விழுப்புரம்: கல்பட்டு கிராமத்தில் உள்ள சனீஸ்வரன் கோவிலில் சனிப் பெயர்ச்சி சிறப்பு ஹோமம் நடந்தது. விழுப்புரம் அடுத்த கல்பட்டு கிராமத்தில் 21 அடி உயர சனீஸ்வர பகவான் சிலை உள்ளது. இந்தக் கோவிலில் நேற்று சனிப் பெயர்ச்சி சிறப்பு ஹோமம் நடந்தது. பிற்பகலில் துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு சனிபகவான் பெயர்ச்சியாவதையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தது. உலக நன்மை வேண்டி, சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. ஏற்பாடுகளை பிரமானந்த சரஸ்வதி அவதுாத ஸ்வாமிகள் மற்றும் ஓம்ஸ்ரீஸ்வயம்பிரகாஸ அவதுாத ஆஸ்ரம டிரஸ்ட் நிர்வாகித்தினர் செய்திருந்தனர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.