முக்கிய கிரகமான சூரியன் 3 ல் இருக்கும் காலம் ஆவணி. சிம்மம் அவரது சொந்த இடமாக இருப்பதால் கூடுதல் நன்மைகளை தருவார். செல்வாக்கு அதிகரிக்கும். பொருளாதார வளம் கூடும். தொழிலில் அமோக லாபம் கிடைக்கும். உங்கள் ஆட்சி நாயகன் புதன் 3ல் இருப்பது சிறப்பல்ல. அவரால் எதிரியால் பிரச்னை வரலாம். ஆனால் ஆக. 26ல் புதன் கன்னி ராசிக்கு செல்கிறார். அதன் பின் நன்மை தர இருக்கிறார். பொன், பொருள் சேரும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். செப்.1ல் செவ்வாய் 6-ம் இடத்திற்கு செல்கிறார். இதன் மூலம் உங்களுக்கு அபார ஆற்றல் பிறக்கும். ஆடை, ஆபரணம் வாங்கி மகிழ்வீர்கள். சுக்கிரன் 2 ல் இருப்பதால் மதிப்பு, மரியாதை கூடும். அரசிடம் இருந்து விருது போன்றவை கிடைக்கும்.குடும்பத்தில் மாத பிற்பகுதியில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பிரிந்த தம்பதியர் ஒன்று சேருவர். குழந்தை பாக்கியம் கிடைக்கும். உறவினர் வருகையால் நன்மை உண்டு.
தொழில், வியாபாரிகளுக்கு எதிர்கால வளர்ச்சி குறித்த சிந்தனை மேலோங்கும். புதிய ஒப்பந்தம் கிடைக்கப் பெறுவர். லாபம் பன்மடங்கு உயரும்.
பணியாளர்களுக்கு இதுவரை இருந்த பின்தங்கிய நிலை இனி இருக்காது. பதவி உயர்வு கிடைக்கும். குரு சிறப்பான இடத்தில் உள்ளதால் துணிச்சல் பிறக்கும்.
கலைஞர்களுக்கு எதிர்பார்த்த புகழ் பாராட்டு கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்த்த பதவி கிடைக்கும். மக்கள் மத்தியில் செல்வாக்குடன் திகழ்வர்.
மாணவர்கள் சிரத்தை எடுத்து படிப்பர். வகுப்பில் முன்னணி மாணவராகச் சிறந்து விளங்குவீர்கள்.
விவசாயிகள் வியர்வை சிந்தி உழைத்தாலும், வருமானம் குறையாது. செப். 1க்கு பிறகு புதிய சொத்து வாங்கலாம்.
பெண்களுக்கு குடும்பத்தினரிடம் நன்மதிப்பு கிடைக்கும்.
நல்ல நாள்: ஆக.20,21,22,25,26,27, செப்.1,2,3,4,5,10,11, 12,13
கவன நாள்: செப்.6,7 சந்திராஷ்டமம்
அதிர்ஷ்ட எண்: 1,9 நிறம்: வெள்ளை, செந்துõரம்
வழிபாடு: சிவன், துர்க்கை வழிபாடு நல்வாழ்வுக்கு துணை நிற்கும். சனிபகவானுக்கு எள்தீபமிட்டு வழிபடுங்கள். காக்கைக்கு அன்னமிட்டு உண்ணுங்கள். ஏழைகளுக்கு உதவி செய்யுங்கள்.