Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ராமகிருஷ்ணர் நாயன்மார்கள் நாயன்மார்கள்
முதல் பக்கம் » மகான்கள்
கிருஷ்ண சைதன்யர்
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

29 ஜூலை
2010
12:07

விருந்தாவனம்...டில்லி அருகிலுள்ள ஒரு கிராமம். இங்கு மட்டும் இப்போது 5 ஆயிரம் கிருஷ்ணர் கோயில்கள் இருக்கிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். இங்கே கிருஷ்ணருடன் ராதையும் எழுந்தருளியிருக்கிறாள். இந்தளவுக்கு ராதையின் மீது கிருஷ்ணருக்கு என்ன பிரியம்? இவ்வுலகில் எத்தனையோ காதலர்கள் உள்ளனர். ஒவ்வொரு கணவன் மனைவியும் கூட காதலர்களே. இவர்களெல்லாம் பகலில் பணத்தைப் பற்றி பேசுகிறார்கள். இரவில் சுகத்தைப் பற்றி பேசுகிறார்கள். இது தான் வாழ்க்கை; இந்த சக்கரம் ஒழுங்காக உருண்டு ஓடினாலே போதும் எனக் கருதுகிறார்கள். இவர்கள் நூறாண்டுகளே வாழ்கிறார்கள் என வைத்துக் கொள்வோமே. ஒரு நாளாவது கருத்து வேறுபாடு ஏற்பட்டிருக்கும். வள்ளுவரின் மனைவி வாசுகி கணவர் என்ன செய்தாலும் கண்டு கொள்ளாமல் தான் இருந்தார். ஆனால், அவர்கூட வாழ்வின் கடைசி நாளில், அவர் செய்த சில செய்கைகள் பற்றி கேள்விகள் கேட்டாராம். ஆனால், ராதா அப்படியல்ல. அவள் பேசினால் கண்ணன் பேசியததாகத் தான் நினைப்பாள். பாடினால் கண்ணன் பாடியாகத்தான் நினைப்பாள். சாப்பிட்டால் கண்ணன் சாப்பிட்டுக் கொண்டிருப்பதாகத் தான் கருதுவாள். அவளது நெஞ்சம் அந்த பரந்தாமனுக்கு மட்டுமே சொந்தமாக இருந்தது. பிறந்தது முதல் கண் விழியாமலே இருந்த அவள், கண்ணனை அவரது அன்னை அவளது வீட்டுக்கு எடுத்து வந்த போது தான் முதன் முதலாக கண்ணைத் திறந்து பார்த்தாளாம். அதன்பிறகு அவரது திருவடிகளைத் தவிர வேறெந்த நினைப்புமில்லை. அவளது இதயம் கிருஷ்ணா என்ற நான்கெழுத்து மந்திரத்தில் மூழ்கிக் கிடந்தது.

கிருஷ்ண பரமாத்மாவுக்கோ அவளது பிரேமையை மதிப்பிட அளவுகோலே கிடைக்கவில்லை. ஊரில் எல்லாரையும் சோதிக்கும் அந்த பரந்தாமனுக்கு அவளுக்கு சோதனை கொடுக்க வாய்ப்பே கிடைக்கவில்லை. ஒரு கட்டத்தில் அவருக்கு அவளது காதல் மீது பொறாமையே ஏற்பட்டு விட்டது. இப்படி ஒருத்தி நம்மைக் காதலிக்கிறாளே...நம்மை அடையத் துடிக்கிறாளே...இவள் தரும் அன்பை என்னால் தாங்கவே இயலவில்லை. இவள் தரும் காதல் சுவையை நான் அனுபவிக்கிறேன். அனுபவிக்கும் எனக்கே இவ்வளவு சுகம் என்றால், அதைக் கொடுக்கும் உனக்கு, எவ்வளவு சுகமாய் இருக்கும். அதை அனுபவித்து உணர்ந்து கொள்ளப் போகிறேன். அது மட்டுமல்ல. உலகத்து மக்களெல்லாம் என்னை அடையத் துடிக்கிறார்கள். என்னை அடைவதே இன்பமென கருதுகிறார்கள். அப்படி என்ன இன்பம் அதில் இருக்கிறது என்பதையும் அனுபவித்து தெரிந்து கொள்ளப் போகிறேன், என்று தமக்குள் அங்கலாய்த்தார். அது மட்டுமல்ல! கிருஷ்ணர் இப்பூமியில் அவதரிக்க துடித்தமைக்கு இன்னொரு முக்கிய காரணமும் இருந்தது. இந்த கலியுகத்தில், இவ்வுலகில் இனி மந்திரங்கள் எடுபடாது. பகவத்கீதை படிக்க நேரமிருக்காது. உலகம் ஏதோ ஒரு சுகத்தை நோக்கி நடை போடும். பகவந்நாமா சொல்ல ஆளிருக்காது. இறைவணக்கத்தை எளிமைப்படுத்தி, நாம சங்கீர்த்தனம் என்னும் புதிய சமயத்தை படைக்க வேண்டும். அதன் மூலம் பக்தியைப் பரப்ப வேண்டும் என்பதும் அவரது நோக்கமாயிற்று.

இதற்காக அவர் பூமிக்கு புறப்பட்டார். யார் வயிற்றில் பிறப்பது என யோசித்தார். சாந்திபுரா என்ற இடத்தில் அத்வைத ஆச்சாரியார் ஒருவர் இருந்தார். இவரது இல்லத்தில் தினமும் ஏராளமான பக்தர்கள் கூடுவர். கீதை, பாகவதம் ஆகியவற்றில் இருந்து கருத்துரைகளை ஆச்சாரியார் எடுத்துக் கூறுவார். அங்கு வரும் பக்தர்கள் கிருஷ்ணரைப் பற்றி மட்டுமே பேசுவார்கள். ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண என்ற மந்திரத்தை உச்சரித்துக் கொண்டே இருப்பார்கள். ஆச்சாரியாருக்கு இதிலெல்லாம் திருப்தி ஏற்படவில்லை. இந்த உலக மக்கள் அனைவருமே கிருஷ்ணரைப் பற்றி சிந்திக்க வேண்டும். பிறப்பு இறப்பு இல்லாத ஆனந்த நிலையை அடைய வேண்டும். எல்லாருமே கிருஷ்ணருள் கலக்க வேண்டும், என தனக்குள் சொல்லிக் கொண்டார். ஒருமுறை கௌடாமியா தந்த்ரா என்ற நூலில் சொல்லப்பட்டிருந்த ஒரு வாசகத்தை வாசித்தார். யார் ஒருவன் அபரிமிதமான பக்தியுடன் கிருஷ்ணருக்கு வெறும் துளசி இலையையும், கையளவு தண்ணீரையும் கொடுக்கிறானோ, அவனிடம் பகவான் தன்னையே விற்றுக் கொள்கிறார், என்பதே அந்த வாசகம்.

ஆஹா...எவ்வளவு எளிமையான வழிபாடு. கங்கைக் கரையிலே எவ்வளவோ துளசி செடிகள் உள்ளனவே. அவற்றை பறித்து அவருக்கு அர்ப்பணம் செய்வதைத் தவிர வேறென்ன வேலை. கிருஷ்ணா! இப்பூமிக்கு வந்து அவற்றை ஏற்றுக் கொள்ள வேண்டும். எங்களை ஆட்கொள்ள வேண்டும், என வேண்டினார். தினமும் துளசி இலைகளைப் பறித்து வந்து பூஜைகளைச் செய்தார். பகவான் பூமிக்கு வர வேண்டுமென நினைத்தாலும், யாராவது ஒருபக்தன் அழைத்தால் தானே வருவார்! நாராயணா இந்த தூணுக்குள் இருந்து வெளியே வா என பிரகலாதன் அழைத்ததால் தானே நரசிம்ம மூர்த்தியாய் அவர் எழுந்தருளினார். அதுபோல் ஆச்சாரியாரின் துளசி கைங்கர்ய அழைப்புக்கு பகவான் கட்டுப்பட்டார். உபேந்திர மிஸ்ரா என்ற அந்தணரின் குடும்பத்தில் அவதாரம் செய்ய முடிவெடுத்தார். இவர் கிருஷ்ணாவதார காலத்தில் கிருஷ்ணரின் தாத்தாவாக இருந்த பர்ஜன்யரின் மறுபிறவி என கருதப்பட்டார். இவருக்கு ஏழு மைந்தர்கள் இருந்தனர். அவர்களில் ஒருவர் ஜெகந்நாத மிஸ்ரா. இவர் இன்றைய மேற்கு வங்காள மாநிலத்தின் நாடியா நகரில் வசித்து வந்தார். இவ்வூர் கங்கைக்கரையில் உள்ளது. இவர் நீலாம்பர சக்ரவர்த்தி என்பவரின் மகள் சச்சிதேவியை திருமணம் செய்திருந்தார். இந்த தம்பதியர் தீராத சோகத்தில் மூழ்கியிருந்தனர். ஏன்...இவர்களுக்கு பிறந்த எட்டு பெண் குழந்தைகளும் இறந்து விட்டன என்றால் எந்தப் பெற்றவர்களைத் தான் வருத்தம் வாட்டி எடுக்காது?

சைதன்யாின் வட இந்திய யாத்திரையின்போது மிக்க மகிழ்ச்சியுடன் அவா் காசியை அடைந்தாா். மணிகா்ணிகா கட்டத்தில் கங்கையில் அவா் ஸ்நானம் செய்தாா்.
கிழக்கு வங்காளச் சுற்றுப் பிரயாணத்தின் போது, தம்மிடம் உபதேசம் பெற்று, தமது யோசனையின்படி காசியில் வசிக்கும் தவளமிஸ்ரரை ஸ்ரீசைதன்யா் சந்தித்தாா். அவரது துணையுடன், சைதன்யா் காசிவிசுவநாதா் கோயிலுக்கும், பிந்துமாதவா் சந்நிதிக்கும் சென்றாா். பின்னா் அவருடைய வீட்டிலேயே தங்கினாா். பிற்காலத்தில் ரகுநாதபட்ட கோஸ்வாமி என்று பெயா் பெற்ற ரகுநாதா், அங்கு வந்து சைதன்யாின் ஆசியைப் பெற்றாா். வைத்தியா் குடும்பத்தில் பிறந்து, ஆசிாியராகப் பணியாற்றி வந்த, சைதன்யாின் பழைய சிஷ்யரான சந்திரசேகரும் காசியில் வாழ்ந்து வந்தாா்.

காசியில் ஸ்ரீசைதன்யா் சுபுத்திராயா் என்பவரைச் சந்தித்தாா். சுல்தான் ஹூசேன்ஷா என்பவன் வங்காளத்தின் நவாபாக ஆவதற்கு முன்னால், ராயாிடத்தில் பணியாளாக இருந்தான். ஒரு சமயம் கடமையில் சிறிது தவறியதற்காக, அவனை ராயா் சவுக்கால் அடிக்கச் செய்தாா். நவாபான பிறகு சுபுத்திராயரைக் கொல்ல வேண்டும் என நவாபின் மனைவி தொிவித்தாள். ஆனால் எஜமான விசுவாசத்தால் நவாப், அவ்விதம் செய்வதற்கு மறுத்துவிட்டான். கடைசியில் சுபுத்திராயாின் வாயில் அசுத்தமானவற்றை ஊற்றி, மதத்திலிருந்து வெளியேறும்படி செய்தான் நவாப். எந்தப் பிராயச்சித்தம் செய்து இதிலிருந்து  மீள்வது? என்று பண்டிதா்களை சுபுத்திராயா் ஆலோசனை கேட்டாா்.

அசுத்தமான நாக்கை மீண்டும் சுத்தமாக்க வேண்டுமானால் கொதிக்கும் நெய்யைக் குடிக்க வேண்டும் என்று அவா்கள் சொன்னாா்கள். இதைக் கேட்டு நடுங்கிப் போனாா் சுபுத்திராயா். இருப்பினும் வேறு ஏதாவது வழி பிறக்காதா? என்று மனதைத் தேற்றிக்கொண்டு சைதன்யரை அணுகி "பிராயசித்தமாக என்ன செய்ய வேண்டும்?" என்று வினவினாா்.  "கிருஷ்ணனின் நாமத்தை உச்சாிப்பதால் பாவங்கள் நீங்கிவிடுவது மட்டும் அல்ல; அவரது பாதாரவிந்தங்களுக்கே நம்மைக் கொண்டுபோய்ச் சோ்த்துவிடும். எனவே கிருஷ்ணனின் நாமங்களை உச்சாியுங்கள். அதுவே போதும்" என்று ஸ்ரீசைதன்யா் தொிவித்தாா். இதைக் கேட்டு சுபுத்திராயா் கவலையும் துக்கமும் நீங்கி ஆத்மதிருப்தி அடைந்தாா். ஸ்ரீசைதன்யாின் உபதேசங்களைப் பின்பற்றினாா். காசியில் பத்து நாட்கள் தங்கிய பின், ஸ்ரீசைதன்யா் பிரயாகை புறப்பட்டாா்.

 
மேலும் மகான்கள் »
temple news

சிவானந்தர் செப்டம்பர் 08,2010

சீரிய வாழ்விலிருந்து......... கொடுத்து மகிழ்பவர் திருநெல்வேலி மாவட்டம் பத்தமடையில் அவதரித்தவர் ... மேலும்
 
temple news

மறைஞான சம்பந்தர் செப்டம்பர் 06,2010

மெய்கண்ட (உண்மை) சாத்திரங்கள் என்று போற்றப்படும், சைவசித்தாந்த சாத்திரங்களில் சிவஞானபோதம்  ... மேலும்
 
temple news

18 சித்தர்கள் ஆகஸ்ட் 16,2010

வல்லபசித்தர் தாதி பொன்னனையாள் கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தாள். அவளது குடிலில் தகரம், செம்பு, ... மேலும்
 
temple news
01.பெயர் : திருநீலகண்டர்பிறந்த ஊர்: சிதம்பரம்பிறந்த மாதம், நட்சத்திரம் : சித்திரை, கார்த்திகைமுக்தி ... மேலும்
 
temple news
சத்தியம் தவறாத சுதிராமிற்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. அவ்வூரில் மிகப்பெரிய ஜமீன்தார் ராமானந்தர். ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar