வேதத்தில் சரஸ்வதிக்கு வாகனமாக அன்னம் குறிப்பிடப்பட்டுள்ளது.பாலையும், தண்ணீரையும் கலந்து வைத்தாலும், நீரை விட்டு விட்டு பாலை மட்டும் அருந்தும் அன்னத்தைப் போல, உலகில் நன்மை, தீமை இரண்டும் கலந்துஇருந்தாலும், தீமையை விடுத்து, நன்மையை மட்டும் மனிதன் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பது இதன் தத்துவம். தென்னகத்தில் சரஸ்வதிக்குரிய வாகனம் மயில். இதன் தோகையில் வட்டவடிவில் கண்கள் இடம்பெற்றிருக்கும். படிப்பவன், இரு கண்களால் மட்டுமல்லாமல் ஆயிரமாயிரம் கண்களோடு,புதியவற்றைக் கற்றுத் தெளிய வேண்டும் என்பது இதன் தத்துவம். அன்னத்தில் இருக்கும் சரஸ்வதியை ஹம்ஸ வாஹினி என்றும், மயில் மீதிருக்கும் சரஸ்வதியை வர்ஹ வாஹினி என்றும் அழைப்பர். ரவிவர்மா ஓவியங்களில் சரஸ்வதிக்கு மயிலே வாகனமாக தீட்டப்பட்டுள்ளது.