Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பதி சென்றது ஆண்டாள் சூடிய ... சின்னசேலம் கோவிலில் நவராத்திரி உற்சவ விழா! சின்னசேலம் கோவிலில் நவராத்திரி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கங்காதரேசுவரருக்கு நண்பர் ஆனார் ஏகாம்பரேசுவரர்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

29 செப்
2014
11:09

சென்னை புரசைவாக்கத்தில் உள்ள கங்காதரேசுவரர் போன்று, தங்கசாலை பகுதியில் உள்ள ஏகாம்பரேசுவரரும் தனி நபர்; அவருக்கு சொந்தமான சொத்துகள் குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தில் பதில் அளிக்க இயலாது’ என, அந்த கோவிலின் செயல் அலுவலர் தெரிவித்துள்ளார்.

கங்காதரேசுவரருக்கு முதல் பதில்: தமிழகத்தில் கோவில்களுக்கு தானமாக வழங்கப்பட்ட சொத்துகள் குறித்து பொதுமக்கள் தகவல் அறியும் உரிமை சட்டத்தில் விவரங்கள் கேட்டால் அதற்கு முறையான பதில் அளிக்காமல், அலைக்கழித்து வந்த அறநிலைய துறை அதிகாரிகள் தற்போது புதிய வழிமுறையை கடைப்பிடிக்க துவங்கியுள்ளனர்.முதலில், புரசைவாக்கத்தில் உள்ள கங்காதரேசுவரர் கோவில் சொத்துகள் குறித்து, ஆலய வழிபடுவோர் சங்கத்தினர் தகவல் அறியும் உரிமை சட்டத்தில் மனு செய்திருந்தனர்.அதற்கு, ’கங்காதரேசுவரர் சட்டப்படி தனி நபர்; எனவே, அவருக்கு சொந்தமான சொத்துகள் குறித்த தகவல்களை அளிக்க இயலாது’ என பதில் அளித்து, அக்கோவிலின் செயல் அலுவலர் அதிர்ச்சி அளித்தார். அதையடுத்து, சென்னை வள்ளலார் நகர், தங்க சாலை பகுதியில் உள்ள ஏகாம்பரேசுவரர் கோவிலின் சொத்துகள் குறித்து, ஆலய வழிபடுவோர் சங்க செயல் தலைவர் டி.ஆர். ரமேஷ், சமீபத்தில் மனு செய்தார்.

ஏகாம்பரேசுவரரும் அப்படி தான்: இதற்கு, அக்கோவிலின் செயல் அலுவலர் சித்ராதேவி, கடந்த, ஆக., 25ம் தேதியிட்ட கடிதம் வாயிலாக அளித்த பதில் விவரம்:கோவில் சொத்துகள், அரசின் கட்டுப்பாட்டில் உள்ளவை அல்ல. அவை அனைத்தும் கோவிலின் மூலவருக்கு அர்ப்பணிக்கப்பட்டவை; அவருக்கே சொந்தம். அவரே இந்த சொத்துகள் அனைத்துக்கும் சட்ட நபர் (தனி நபர்) ஆவார்.தங்கசாலை ஏகாம்பரேசுவரர் கோவிலின் அன்றாட நிர்வாக பணிக்காக நியமிக்கப்பட்டிருக்கும் செயல் அலுவலர், அறங்காவலர், இச்சொத்துகளை பராமரித்து, பாதுகாக்க மட்டுமே உரிமை கொண்டவர்கள்.எனவே, இத்திருக்கோவிலின் சொத்துகள் குறித்து கேட்கப்பட்டுள்ள விவரங்களை, தனிப்பட்ட நபர் குறித்து கேட்கப்பட்டதாகவே கருத வேண்டிஉள்ளது.அதனால், மனுதாரர் கேட்டுள்ள விவரங்கள், 2005ம் ஆண்டு தகவல் அறியும் உரிமை சட்டத்தின், 8 (1) (ஜே) பிரிவின்படி விலக்களிக்கப்பட்ட தகவல்களாக கருதப்படுகின்றன. எனவே, மனுதாரர் கேட்டுள்ள தகவல்களை வழங்க இயலாது.இவ்வாறு, அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதே வாசகம்: கங்காதரேசுவரர் கோவில் செயல் அலுவலர் கடந்த, ஆக., 11ம் தேதியிட்ட கடிதத்தில் கொடுத்த பதிலில், ’மூலவர் குறித்து...’ என்று, குறிப்பிட்ட வாசகங்கள், அச்சு மாறாமல் அப்படியே ஏகாம்பரேசுவரர் கோவில் செயல் அலுவலர் அளித்த கடிதத்திலும் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், கோவில் சொத்துகள் குறித்த விவரங்களை கேட்போரை திசைதிருப்புவதற்காக, அறநிலைய துறை அதிகாரிகள், இப்படி வினோதமான பதில் அளிக்கின்றனரோ என, பக்தர்கள் மத்தியில் சந்தேகம் எழுந்துள்ளது.செயல் அலுவலர்களின் இந்த போக்கை, அறநிலைய துறை நிர்வாகம் எப்ப அனுமதிக்கிறது என, பக்தர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அயோத்தி: அயோத்தி ராமர் கோயிலில் இன்று ஏகாதசியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. விழாவில் ... மேலும்
 
temple news
பாலக்காடு; கேரளாவில் பிரசித்தி பெற்ற கோவில் திருச்சூர் வடக்குநாதர் கோவில். இங்கு எல்லா ஆண்டு சித்திரை ... மேலும்
 
temple news
பெரியகுளம்; பெரியகுளம் ஷீரடி சாய்பாபா கோயிலில் சாய்பாபா பிறந்தநாள் விழா மற்றும் ராம நவமி விழா நடந்தது. ... மேலும்
 
temple news
திருப்பதி; திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்கள் பணம் மற்றும் நகை என காணிக்கையை கொட்டி ... மேலும்
 
temple news
கோவை; கோவை மாவட்டம் அன்னூர் கரி வரதராஜ பெருமாள் கோவிலில் சித்திரை மாதம் ஏகாதசியை முன்னிட்டு கோவிலில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar