என்னைத் திணிக்காதீர்கள், பல்வேறு செயல்பாடுகள் பற்றி எனக்குத் தெரிவியுங்கள். அவற்றில் நான் விரும்புவதைத் தேர்ந்தெடுக்கவிடுங்கள்.

9. நீங்கள் என்னை விரும்புவதையும், என்னைப் பற்றிப் பெருமைப்படுவதையும் அடிக்கடி சொல்லிக் கொண்டிருங்கள். அது என்னை உற்சாகப்படுத்தும்.

10. பெரியவர்களிடம் எப்படி நடந்து கொள்வது என்று எனக்குக் கற்பியுங்கள்.

11. நிதானம் இழந்து என் நண்பர்கள் முன்னிலையில் என்னைத் தாழ்வுபடுத்தாதீர்கள்.

12. என்னிடம் என்றும் நம்பிக்கை இழக்காதீர்கள்.

13. எனக்குத் தேவையான பணத்தை நானே சம்பாதித்துக் கொள்ள என்னை ஊக்குவியுங்கள்.

14. பேச்சாலும் எழுத்தாலும் என்னை நானே எப்படி வெளிப்படுத்திக் கொள்வது என்று எனக்குக் கற்பியுங்கள். இதனால் என் சிந்தனைகள் சிறக்கும்.

15. அப்பாவே, அம்மாவே! பிரார்த்தனை நேரத்தில் நாம் அனைவரும் சேர்ந்து ஒன்றாகப் பிரார்த்திக்கலாமா?

16. பல மதங்கள், கலாச்சாரங்கள், இனங்கள் பற்றி நான் அறிந்து கொள்ள எனக்கு வாய்ப்புகளை ஏற்படுத்துங்கள்.

17. என் நண்பர்களைத் தெரிந்துகொண்டு நம் குடும்ப நிகழ்ச்சிகளில் அவர்களையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.

18. சினிமா பார்த்த பின்னர் அவற்றைப் பற்றி என்னோடு கலந்துரையாடுங்கள். இதனால் விஷயங்களை அலசுவது பற்றி நான் கற்றுக் கொள்ள முடியும்.

19. பூதம், பரீட்சை போன்ற என் பயங்கள் பொருளற்றவை என்பதைத் தகுந்த காரணம் கூறி அந்தப் பயத்தைப் போக்குங்கள்.

20. என் முடி அலங்காரத்திலும், உடையிலும் என்னைக் கொஞ்சம் என் போக்கில் விட்டுவிடுங்களேன்.

21. கணக்குப் பாடத்தையோ, வேறு எந்தப் பாடத்தையோ நான் குறை கூறினாலோ எனக்கு போரடித்தாலோ அவற்றில் ஆர்வம் கொள்ளச் செய்யுங்கள்.

22. என் கற்பனைகள் உங்கள் கற்பனைகளிலிருந்து வேறுபட்டவை. என் கற்பனைகளைத் தொடர ஊக்கமளியுங்கள்.

23. நான் அவசரப்பட்டுப் பொருள்களை வாங்கி விரயம் செய்து விடுவேன். அவற்றை அன்பால் தடுத்திடுங்கள்.

24. நான் நேர்மையாக நடக்க ஊக்கப்படுத்துங்கள்.

25. என் வீட்டுப் பாடங்களைச் செய்ய அமைதியான இடத்தையும், உரிய நேரத்தையும் நான் பெற்றுள்ளேனா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

26. நான் அறிவை வளர்த்துக் கொள்ளத் தேவையான எல்லாவற்றையும் பற்றி என்னிடம் பேசுங்கள்.

 
மேலும் துளிகள் »
temple news
ஒவ்வொரு மாதமும் தேய்பிறை சதுர்த்தியை, சங்கடஹர சதுர்த்தியாக அனுஷ்டிப்பது உங்களுக்கு தெரியும். ... மேலும்
 
temple news
முருகனுக்குரிய விரதங்களில் பங்குனி உத்திரமும் ஒன்று. இந்நாள் சாஸ்தா, சிவன், விஷ்ணு ஆகிய ... மேலும்
 
temple news
பங்குனி மாதத்தில் உத்திர நட்சத்திரமும், பவுர்ணமியும் சேர்ந்து வரும் நாளே பங்குனி உத்திரமாகும். இது ... மேலும்
 
temple news
பவுர்ணமியில் சந்திரன் 16 கலைகளுடன் பரிபூரணமாக பிரகாசிக்கும். இன்று கிரிவலம் சென்று வழிபட மனஅழுத்தம், ... மேலும்
 
temple news
இன்று பங்குனி பிரதோஷ விரதம். சிவனை வழிபட எல்லாம் நன்மையும் நடக்கும்.பிரதோஷ விரதம் இருந்தால், சிவன் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar