கண்ணியமும் கடமை உணர்வும் மிக்க கும்ப ராசி அன்பர்களே!
குரு டிச.3ல் 6-ம் இடத்தில் இருந்து 7-ம் இடத்திற்கு செல்கிறார். இது மிகவும் உயர்வான நிலை. மேலும் குருவின் 5-ம் இடத்துப் பார்வையும் சிறப் பாக உள்ளது. பொருளாதார வளம் அதிகரிக்கும். எந்த ஒரு செயலையும் வெற்றிகரமாக முடிக்கலாம். இதுவரை இருந்து வந்த தடைகள் மறையும். உங்கள் மீதான அவப்பெயர் மறைந்து செல்வாக்கு அதிகரிக்கும். குடும்பத்தில் மங்களகரமான சூழ்நிலை உருவாகும். வீட்டுக்கு தேவையான வசதிகள் கிடைக்கும். தடைபட்டு வந்த திருமணம் கைகூடும். புதிய வீடு மனை வாங்கும் யோகம் வரும் அல்லது தற்போது இருப்பதை விட வசதிய õன வீட்டிற்கு குடிபுகுவர். சிலர் தொழில் நிமித்தமாக குடும்பத்தைவிட்டு வெளியூர் செல்லும் நிலை ஏற்படும்.புதன் நவ.21ல் இடம் மாறி நற்பலன் கொடுப்பார். செவ்வாய் நவ. 22 வரையும் சுக்கிரன் டிச.9க்கு பிறகும் நன்மைகளை தருவார்கள். சூரியனும் மாதம் முழுவதும் நற்பலன் கொடுப்பார். எடுத்த செயலை வெற்றிகரமாக முடித்து பணவரவு காண்பீர்கள். மதிப்பு மரியாதை சிறப்படையும். கணவன்-மனைவி இடையே அன்பு தழைக்கும். புத்தாடை, நகை வாங்கலாம். டிசம்பர் 7க்கு பிறகுபண வரவு இருக்கும்.
பணியாளர்களுக்கு மாதத் தொடக்கத்தில் சிறு சிரமங்களும், நவ.21க்கு பிறகு கோரிக்கைகள் நிறைவேறும் நிலையும் உண்டு.
தொழில், வியாபாரம் சிறப்படையும். புதிய வியாபாரம் ஓரளவு அனுகூலம் தரும். டிச. 10,11ல் திடீர் பணவரவுக்கு வாய்ப்புண்டு.
கலைஞர்களுக்கு எதிரிகளால் ஏற்பட்ட தொல்லை , அவப்பெயர் டிச. 7க்கு பிறகு மறையும். அரசியல்வாதிகள் சிறப்பான பலன் பெறுவர். மாணவர்கள் உழைப்புக்கு தகுந்த பலன் கிடைக்க பெறலாம். நவ. 21க்கு பிறகு போட்டிகளில் வெற்றி காணலாம்.
விவசாயிகள் புதிய சொத்து வாங்க வாய்ப்புண்டு. வழக்கு விவகாரங்களில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். பெண்களுக்கு பிள்ளைகளால் பெருமை ஏற்படும். உடல்நலம் முன்னேற்றம் காணும். மருத்துவ செலவு குறையும்.