Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news இமாலயக் கைலாசில் சிவனின் தோற்றம்! பண்ருட்டி படைவீட்டம்மன் கோவிலில் தேர்திருவிழா! பண்ருட்டி படைவீட்டம்மன் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மானம் காத்த மதுரை!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

23 ஆக
2014
12:08

நதிக்கரை நாகரிகங்கள் தோன்றிய காலம் முதல் நைல் நதி நாகரிகம், சிந்துநதி நாகரிகம் என உலகம் முழுதும் இருக்கக்கூடியதைப் போன்று, 2000ம் ஆண்டு பழமையான, இன்றும் உயிரோடு இயங்கிக் கொண்டிருப்பது மதுரை, அதன் வைகை நதிக்கரையில் தான்.சில ஊர்கள் காலவரலாற்றில் மறைந்துவிட்டன. பெரிய நகரங்கள் இடம்பெயர்ந்து விட்டன. புராண, வரலாற்று, இலக்கியக் காலம் துவங்கி இன்று வரை திரைத்துறையா... பேச்சுத்துறையா.... எந்தத் துறையிலும் கலை, இலக்கியம் சார்ந்த விஷயங்களில் முன்னோடியாக இருப்பது, மதுரையின் வேர்கள் தான்.மதுரைக்கு நிறைய பெயர்கள் உண்டு. கடம்பவனம், ஆலவாய், நான்மாடக்கூடல், மருதை, மதிரை, மதுரை... சொல்லிக் கொண்டே போகலாம். மதுரையின் பெயர்க்காரணங்களை கல்வெட்டு, புராண, இலக்கிய காலம் தொட்டு ஆதாரமாகச் சொல்லமுடியும்.கல்வெட்டுச் சான்று: தொல்லியல் துறை அறிஞர் வேதாச்சலம் கூற்றுப்படி கல்வெட்டுக்களில் ’மதிரை’ என்று தான் கூறப்படுகிறது. அழகர்கோவிலில் உள்ள கல்வெட்டிலும், திண்டுக்கல் நிலக்கோட்டை அருகிலுள்ள அணைப்பட்டி (சித்தர்கள் நத்தம்) கல்வெட்டிலும் ’மதிரை’ என்றே குறிப்பிடப்படுகிறது. சிலப்பதிகாரத்தில் பாண்டிய நாடு மதுரைக் காண்டம் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. இன்னமும் கிராமப்புறங்களில் சொல்வழக்கில் உள்ள சொல் என்ன தெரியுமா? ’நாங்க மருதக்காரங்க’ தான்.

இலக்கியத்திலும் எடுத்துக்காட்டு: பத்துப்பாட்டில் ஒன்றான மதுரைக்காஞ்சியை, இரண்டாம் நூற்றாண்டில் மாங்குடி மருதனார் எழுதினார். இந்தக்காலத்தில் நூல் வெளியீட்டு விழா நடத்துவது போல, அந்தக்காலத்தில் நூல் அரங்கேற்ற விழா நடத்தப்பட்டது. அரங்கம் ஏற்றுக்கொண்டால் தான் நூலாக வெளியிடமுடியும். அத்தகைய சிறப்புமிக்க மதுரைக்காஞ்சியை மாங்குடி மருதனார், திருவோண நன்னாளில் அரங்கேற்றம் செய்தது மதுரையில் தான்.மதுரைக்காஞ்சியில் மதுரையின் இரவும், பகலுமான முழுநாள் நிகழ்வை நேர்முக வர்ணனையாக கூறியிருப்பார் மாங்குடி மருதனார். தூங்காநகரம் என்ற பெயர் தானாக வந்ததில்லை. அங்காடிகள் என்றால் கடைகள்; அல் என்றால் இரவு. மதுரைக்காஞ்சியில் ’அல்லங்காடி’ என குறிப்பிடப்பட்டிருக்கும்.புராணமும் புகழ்பாடும்: சிவபெருமானின் 64 திருவிளையாடல்களில் 60 விளையாடல்கள் நிகழ்த்திய இடம் மதுரை தான். வீதிகள் தோறும் திருவிளையாடல் நடந்ததாக கூறப்படுகிறது. ஆதரவற்ற கிழவிக்காக பிட்டுக்கு மண் சுமந்து, மன்னனிடம் பிரம்படி பட்ட சிவபெருமானின் திருவிளையாடல் நடந்ததும் இங்கு தான். மதுரை மக்களுக்காக சிவபெருமானே பிரம்படி பட்டதாக கூறுவதுண்டு. திருவிளையாடல் புராணத்தில் ஆலவாய், கூடல் காண்டம் என்ற பெயர்கள் இடம்பெற்றுள்ளன.

ஏடு நின்ற வரலாறு: ஏழாம் நூற்றாண்டில் சமண மதம் மேலோங்கி நின்றது. சைவ சமயத்தை நிலைநாட்ட வந்த திருஞானசம்பந்தர், சமணர்களோடு போராடி, அனல்வாதம், புனல்வாதம் செய்தது மதுரையில் தான். எந்தசமயம் உயர்ந்தது என்பதை நிறுவ, தங்கள் மதத்தின் பெருமைகளை திருஞானசம்பந்தரும், சமணர்களும் ஏடுகளில் எழுதி வைகையாற்றில் இட்டனர். ஞானசம்பந்தரின் ஏடு வைகையாற்றில் எதிரேறிச் சென்று சோழவந்தான் அருகே திருவேடகம் என்ற ஊரைச் சேர்ந்தது. அந்த ஊர் இன்றும் திருவேடகம் என்றழைக்கப்படுகிறது. சமணர்களின் ஏடு நீரின் வழியே சென்று திருப்பாச்சேத்தியில் சேர்ந்தது என்பர். ஆற்றோடு போன இடம் திருப்பாச்சேத்தி. அதாவது பாட்டு போய் சேர்ந்த இடம் என்று பொருள்.இப்போதும் நம் வீட்டு திருமணப் பத்திரிகைகளில் ’மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்...’ என்ற பாடலை, அச்சிடுவதுண்டு. ஆலவாய் அண்ணலும், அங்கையர்க்கண்ணி குடியிருக்கின்ற, மதுரை மீனாட்சி கோயிலில் வைத்து, திருஞானசம்பந்தர் இப்பாடலை பாடினார். எத்தனை நூற்றாண்டுகளை கடந்து, இந்த உறவு இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.சைவம் மட்டுமல்ல... வைணவத்தில் பெரியாழ்வார் பொற்கிழி பெற்ற இடம் மதுரை. திருவில்லிபுத்தூரில் வடபத்திர சாயியாக காட்சி தரும் பெருமாள், பெரியாழ்வார் கனவில் வந்து, பாண்டியநாட்டின் தலைநகராகிய மதுரை சென்று, ’எது மெய்ப்பொருள் என நிலைநிறுத்துவாயாக’ என்று சொன்னாராம். மதுரை கூடலழகர் பெருமாள் கோயிலில், பெரியாழ்வார் அப்பாடலை பாடிய போது, ’பொற்கிழி’ வளைந்து கொடுத்து, ’இதுதான் உண்மையான மெய்ப்பொருள்’ என்று காட்டியதாம். அதைத்தான் மெய்காட்டும் பொட்டல் என்றழைத்தனர். இப்போது மேங்காட்டு பொட்டல் என்றழைக்கப்படுகிறது, என்கின்றனர்.

தரையில் கை வை: புராணரீதியாக சொன்னால், தடாதகை பிராட்டியாகிய அன்னை மீனாட்சியை மணமுடித்த சொக்கநாதர், தான் உருவாக்கிய குண்டோதரனுக்கு உணவளிக்கச் சொல்வார். ஆனால் அவனது உணவுப்பசியை தீர்க்கமுடியாமல், அன்னை தவிக்கும் போது, குண்டோதரனை ’தரையில் கை வை’ என்றாராம். பொங்கிப் பாய்ந்தது வைகை. குண்டோதரனின் தாகம் தீர்க்க உருவான வைகை நதிக்கு, வேறெந்த நதிக்கும் இல்லாத பெருமையும் உண்டு.”நாரியிடப்பாகருக்கு நஞ்சளித்த பாவியென்று...வாரியிடைப்புகுதாயே வையையே!” என்று, தனிப்பாடல் கூறுகிறது. இந்தப் பாடலின் அர்த்தம் நம் மதுரையைப் பற்றிய, வைகையைப் பற்றிய பிரமிப்பை ஏற்படுத்தும். தேவர்களும், அசுரர்களும் வாசுகி என்ற பாம்பைக் கொண்டு, பாற்கடலை கடைந்தார்களாம். அப்போது வெளிவந்த நஞ்சைக் கண்டு தேவர்கள் பயந்தோடினர். தேவர்களுக்கு அமிர்தத்தை வழங்கி விட்டு, அந்த நஞ்சை சிவபெருமானே உண்டாராம். ’சிவனுக்கே நஞ்சு கொடுத்தது கடல் தான். எனவே, எந்தக் காலத்திலும் நான் கடலோடு கலக்க மாட்டேன்’ என்றதாம், வைகை நதி. தமிழகத்தில் கடலில் கலக்காத ஒரே நதி வைகை தான். வெள்ளம் பெருகினாலும், வைகை நதி ராமநாதபுரம் கண்மாயில் தான் கடைசியாக கலக்கிறது. சிவபெருமானால் உருவாக்கப்பட்ட மானமிகுந்த மதுரையின் புண்ணியநதியாம் வைகையில், இப்போது சாக்கடை கலந்து சங்கடம் தருவது வேதனை கதை.

மதுரையின் பெருமை: 2000ம் ஆண்டுக்கு முந்தைய புலவர்கள் வாழ்ந்த இடம் மதுரை தான். மணிமேகலை நூலை எழுதிய மதுரை கூலவாணிகன் சீத்தலைச்சாத்தன் மதுரைக்காரர் தான். கூலவாணிகம் என்றால் நவதானியம் என்று அர்த்தம். இப்போதும் கீழமாசி வீதிப் பகுதிகளில் நவதானியம் விற்கப்படுகிறது. மதுரையில் இளநாகனார் போன்ற புலவர்கள் வாழ்ந்தனர். கர்நாடக இசையுலகில் அசைக்கமுடியாத இடம் பெற்ற எம்.எஸ்.சுப்புலட்சுமியின் முழுப்பெயர் மதுரை சண்முகவடிவு சுப்புலட்சுமி தான். தூத்துக்குடியில் பிறந்து புதுச்சேரியில் இறந்த, நாடக உலகின் தந்தை சங்கரதாஸ் சுவாமிகள், நாடகம் வளர்த்தது மதுரையில் தான். நாடகக்கலை வளர்த்த மதுரையில் (தமுக்கம் மைதானம்) அவருக்கு சிலை உள்ளது. பாடலுக்கு மணி ஐயர், மதுரை சோமு, நாதஸ்வரத்திற்கு சேதுராமன், பொன்னுசாமி... இவர்களின் பெருமையும் மதுரையைச் சார்ந்தது தான்.மதுரையில் தான் நான்காம் தமிழ்ச்சங்கத்தை பாண்டித்துரை தேவர் உருவாக்கினார். மீனாட்சியம்மன் கோயில் கட்டிய வரலாற்றை எடுத்துக் கூறும் ’கோயில் திருப்பணி மாலை’ என்ற நூலை, பின்னாளில் பாண்டித்துரை தேவர் பதிப்பித்தார். இப்போதும் தமிழ்ச்சங்க ரோட்டில் சங்கம் தமிழ்ச்சங்கமாக, செந்தமிழ்க் கல்லூரியாக உள்ளது. தமிழின்பால் கொண்ட பற்றின் காரணமாக தனது பெயரை மாற்றிக் கொண்ட பரிதிமாற் கலைஞர் என்ற சூரிய நாராயண சாஸ்திரி, மதுரைக் கல்லூரிப் பள்ளியில் படித்தவர் தான்.

பைய... பைய...: இன்னமும் மதுரைக்காரர்களின் பேச்சில் ’பைய’ என்ற வார்த்தை இடம் பெறுவதுண்டு. யாராவது வேகமாக ஓடினாலோ, நடந்தாலோ, தடுக்கி விழுந்தாலோ, ’பைய... பார்த்து போ’ என்பார்கள். இந்த வார்த்தையை ஏழாம் நூற்றாண்டிலேயே திருஞானசம்பந்தர் பயன்படுத்தியிருக்கிறார். ஏடுகளின் பெருமையில் திருஞானசம்பந்தரிடம் தோற்றுப் போன சமணர்கள், அவர் மதுரையில் தங்கியிருந்த மடத்திற்கு தீவைக்கின்றனர். ’மன்னனின் ஆதரவு இருப்பது தானே, இந்த நெருப்பிற்கு காரணம். இந்த நெருப்பின் வேகம் மன்னனைச் சென்று சேர வேண்டுமென நினைக்கிறார், திருஞானசம்பந்தர். ’பையவே சென்று பாண்டியர்க்கு ஆகவே’ என்று பாடுகிறார். சமணர்கள் மடத்திற்கு வைத்த நெருப்பு, மெல்லச் சென்று பாண்டியனைச் சேரட்டும் என்பதாக அர்த்தம். மதுரை ’தூங்காநகரம்’ மட்டுமல்ல... சொற்களால் சாகாநகரம் என்பதும் உண்மை தான். பேராசிரியர் கு.ஞானசம்பந்தன், மதுரை. போன்:94437 94505.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; மதுரை சித்திரை திருவிழாவில் இன்று தேனூர் மண்டபத்தில் எழுந்தருளிய சுந்தரராஜப் பெருமாள் சுவாமி, ... மேலும்
 
temple news
புட்டபர்த்தி: சத்ய சாய் பாபாவின் நினைவு தினத்தையொட்டி, ஆராதனை மகோற்சவம் இன்று புட்டபர்த்தியில் ... மேலும்
 
temple news
கோவை; கோவையின் குலதெய்வம் என போற்றப்படும் தண்டு மாரியம்மன் கோவில்சித்திரை விழா கடந்த 15ம் முதல் நடந்து ... மேலும்
 
temple news
காரைக்கால்; காரைக்கால் அம்மையார் கோவிலில் சித்திரை சுவாதி நட்சத்திரத்தை முன்னிட்டு, அம்மையார் ... மேலும்
 
temple news
உத்தரகாண்ட்; இயற்கை எழில் கொஞ்சும் கங்கையாற்றின் கரையில் அமைந்திருக்கும் சிறப்பு மிக்க ஆன்மீக தலம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar