Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மிதுனம்: (மிருகசிரிடம் 3,4 திருவாதிரை, ... சிம்மம்: (மகம், பூரம், உத்திரம் 1) வெளியூர் பயணம்! சிம்மம்: (மகம், பூரம், உத்திரம் 1) ...
முதல் பக்கம் » சித்திரை ராசி பலன் (14.4.2024 முதல் 13.5.2024 வரை)
கடகம்: (புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம்) வளர்ச்சிப் பாதை!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

11 நவ
2014
02:11

சிந்தித்து செயலாற்றும் கடக ராசி அன்பர்களே!

குரு உங்கள் ராசியில் இருந்து டிச. 3ல் 2-ம் இடமான சிம்மத்துக்கு செல்கிறார். இதனால் சிரமம் இருக்குமிடம் தெரியாமல் மறையும். குடும்பத்தில்  நிலவி வந்த குழப்பம் தீரும். தொழில் வளர்ச்சியால் சிறப்பான முன்னேற்றம் ஏற்படும். இந்த மாதம் புதன் நற்பலனைக் கொடுப்பார். நவ. 22 வரை  செவ்வாயும், டிச. 8 வரை சுக்கிரனும், ராகு மாதம் முழுவதும் நன்மை தருவர். எதையும் சிறப்பாக முடிக்கும் வல்லமை பெறுவீர்கள். பணப் புழக்கம்  கையில் அதிகரிக்கும். மாதத் தொடக்கத்தில் ஆடை, ஆபரணம் வாங்கி மகிழ்வீர்கள்.  பிள்ளைகள் வகையில் எதிர்பார்த்த பலனை காண முடியாது.  கணவன்- மனைவி இடையே இணக்கமான சூழ்நிலை இருக்காது. உடல்நிலை திருப்தி அளிக்கும்.

தொழில், வியாபாரத்தில் சிறப்பான முன்னேற்றம் உருவாகும். கூட்டாளிகளிடையே ஒற்றுமை ஏற்படும். நவ.21க்கு பிறகு தொழில் ரீதியாக  வெளியூர் பயணம் ஏற்படலாம். அதன் மூலம் ஆதாயம் கிடைக்கப் பெறுவீர்கள்.

பணியாளர்கள் பணியிடத்தில் மேன்மை காண்பர். அதிகாரிகளின் ஆதரவு இருக்கும். நவ. 21 க்கு பிறகு வேலை விஷயமாக குடும்பத்தை விட்டு  பிரிந்து செல்லும் நிலை உருவாகலாம். சிலர் இடமாற்றம் கிடைக்கப் பெறுவர். டிச. 8ல் புதன் சாதகமான இடத்திற்கு வருவதால் பதவி உயர்வு  கிடைக்கும்.

கலைஞர்களுக்குப் புதிய ஒப்பந்தம் கிடைக்கும். பாராட்டு கிடைக்க வாய்ப்புண்டு. டிச. 7க்கு பிறகு முயற்சியில் தடையும், மனதில் சோர்வும்  ஏற்படும்.

அரசியல்வாதிகள் நவ. 22க்குப் பிறகு அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும்.

மாணவர்கள் கல்வி, விளையாட்டில் சிறந்த நிலையில் இருப்பர். நவ. 21 க்கு பிறகு சிரத்தை எடுத்து படித்தால் தான் பலன் கிடைக்கும்.

விவசாயிகள் சிறந்த மகசூலைப் பெறுவர். எள்,கரும்பு, கீரைவகைகள், பழ வகைகள் மூலம் நல்ல ஆதாயம் கிடைக்கும்.புதிய சொத்து நவ. 22க்குள்  வாங்குவது நல்லது.

பெண்களுக்கு பெரியோர் ஆதரவு கிடைக்கும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பர். திருமணம் ஆகாதவர்களுக்கு மணவாழ்வு  கைகூடும்.

நல்ல நாள்: நவ. 18, 19, 25, 26, 27, 28, டிச.  3, 4, 5, 6, 7, 10, 11, 15

கவன நாள்: நவ. 29, 30 சந்திராஷ்டமம்.

அதிர்ஷ்ட எண்: 7, 8          நிறம்: வெள்ளை, நீலம், பச்சை

வழிபாடு: சனிக்கிழமை பெருமாள் கோவிலுக்கு செல்லுங்கள். செவ்வாயன்று முருகனை வழிபட்டு துவரை தானம் செய்யலாம். சுக்கிரனை  வழிபடுங்கள்.

 
மேலும் சித்திரை ராசி பலன் (14.4.2024 முதல் 13.5.2024 வரை) »
temple news
அசுவினி: தைரிய பராக்கிரமக்காரகனான செவ்வாய், ஞான மோட்சக் காரகனான கேதுவின் அம்சத்தில் பிறந்து கடவுளின் ... மேலும்
 
temple news
கார்த்திகை 2,3,4 ம் பாதம்: அதிர்ஷ்ட காரகனான சுக்கிரன், ஆற்றல் காரகனான சூரியனின் அம்சத்தில் பிறந்த ... மேலும்
 
temple news
மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்: வீரிய காரகனான செவ்வாய், புத்தி காரகனான புதனின் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு ... மேலும்
 
temple news
புனர்பூசம் 4 ம் பாதம்: மனக்காரகனான சந்திரன், அறிவுக்காரகனான குருபகவானின் அம்சத்தில் பிறந்திருக்கும் ... மேலும்
 
temple news
மகம்: ஆற்றல் காரகன், ஆன்ம காரகனான சூரியன், ஞான மோட்சக் காரகனான கேதுவின் அம்சத்தில் பிறந்திருக்கும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar