Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அனுமன் வாலில் குங்குமம் வைத்து ... திருமணத்திற்குப்பொருத்தம் நீங்களே பார்க்கலாம்! திருமணத்திற்குப்பொருத்தம் நீங்களே ...
முதல் பக்கம் » துளிகள்
புராண, இதிகாசங்களை கதைவடிவில் கூறியது ஏன்?
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

23 ஏப்
2014
04:04

கதை கேட்பதென்றால் எல்லோருக்கும் பிடிக்கும். அதனால் தான் நம் முன்னோர்கள் கோயில்களில், இதிகாச, புராணங்களை கதைகளாகவே சொல்லி வந்தனர். அந்தப் புராணக்கதைகளில் பெரும் தத்துவ விஷயங்கள் புதைந்து கிடக்கின்றன. அதில் ஒன்று முதல் கடவுளான  விநாயகரின் கதை.  எமனுடைய பிள்ளை அனலன். எப்போதும் கொதித்துக் கொண்டே இருக்கும் அசுரனான அவன், வரம் ஒன்று பெற்றிருந்தான். யாருடைய உடம்பிலும் அவர்களுக்குத் தெரியாமல் புகுந்து சக்தியை உறிஞ்சி விடுவது என்பதே அந்த வரம். அவனது தொல்லை  தாங்காத தேவர்கள் விநாயகரிடம் சென்று,  அனலனிடம் இருந்து தங்களை காப்பாற்றும்படி முறையிட்டனர். விநாயகர் அவனை அப்படியே விழுங்கி விட்டார். அதனால், விநாயகரின் மேனி கொதித்தது. அகில உலகமுமே சூடாகத் தொடங்கியது. செய்வதறியாத தேவர்கள் பால், தயிர், அமிர்தம் என அவரின் திருமேனியில் சாத்தி குளிர்விக்க முயன்றனர்.

சந்திரன் தன் குளிர்ந்த கிரணங்களை விநாயகர் மீது செலுத்தினார். ஆனாலும், சூடு கொஞ்சம் கூடத் தணியவே இல்லை. அப்போது அத்ரி, பிருகு, குத்ஸர், வசிஷ்டர், கவுதமர், காஸ்யபர், ஆங்கிரஸர் என்னும் சப்த ரிஷிகளும் அங்கு வந்து, ஒரு சாண் அளவுள்ள 21 அருகம்புற்களை விநாயகர் மீது சாத்தினர். சூடு தணிந்து திருமேனி குளிர்ந்தது. உலகமும் அமைதி அடைந்தது. தேவர்களும், சப்தரிஷிகளும் விநாயகரிடம், ஆனைமுகக் கடவுளே! இதே போல அருகம்புல் சாத்தி உங்களை வழிபடுவோருக்கு எல்லா விதமான மங்களங்களையும் அருள வேண்டும், என வேண்டினர். அப்படியே ஆகட்டும் என்று விநாயகரும் அருள் புரிந்தார். அருகம் புல்லிற்கும், விநாயகருக்கும் உள்ள தொடர்பை விளக்கும் கதைகளில் இதுவும் ஒன்று. ஜபம், தவம், யோகம் போன்றவற்றில் ஈடுபடும் போது, குண்டலினி சக்தி தானாக மேலே எழும். உடலில் சூடு பரவி கொதிப்படையும். குளிர்ந்த நீரில் நீராடினால், சூடு தணியலாம். அதே சமயம், ஏறிய தவசக்தியும் இறங்கி விடும். பக்க விளைவு இல்லாமல் உடல் உஷ்ணத்தைத் தணிக்க என்ன வழி? அருகம்புல் தான்! அருகம்புல் கஷாயம், ஜூஸ் என்றெல்லாம் இப்போது பிரமாதப்படுகிறதே!  அனலன் கதையைச் சொல்லி, அருகம்புல்லில் முடித்ததற்கு இதுவே காரணம்.

 
மேலும் துளிகள் »
temple news
விழா என்ற சொல்லுக்கு விழித்திருப்பது என்று பொருள். உறங்கும் நேரத்தில் விழித்திருந்து தெய்வங்களுக்கு ... மேலும்
 
temple news
இந்த நோன்பை எல்லோரும் சிறப்பாக கொண்டாடுவர்கள் சித்திரை நட்சத்திரம், பௌர்ணமி தினத்தில் அல்லது ஒரு நாள் ... மேலும்
 
temple news
யுத்த பூமியில் ராவணனே ஸ்ரீராமனைக் கண்டு வியக்கிறான்; சத்ரோ: ப்ரக்க்யாத வீர்யஸ்ய ரரூஜ நீயஸ்ய விக்ரமை: ... மேலும்
 
temple news
மனிதர்கள் எவ்வாறு வாழ வேண்டும் என்பதை உணர்த்துவதற்காக, பகவான் மகாவிஷ்ணு எடுத்த உன்னதமான அவதாரம் ... மேலும்
 
temple news
விஷு காலம் என்பது பகல், இரவு பொழுது சம அளவாய் இருக்கும் நாள. சித்திரை மற்றும் ஐப்பசி விஷு, புண்ணிய ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar