Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
இன்றைய சிறப்பு! மூன்றாம் படைவீடு: பழநியில் கும்பாபிஷேக பூஜைகள் துவக்கம்! மூன்றாம் படைவீடு: பழநியில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மதுரை ஆவணி மூல விழா: உலவாக்கோட்டை அருளிய அலங்காரத்தில் சுந்தரேஸ்வரர்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 செப்
2014
12:09

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில், ஆவணி மூலத் திருவிழா செப்., 9 வரை நடக்கிறது. தினமும் சுவாமியின் திருவிளையாடல் லீலைகள்  நடக்கும். திருவிழாவை முன்னிட்டு உலவாக்கோட்டை அருளிய அலங்காரத்தில் பிரியாவிடையுடன் சுந்தரேஸ்வரர் அருள்பாலித்தார். ஏராளமான  பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

Default Image

Next News

உலவாக்கோட்டை அருளிய படலம்: மதுரையில் சோமசுந்தரப் பெருமான் நிகழ்த்திய லீலைகள் கொஞ்ச நஞ்சமல்ல. அவற்றைக் கேட்டாலே உள்ளம்  சிலிர்க்கும். அடியார்க்கு நல்லான் என்பவர் தன் மனைவி தர்மசீலையுடன் இங்கு வசித்து வந்தார். அவர்கள் பெரும் செல்வந்தர்கள். தங்கள் வரு மானத்தில் ஆறில் ஒரு பாகத்தை அரசுக்கு வரி செலுத்திவிட்டு, மீதியை சிவனடியார்களுக்கு அன்னமிடும் பணிக்காக வைத்துக் கொண்டனர்.  தர்மத்தின் திருவுருவான நல்லானுக்கு செல்வவளம் வற்றாமல் இருந்தது. இவர்களது வீட்டுக்கு எப்போது போனாலும் அன்னம் கிடைக்கும். இந்த  நல்லவர்களைச் சோதிப்பதன் மூலம் அவர்களின் பெருமையை உலகறியச் செய்ய நினைத்தார் சோமசுந்தரர். அந்த குடும்பத்தில் வறுமையை  உண்டாக்கினார். அடியார்க்கு நல்லானின் வயல்கள், தோட்டங்கள் காய்ந்து போயின. இருப்பு தானியங்கள் குறைந்து விட்டது. நல்லான் கடன் வாங்கி  தானம் செய்தார். ஒரு கட்டத்தில் யாரும் கடன் கொடுக்கவும் மறுத்துவிட்டனர். தங்கள் சாப்பாட்டுக்கே வழியின்றி தம்பதியர் பட்டினி கிடந்தனர். த ங்கள் பட்டினியை விட, அடியவர்களுக்கு தொண்டு செய்ய முடியாமல் போய்விட்டதே என்ற வருத்தம் அவர்களை வாட்டியது. வாழ்வை முடித்துக்  கொள்ளலாம் என எண்ணி, சுந்தரேசர் கோயிலுக்குச் சென்றனர். தங்கள் நிலையைச் சொல்லி கண்ணீர் வடித்து, உனது அடியவர்களுக்கு சேவை  செய்ய இயலாத எங்கள் உயிரை எடுத்துக் கொள், எனக் கதறினர். அதற்கு மேலும் அவர்களை சோதிக்க பரமன் விரும்பவில்லை. குழந்தைகளே!  வீட்டுக்குச் செல்லுங்கள். அங்கே உலவாக்கோட்டை ஒன்று இருக்கும். அதில் அள்ள அள்ள குறையாமல் தானியம் வரும். அதைக் கொண்டு, எனது  அடியவர்களுக்கு திருத்தொண்டு செய்யுங்கள், என அசரீரி ஒலித்தது. அவர்கள் வீடு திரும்பினர். இறைவன் சொன்னதைப் போலவே அங்கு உலவாக்  கோட்டை இருந்தது. உலவாக்கோட்டை என்றால், 24 மரக்கால் கொண்ட ஒரு அளவை. அந்த அளவைக்கு பூஜை செய்து, மீண்டும் அன்னதானப்  பணியைத் துவங்கினர். காலம் முழுவதும் அந்தத் திருப்பணியைச் செய்து பரமனின் திருவடி எய்தினர்.

தொடர்புடைய கோயில்கள் :
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் பங்குனி உத்திரம் திருக்கல்யாண உற்சவத்தில் ... மேலும்
 
temple news
மதுரை; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி திருவிழாவில் இன்று தேரோட்டம் ... மேலும்
 
temple news
இளையான்குடி; இளையான்குடி அருகே தாயமங்கலத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழா ... மேலும்
 
temple news
பழநி; பழநியில், பங்குனி உத்திர விழா நிறைவு பெற்ற நிலையில் பக்தர்கள் வருகை அதிகம் இருந்தது.பழநியில் ... மேலும்
 
temple news
அவிநாசி; அவிநாசி வட்டம், கருவலூர் ஊராட்சியில் மாரியம்மன் கோவில் இரண்டாம் நாள் தேர் திருவிழாவில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar