Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news விருச்சிகம்: (விசாகம் 4, அனுஷம், ... மகரம்: (உத்திராடம் 2,3,4, திருவோணம், அவிட்டம் 1,2) அதிகவேலை நல்ல வருமானம்! மகரம்: (உத்திராடம் 2,3,4, திருவோணம், ...
முதல் பக்கம் » சித்திரை ராசி பலன் (14.4.2024 முதல் 13.5.2024 வரை)
தனுசு: (மூலம், பூராடம், உத்திராடம் 1) சோதனைகள் வரும் சாதனையும் உண்டு!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 டிச
2014
05:12

சோதனைகளை சாதனைகளாக மாற்றத்துடிக்கும் தனுசு ராசி அன்பர்களே!

பெரும்பாலான கிரகங்கள் சாதகமாக காணப்படவில்லை. ஆனாலும் கவலை கொள்ள தேவை இல்லை. காரணம் செவ்வாய் ஜன. 2ல் இருந்து நன்மை செய்வார். சுக்கிரனும் மாதம் முழுவதும் நற்பலனை கொடுக்க தவறமாட்டார். ஆனாலும், எந்த விஷயத்திலும் முன்னெச்சரிக்கையுடன் நடந்து கொள்வது சிறப்பு. முக்கிய முடிவு எடுப்பதை தள்ளி போடுங்கள். வீண்விவாதங்களில் ஈடுபட வேண்டாம். பொருளாதார வளம் சீராக இருக்கும். சிக்கனத்தை கடைபிடிக்க வேண்டும். குரு டிச. 23ல், அதிசாரத்தில் இருந்து விடுபட்டு வக்ரம் அடைந்து கடக ராசிக்கு மாறுவதால் மன வேதனையும், நிலையற்ற தன்மையும் கொடுப்பார். பணவிஷயத்தில் சரிவை ஏற்படுத்துவார்.  குரு சாதகமற்ற இடத்தில் இருந்தாலும் அவரது 7-ம் இடத்து பார்வை சாதகமாக உள்ளது. இது எந்த இடையூறுகளையும் முறியடித்து வெற்றிக்கு வழிவகுக்கும். குடும்பத்தில் பெண்களால் பொருள் சேரும். விருந்து விழா என சென்று வருவீர்கள். உறவினர் வகையில் அனுகூலம் இருக்காது. டிசம்பர் 23 க்கு பிறகு மனைவி வகையில் சிறு சிறு பிரச்னைகள் தலை துõக்கலாம். உங்கள் செல்வாக்குக்கு பாதிப்பு ஏற்படலாம்.

பணியாளர்களுக்கு வேலைப் பளு அதிகரிக்கும். மேல் அதிகாரிகளிடம் அனுசரித்துப் போகவும். முயற்சி எடுத்தால்தான் கோரிக்கைகள் நிறைவேறும். இடமாற்ற பீதி மறையும்.

தொழிலதிபர்கள், வியாபாரிகள் அலைச்சலையும், போட்டியால் பிரச்னைகளையும் சந்திக்க வேண்டியிருக்கும். ஆனால், பணவரவுக்கு பஞ்சம் இருக்காது.

கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தங்களும், விருதும் கிடைக்கும்.

அரசியல்வாதிகள் சுமாரான பலன் காண்பர். மாணவர்கள் படிப்பில்அதிக சிரத்தை எடுத்தே முன்னேற வேண்டியிருக்கும். ஆசிரியர்கள் ஆலோசனைப்படி நடந்தால் முன்னேற்றம் கிடைக்கும்.

விவசாயிகள் கடுமையாக உழைக்க வேண்டி வரும். ஜனவரி 2க்கு பிறகு புதிய சொத்து வாங்கும் எண்ணம் கைகூடும். வழக்கு விவகாரங் களில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும்.

 பெண்கள் குடும்பத்தோடு புனித ஸ்தலங்களுக்கு சென்று வருவார்கள். உற்சாகமாகக் காணப்படுவர். சூரியனால் அலைச்சலும் சோர்வும் ஏற்படும்.

நல்ல நாள்: டிச. 16, 17, 18, 19, 22, 23, 26, 27,  ஜன.  2, 3, 4, 5, 11, 12, 13, 14.

கவன நாள்: ஜன. 6, 7, 8  சந்திராஷ்டமம்

அதிர்ஷ்ட எண்: 4, 8                      நிறம்: வெள்ளை, சிவப்பு

வழிபாடு: சனிக்கிழமை சனீஸ்வரருக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடுங்கள். சூரியனை காலையில் வணங்குங்கள்.

 
மேலும் சித்திரை ராசி பலன் (14.4.2024 முதல் 13.5.2024 வரை) »
temple news
அசுவினி: தைரிய பராக்கிரமக்காரகனான செவ்வாய், ஞான மோட்சக் காரகனான கேதுவின் அம்சத்தில் பிறந்து கடவுளின் ... மேலும்
 
temple news
கார்த்திகை 2,3,4 ம் பாதம்: அதிர்ஷ்ட காரகனான சுக்கிரன், ஆற்றல் காரகனான சூரியனின் அம்சத்தில் பிறந்த ... மேலும்
 
temple news
மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்: வீரிய காரகனான செவ்வாய், புத்தி காரகனான புதனின் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு ... மேலும்
 
temple news
புனர்பூசம் 4 ம் பாதம்: மனக்காரகனான சந்திரன், அறிவுக்காரகனான குருபகவானின் அம்சத்தில் பிறந்திருக்கும் ... மேலும்
 
temple news
மகம்: ஆற்றல் காரகன், ஆன்ம காரகனான சூரியன், ஞான மோட்சக் காரகனான கேதுவின் அம்சத்தில் பிறந்திருக்கும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar