Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருநள்ளாறு சனி பகவானை தரிசிக்க 2 ... கங்காதீஸ்வரர் கோவிலில் பூஜை! கங்காதீஸ்வரர் கோவிலில் பூஜை!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தேவநாத சுவாமி கோவிலில் ரூ.8.38 லட்சம் செலவில் சோலார் விளக்கு!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

17 டிச
2014
11:12

கடலூர்: திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் 8 லட்சத்து 38 ஆயிரம் ரூபாய் செலவில் 10 கிலோ வாட் திறனில் சோலார் விளக்கு அமைக்கப் பட்டுள்ளது. தமிழகத்தில் அதிகரித்து வரும் மின்தேவையை சமாளித்திட அரசு  மரபு சாரா எரிசக்தியை பயன்படுத்தி மின் உற்பத்தியை அதிகரிக்க  நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக தனி நபர்கள் சூரிய சக்தியை பயன்படுத்தி மின் உற்பத்தி செய்து, அதனை மின்வாரியத்திற்கு வழங்கும்  திட்டத்தை தமிழ்நாடு எரிசக்தி வளர்ச்சி முகமை (டடா) மற்றும் தமிழ்நாடு மின்துறையும் இணைந்து செயல்படுத்தப்பட உள்ளது.

அடுத்த கட்டமாக அரசு அலுவலகங்களில் சூரிய சக்தியைக் கொண்டு மின் உற்பத்தி செய்வதற்கு பரிட்சார்த்தமாக மாநிலம் முழுவதும் 15 வகைய õன அரசு அலுவலகங்களில் தமிழ்நாடு எரிசக்தி வளர்ச்சி முகமை மூலம் சோலார் விளக்குகள் அமைத்து சோதனையோட்டம் நடத்தப்பட்டு வரு கிறது. அதன்படி கடலூரில் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் 5 கிலோ வாட்,  நகராட்சி அலுவலகத்தில் 7 கிலோ வாட், அண்ணாமலை நகர் பேரூராட்சியில்  3 கிலோ வாட், பண்ருட்டி அர” மேல்நிலைப் பள்ளியில் 2 கிலோ வாட் திறன் சோலார் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து  தற்போது, இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள, அதிக வருவாய் உள்ள கோவில்களில் பரிட்சார்த்த முறையில் மாவட்டத்திற்கு  ஒரு கோவிலில் சோலார் விளக்குகள் அமைக்க அரசு உத்தரவிட்டது. அதன்படி கடலூர், திருவந்திபுரத்தில் உள்ள பிரசித்திபெற்ற தேவநாத சுவாமி  கோவிலில், 8 லட்சத்து 38 ஆயிரம் ரூபாய் செலவில் 10 கிலோ வாட் திறன் கொண்ட சோலார் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் கிடைக்கும்  மின்சாரத்தை பகல் முழுவதும் பயன்படுத்திக் கொள்ளவும், இரவு நேரங்களில் மின்சாரத்தை பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.  சோலார் விளக்கு அமைக்கும் பணிகள் முடிந்துள்ளது.  இதனை மின் துறையினர் நெட்மீட்டர் ஆய்வு செய்த பின் செயல்பாட்டிற்கு கொண்டு வரப் படும். இந்த செலவு முழுவதும் கோவில் வருவாயில் கொண்டே செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; மதுரை சித்திரை திருவிழாவில் இன்று தேனூர் மண்டபத்தில் எழுந்தருளிய சுந்தரராஜப் பெருமாள் சுவாமி, ... மேலும்
 
temple news
புட்டபர்த்தி: சத்ய சாய் பாபாவின் நினைவு தினத்தையொட்டி, ஆராதனை மகோற்சவம் இன்று புட்டபர்த்தியில் ... மேலும்
 
temple news
கோவை; கோவையின் குலதெய்வம் என போற்றப்படும் தண்டு மாரியம்மன் கோவில்சித்திரை விழா கடந்த 15ம் முதல் நடந்து ... மேலும்
 
temple news
காரைக்கால்; காரைக்கால் அம்மையார் கோவிலில் சித்திரை சுவாதி நட்சத்திரத்தை முன்னிட்டு, அம்மையார் ... மேலும்
 
temple news
உத்தரகாண்ட்; இயற்கை எழில் கொஞ்சும் கங்கையாற்றின் கரையில் அமைந்திருக்கும் சிறப்பு மிக்க ஆன்மீக தலம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar