Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சபரிமலை பெயரில் இணையதளங்களில் பண ... சபரிமலையில் மீண்டும் மழை
முதல் பக்கம் » ஐயப்பன் செய்திகள்
சபரிமலையில் டிச. 27ல் மண்டல பூஜை: 23ல் தங்க அங்கி பவனி!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

11 டிச
2014
10:12

சபரிமலை: சபரிமலையில் வரும் 27-ம் தேதி மண்டலபூஜை நடைபெறுகிறது. இதையொட்டி வரும் 23-ம் தேதி ஆரன்முளா பார்த்தசாரதி கோயிலில் இருந்து தங்க அங்கி பவனி புறப்படுகிறது. கார்த்திகை ஒன்றாம் தேதி முதல் தொடர்ச்சியாக 41 நாட்கள் நடைபெறும் பூஜைகளின் நிறைவு பூஜைதான் மண்டலபூஜை. இந்த நாளில் ஐயப்பனின் விக்ரகத்தில் அணிவிக்க திருவிதாங்கூர் மன்னர் சித்திரை திருநாள் மகாராஜா தங்க அங்கியை காணிக்கையாக வழங்கினார். இது மண்டலபூஜைக்கு முந்தைய நாளிலும், மண்டலபூஜை நாளிலும் ஐயப்பன் விக்ரகத்தில் அணிவிக்கப்பட்டிருக்கும். பத்தணந்திட்டை மாவட்டம் ஆரன்முளா பார்த்தசாரதி கோயிலில் உள்ள இந்த அங்கி ஒவ்வொரு ஆண்டும் மண்டலபூஜைக்கு நான்கு நாட்கள் முன்னதாக பவனியாக எடுத்து வரப்படுகிறது. சபரிமலை மாதிரியில் வடிவமைக்கப்பட்ட ரதத்தில் அங்கி வைக்கப்பட்டு வழிநெடுகிலும் பக்தர்களின் வரவேற்பை பெற்று வருகிறது. வரும் 23-ம் தேதி காலை ஆறு மணிக்கு ஆரன்முளா பார்த்தசாரதி கோயிலிலிருந்து இந்த பவனி பலத்த பாதுகாப்புடன் புறப்படும்.23-ம் தேதி ஓமல்லூர் பகவதி கோயிலிலும், 24-ம் தேதி கோந்நி முருங்கமங்கலம் கோயிலிலும், 25-ம் தேதி பெருநாடு சாஸ்தா கோயிலிலும் தங்கும் இந்த பவனி 26-ம் தேதி மதியம் பம்பை வந்தடையும். பம்பை கணபதி கோயில் அருகில் பக்தர்கள் தரிசனத்துக்காக வைக்கப்படும், இந்த அங்கி மாலை மூன்று மணிக்கு தலைச்சுமடாக சன்னிதானத்துக்கு கொண்டுவரப்படும். 26 மாலை 6.30 மணிக்கு தங்கஅங்கி சார்த்தி தீபாராதனை நடைபெறும். 26-ம் தேதி மண்டலபூஜை நேரத்திலும் ஐயப்பனுக்கு இந்த அங்கி அணிவிக்கப்பட்டிருக்கும். தங்கஅங்கி பவனி ஏற்பாடுகள் பற்றி பத்தணந்திட்டை கலெக்டர் தலைமையில் 17-ம் தேதி அதிகாரிகள் மற்றும் பக்தர்கள் அமைப்புகளின் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.

மண்டலபூஜையை முன்னிட்டு நேற்று சபரிமலையில் களப பூஜை நடைபெற்றது. களபம் நிரப்பப்பட்ட கலசத்தை, தந்திரி கண்டரரு ராஜீவரரு, மேல்சாந்தி கிருஷ்ணதாஸ் நம்பூதிரியிடம் கொடுத்தார். பின்னர் சிறப்பு பூஜை நடைபெற்றது.

 
மேலும் ஐயப்பன் செய்திகள் »
temple news
சபரிமலை: சபரிமலையில் நேற்று (ஜன.,15) மகரஜோதி பெருவிழா நடைபெற்றது. பொன்னம்பலமேட்டில், மாலை 6.50 மணிக்கு ... மேலும்
 
temple news
சபரிமலை; சபரிமலையில் இன்று மகரஜோதி பெருவிழா நடைபெறுகிறது. இந்த நாளில் நடைபெறும் முக்கியமான மகரசங்கரம ... மேலும்
 
temple news
மூணாறு; இடுக்கி மாவட்டம் சத்திரம் அருகே உள்ள புல்மேட்டில் இருந்து பொன்னம்பலமேட்டில் தெரிந்த ... மேலும்
 
temple news
சபரிமலை; மகரஜோதிக்கு முன்னோடியாக பிரசித்தி பெற்ற அம்பலப்புழா, ஆலங்காடு பக்தர்களின் பேட்டை துள்ளல் ... மேலும்
 
temple news
பத்தினம்திட்டா: சபரிமலை அய்யப்பன் கோவிலில், வரும் 14 மற்றும் 15ம் தேதிகளில் மகர விளக்கு பூஜையை தரிசிக்க ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   ஐயப்ப தரிசனம் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar