Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
இன்றைய சிறப்பு! திருவண்ணாமலை அண்ணாமலையாருக்கு 1,008 சங்காபிஷேகம்! திருவண்ணாமலை அண்ணாமலையாருக்கு 1,008 ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பக்தர்களுக்கு படியளக்கும் எம் பெருமான்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 நவ
2014
02:11

திருப்பூர் : திருப்பூர் வீரராகவப் பெருமாள் கோவில், கிழக்கு நோக்கிய மூன்று நிலைகள் கொண்ட ராஜகோபுரத்துடன் அமைந்துள்ளது. ராஜகோபுரத்துக்குள் நுழைந் ததும், செப்புத்தகடால் ஆன,  தங்க நிற வண்ணம் பூசப்பட்ட கொடி மரம் அமைந்துள்ளது. கொடிமரத்தை வணங்கிவிட்டு, ஆஞ்சநேயரை வணங்க  வேண்டும். அடுத்து, வெளிப்பிரகாரத்தை சுற்றிலும் அமைந்துள்ள பரிவார சுவாமிகளான,  சக்கரத்தாழ்வார், லட்சுமி நரசிம்மர், லட்சுமி ஹயக்கிரீவர்,  தன்வந்திரி பெருமாள், நரசிம்மர் துõண், துளசி மாடம் ஆகியவற்றை தரிசிக்க வேண்டும்.

Default Image

Next News

அதன்பின், தாயார்கள் சன்னதியை தரிசிக்க வேண்டும். கனகவல்லி தாயார், தாமரை பீடத்தில், இடது காலை மடித்து, வலது காலை ஊன்றியும்,  பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் கரங்களுடனும் அமர்ந்த நிலையில் உள்ளார். பூமா தேவி தாயார், நின்ற நிலையில் அருள்பாலித்து வருகிறார்.  கனகவல்லி தாயாரை வணங்கினால், அனைத்து செல்வங்களும் கிட்டும்; திருமண தடை உள்ளிட்ட அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வும், மன  அமைதியும் கிட்டும்; பூமாதேவி தாயாரை மனமுருகி வேண்டினால், இடம், வீடு, நிலம் உள்ளிட்ட பிரச்னை களில் இருந்து விடுபட முடியும்; புதிதாக  இடம் வாங்குபவர்கள் தாயாரை வழிபட்டு சென்ற பிறகே வாங்குகின்றனர். புதிய வீடு உள்ளிட்ட கட்டடங்கள் கட்டும்போது, தாயாரிடம் ஆசி  பெற்று துவக்கினால், விரைவில் பணி முடியும் என்ற ஐதீகம் இக்கோவில் தாயார்களுக்கு உள்ளது. இரண்டு தாயார்களுக்கும் தனித்தனி சன்னதியும்,  ஒரே மாதிரியாகவும் அமைந்துள்ளது சிறப்பு.

ஆழ்வார்கள் 12 பேரையும்  தரிசித்து விட்டு, கனகவல்லி தாயாரை வணங்கி, உள்பிரகாரம் வலம் வந்து பூமா தேவி தாயாரை வணங்கி, உற்சவர், ÷ சனா முதலியார், கருடாழ்வார் ஆகியோரையும் தரிசனம் செய்து, மூலவரான எம்பெருமானை தரிசிக்கும் வகையில் கோவில் அமைந்துள்ளது. கருடாழ்வாரை, வியாழன், செவ்வாய்க்கிழமைகளில் சிறப்பு திருமஞ்சனம் செய்து வணங்கினால், காணாமல் போன பொருள் கிடைக்கும்,  வாழ்க்கையில் தடைகள் நீங்கும் என்ற நம்பிக்கை பக்தர்கள் மத்தியில் உள்ளது. எம்பெருமான்,  சயன கோலத்தில், ஐந்து தலை ஆதி சேஷன் நிழலில்,  தாமரை மலரில் பாதங்களை வைத்து, அருள்பாலித்து வருகிறார். இக்கோவிலில், சயன கோலத்திலும், பக்தர்களை பார்த்து அருள்பாலிக்கும்  வகையில் மூலவர் அமைந்துள்ள சிறப்போடு,  மற்றொரு சிறப்பு தலைக்கு படியை வைத்து, அதன் மீது கை வைத்த சயன நிலையில் உள்ளார்.  எம்பெருமான் சிரசுக்கு, படி இருப்பது சிறப்பானதாகும். திருப்பூர் செல்வ செழிப்போடும், வந்தாரை வாழ வைக்கும் ஊராக இருப்பதற்கு, பெரு மாள், நேரடியாக அனைவருக்கும் படியளப்பதே காரணம் என பக்தர்கள் நம்பிக்கையோடு சொல்கின்றனர். சயன கோலத்தில் உள்ள கோவில்களில்  தலையணை போல், திண்டு இருக்கும். தானியம் அளக்கும் படி எம்பெருமாளின் சிரசை தாங்குவதுபோல் இல்லை; இங்கு எழுந்தருளியுள்ள பெரு மாளுக்கு அத்தகைய சிறப்பு உண்டு என பட்டாச்சார்யார்கள் தெரிவித்தனர். தென்கலை மரபுடைய இக்கோவிலில், பாஞ்சராத்ர ஆகம முறைப்படி  பூஜைகள் நடக்கின்றன. பிரம்மம், முக்தி, போகம், யோகம், பிரஞ்சம் என  ஐந்து  தத்துவங்களில் ராத்ரம் ( அறிவு) ஏற்பட வழிகாட்டப்படுவதால்,  இந்த பாஞ்சராத்ரம் என்ற பெயர். மனித வாழ்வியல் அறிவும், தெளிவும் பெற எம்பெருமான் வழிகாட்டுவதை குறிப்பதாக ஆகம முறை உள்ளது.   துளசி தீர்த்தம், மஞ்சள், குங்குமம் வழங்கப்படுகிறது. சடாரி சிரசில் வைத்து  எடுக்கப்படுகிறது. சடாரி என்பது, நம்மாழ்வாரின் ரூபம். அவர், எப்÷ பாதும் திருமால் திருவடிகளில் இருப்பதாக வைணவ மரபு. சடாரியை நமது சிரசில் வைத்தால், அனைத்து நன்மைகளும் கிடைக்கும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அயோத்தி: அயோத்தி ராமர் கோயிலில் இன்று ஏகாதசியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. விழாவில் ... மேலும்
 
temple news
பாலக்காடு; கேரளாவில் பிரசித்தி பெற்ற கோவில் திருச்சூர் வடக்குநாதர் கோவில். இங்கு எல்லா ஆண்டு சித்திரை ... மேலும்
 
temple news
பெரியகுளம்; பெரியகுளம் ஷீரடி சாய்பாபா கோயிலில் சாய்பாபா பிறந்தநாள் விழா மற்றும் ராம நவமி விழா நடந்தது. ... மேலும்
 
temple news
திருப்பதி; திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்கள் பணம் மற்றும் நகை என காணிக்கையை கொட்டி ... மேலும்
 
temple news
கோவை; கோவை மாவட்டம் அன்னூர் கரி வரதராஜ பெருமாள் கோவிலில் சித்திரை மாதம் ஏகாதசியை முன்னிட்டு கோவிலில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar