Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பலன் தரும் பரிகாரங்கள்! நகரா என்ற இசைக்கருவி..!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
12 சங்கராந்திகள்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 ஜூலை
2014
04:07

சூரியன் ஒரு ராசியை கடந்து அடுத்த ராசிக்குள் நுழையும் வேளையே சங்கராந்தி. மாதப்பிறப்பும் இதுவே. அந்த வகையில் வருடத்திற்கு 12 சங்கராந்திகள் உண்டு.

1. தான்ய சங்கராந்தி (சித்திரை): சூரியன் மேஷராசியில் நுழையும் வேளையே தான்ய சங்கராந்தி. சூரியனை பூஜித்து தானிய தானம் செய்வதன் மூலம், ஆயிரம் அக்னி ஹோத்திரம் செய்த பலனை அடைவார்கள்.

2. தாம்பூல சங்கராந்தி (வைகாசி): சூரியன் ரிஷப ராசியில் நுழையும் வேளையே, தாம்பூல சங்கராந்தி. இந்த நாளில் சூரிய பூஜை செய்து, வெற்றிலை, பாக்கு, திரவியங்கள் வைத்து தம்பதிகளை பூஜித்து, அதை அளித்தல் மகா புண்ணியம்.

3. மனோதர சங்கராந்தி (ஆனி): சூரியன் மிதுன ராசியில் நுழையும் வேளை, மனோதர சங்கராந்தி, இந்த நாளில் சூரிய பூஜை செய்து, வெல்லம் வைத்து பூஜித்து, தானம் அளித்தால், ஆசைகள் நிறைவேறும்.

4. அசோக சங்கராந்தி (ஆடி): சூரியன் கடகராசியில் நுழையும் வேளையை, அசோக சங்கராந்தி என குறிப்பிடுவதுண்டு. இது விஸ்வத் புண்ய காலமாகும்.

5. ரூப சங்கராந்தி (ஆவணி): சூரியன் சிம்ம ராசியில் நுழையும் வேளை, ரூப சங்கராந்தி. இந்த வேளையில், சூரிய பூஜை செய்து, பொன் பாத்திரத்தில் நெய் வார்த்து,  வேதியர்களுக்கு தானம் அளித்தால், நோய்கள் அண்டாது.

6. தேஜ சங்கராந்தி (புரட்டாசி): சூரியன் கன்னி ராசியில் நுழையும் வேளையை, தேஜ சங்கராந்தி என்பர். செந்நெல் அரிசி கொண்டு அதன்மேல் கலசம் வைத்து மோதகம் முதலானவை நிவேதித்து, வேதியர்களுக்கு விருந்தளிக்க வேண்டும்.

7. ஆயுள் சங்கராந்தி (ஐப்பசி): சூரியன் துலாம் ராசியில் நுழையும் வேளையை, ஆயுள் சங்கராந்தி என அழைப்பர். பசும்பால், வெண்ணெய் இவற்றை கும்பத்தில் நிரப்பி பூஜித்து தானம் கொடுப்பதால், நீண்ட ஆயுள் தங்கும்.

8. சவுபாக்ய சங்கராந்தி (கார்த்திகை): சூரியன் விருச்சிக ராசியில் நுழையும் வேளையை, சவுபாக்ய சங்கராந்தி நாளாக அழைப்பர். சூரிய பூஜை செய்து, வஸ்திரம் சார்த்தி,  வேதியர்களுக்குத் தானம் செய்ய வேண்டும். இதில் <உப்புதானம் (லவண பர்வதானம்) செய்தால், சகல சவுபாக்யங்களும் பெறலாம்.

9. தனுஷ் சங்கராந்தி (மார்கழி): சூரியன் தனுசு ராசியில் பிரவேசிக்கும் வேளை, தனுஷ் சங்கராந்தி. இந்த வேளை யில் தீர்த்தத்தை ஒரு கலசத்தில் நிரப்பி பூஜித்து அன்னம், தானம் இவற்றைச் செய்தால், நினைத்த காரியங்கள் கைகூடும்.

10. மகர சங்கராந்தி (தை): சூரியன் மகர ராசியில் நுழையும் நாள். இது தேவர்களுக்கு விடியல் காலம், தட்சிணாயன ஆறுமாத காலத்தில் கொடிய <உருவம் கொண்டு மனிதர்களையும், புலிகள் உருவம் கொண்டு பசுக்களையும் வருத்திய காரணத்தால், தேவர்களின் வேண்டு கோளை ஏற்று ஈஸ்வரன் தை முதல் தேதியில் இத்தகைய துன்பங்களை நீக்கினார். 12 சங்கராந்திகளில் மகர சங்கராந்தி மிகவும் புண்ணியம் வாய்ந்தது. சூரிய பூஜை மிகவும் விசேஷமானது.

11. லவண சங்கராந்தி (மாசி): சூரியன் கும்ப ராசியில் நுழையும் வேளையை லவண சங்கராந்தி என அழைப்பர். இந்த நல்ல நாளில், சூரிய பூஜை செய்வதன் மூலம் மோட்சம் அடையலாம்.

12. போக சங்கராந்தி (பங்குனி): சூரியன் மீன ராசியில் நுழையும் வேளையை போக சங்கராந்தி என அழைப்பார்கள். பங்குனி மாத ஆரம்பம், முடிவு நாட்களில் சூரியபூஜை செய்து தனதான்யம், பசு முதலானவற்றை தானம் செய்வதன் மூலம், சகல நன்மைகளும் உண்டாகும்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் ஆகிய ஐந்தையும் பஞ்சபூதம் அல்லது பிரபஞ்சம் என்கிறோம். பிரபஞ்சம் என்றால் ... மேலும்
 
கண்ணப்ப நாயனார் சிவனுக்கு கண்கொடுத்த தலம் காளஹஸ்தி. இங்குள்ள சுவாமி காளத்திநாதர். இவரது கண்ணில் ... மேலும்
 
தேவர்களும் அசுரர்களும் அமிர்தம் பெறுவதற்காக பாற்கடலைக் கடைந்தனர். நாணாக (கயிறாக) இருந்த வாசுகியால் ... மேலும்
 
விநாயகர், முருகன், அம்பிகை, பிரம்மா, விஷ்ணு, தேவர்கள் என அனைவரும் சிவபூஜை செய்து அருள் பெற்றுள்ளனர். ... மேலும்
 
‘பித்தா பிறைசூடி பெருமானே அருளாளா’ என்று சிவனைப் பாடினார் சுந்தரர். சுந்தரரின் முதல் பாடல் இது தான். ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar