Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் ... சபரிமலை பக்தர்கள் வசதிக்காக நடமாடும் மருத்துவ மையங்கள் துவக்கம்! சபரிமலை பக்தர்கள் வசதிக்காக ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கழுகுமலை கிரிவலம்: 1500 ஆண்டுகளுக்கு பிறகு சித்தர்கள் பங்கேற்றதாக தகவல்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

17 டிச
2013
10:12

கழுகுமலை: கழுகுமலையில் நேற்று நடந்த பவுர்ணமிகிரிவலத்தில் 18 சித்தர்கள் கலந்துகொள்ள இருப்பதாக இணையதளம் ஒன்றில் செ÷திவெளியிடப்பட்டதை தொடர்ந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பவுர்ணமி கிரிவலம் வந்தனர். சுமார் 15 நூற்றாண்டுகளுக்கு ஒருமுறை கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோயில் அமைந்துள்ள மலைக்குன்றை சுற்றி 18 சித்தர்கள் ஒன்றாக கிரிவலம் வருவதாக நம்பப்படுகிறது. இவர்கள் யார் வடிவில் எவ்வாறு இருப்பார்கள் என்றும், நம்முடன் கிரிவலம் வரும் நபர்களாக கூட இருக்கலாமென்றும் பக்தர்கள் கூறுகின்றனர். ஒவ்வொரு 1500 ஆண்டுகளுக்கு ஒருமுறையும் மூன்று மார்கழி மாத பவுர்ணமியில் முதன்மை பதிணென் சித்தர்களும் கிரிவலம் வருவதாக கூறுகின்றனர். இதில் சுமார் 15 நூற்றாண்டுகளுக்கு பின்னர் கடந்த 2011ம் ஆண்டு தமிழகத்திலிருந்து 500 பக்தர்களும், 2012ம் ஆண்டு 700 பக்தர்களும், நேற்று நடந்த கிரிவலத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்களும் கலந்து கொண்டனர். இக்கிரிவலத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் நினைத்த காரியம் அனைத்தும் நிறைவேறியதாக ஆன்மீகக்கடல் என்ற இணையதளத்தில் கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த இணையதளத்தில் கழுகுமலையில் பதிணென் சித்தர்கள் சுமார் 1500 ஆண்டுகளுக்கு பின்னர் கிரிவலம் வருவதாகவும், அதில் அனைவரும் கலந்து கொள்ளுமாறும் அறிவிக்கப்பட்டு இருந்தது. நமது முன்னோர்களான பதிணென் சித்தர்கள் கலந்து கொள்ளும் கிரிவலம் நடப்பதால் முதல்நாளே வந்து தங்கியிருந்து தவறாது கலந்து கொள்ளவும், குடும்பத்திற்கு 5 கிலோ நவதானியங்களும் கொண்டு வரவும் அறிவுறுத்தப்பட்டிருந்தது. தவிர புயல் மற்றும் மழை காலமாக இருப்பதால் முன்னேற்பாடுகளுடன் வரும்படியும், சித்தர்கள் சிறப்பு கிரிவலத்தில் கலந்து கொண்ட பின்னர் வேறு எங்கும் செல்லாமல் நேராக வீட்டிற்கு செல்லும்படியும் குறிப்பிடப்பட்டிருந்தது. இதன்படி நேற்று சுமார் மதியம் 3 மணியளவில் கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோயில் மேலவாசல் முன்பு புளியங்குடி அருகேயுள்ள முள்ளிகுளம் சித்தர் மாரியப்பன் தலைமையிலான குழுவினர்களுடன் பதிணென் சித்தர்கள் சிறப்பு கிரிவலம் துவங்கியது. தமிழகத்தின் பல்வேறு பகுதியிலிருந்து வந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பைகளில் நவதானியங்களை கொண்டு வந்தனர்.

அவர்கள் கிரிவலம் சென்றபோது கிரிவலப்பாதையின் இருபுறமும் தானியங்களை உயிரினங்களுக்கு விதைத்தவாறும், பக்தி ஸ்லோகங்கள் உச்சரித்தவாறும் சென்றனர். முன்னதாக மலைக்குன்றின் மேற்குப்பகுதியிலுள்ள ஆறுமுக நகரிலுள்ள மிளகா÷ சித்தர் ஜீவசமாதிக்கு சென்று தரிசனம் செய்தனர். கிரிவலம் முடிந்த பின்னர் கழுகாசலமூர்த்தி குடவரைக் கோயிலில் சிறப்பு பூஜைகளும், சுவாமி தரிசனமும் செய்தனர். அன்னதானம் நடந்தது. கிரிவலத்தில் தமிழகத்தின் நெல்லை, விருதுநகர், தூத்துக்குடி, சென்னை, பாண்டிச்சேரி, கரூர், ஈரோடு, கோயம்புத்தூர், சிவகங்கை, காஞ்சிபுரம் உட்பட பல்வேறு மாவட்டங்களிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வந்தனர். பக்தர்கள் வந்த நூற்றுக்கணக்கான வாகனங்கள் ஆங்காங்கே நீண்டவரிசையில் நிறுத்தப்பட்டிருந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உடுமலை; உடுமலையில் பிரசித்தி மாரியம்மன் கோவிலில் தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. ஓம் சகதி பராசக்தி ... மேலும்
 
temple news
அழகர்கோவில்: மதுரை வண்டியூர் தேனுார் மண்டபத்தில் நேற்று மண்டூக முனிவருக்கு கருட வாகனத்தில் சாப ... மேலும்
 
temple news
xதஞ்சாவூர், தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே தமிழ் கடவுள் என போற்றப்படும் முருகனின் அறுபடை ... மேலும்
 
temple news
மானாமதுரை; சிவகங்கை மாவட்டம், மானாமதுரை வீர அழகர் கோவில் சித்திரை திருவிழாவில் நிலாச்சோறு ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்; பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள பாலமலை அரங்கநாதர் கோவிலில் சித்ரா பவுர்ணமியை ஒட்டி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar