Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஸ்ரீரங்கம் பகல் பத்து உற்சவம் : ... ஆரியங்காவு தர்மசாஸ்தா - புஷ்கலா தேவி நிச்சயதார்த்தம்! ஆரியங்காவு தர்மசாஸ்தா - புஷ்கலா தேவி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிதம்பரத்தில் நடராஜர் புதிய தேர் வெள்ளோட்டம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 டிச
2014
11:12

சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவிலில் 1.80 கோடி ரூபாய் மதிப்பில் புதியதாக செய்யப்பட்ட நடராஜர் தேர் வெள்ளோட்டம் நேற்று நடந்தது.

Default Image

Next News

சிதம்பரம் நடராஜர் கோவில் ஆனித் திருமஞ்சனம், மார்கழி மாத ஆருத்ரா தேரோட்டத்திற்கு பயன்படுத்தப்படும் நடராஜர் சுவாமி மற்றும் சி வகாமசுந்தரி அம்மன் தேர்கள் சென்னை பச்சையப்பா அறக்கட்டளை சார்பில் கடந்த 200 ஆண்டுகளுக்கு முன் உருவாக்கப்பட்டு பராமரித்து வரு கின்றனர். இந்த தேர்கள் கடந்த சில ஆண்டுகளாக பழுதடைந்த நிலையில் இருந்ததால் இரு உற்சவத்தின் போது தேரோட்டம் நடத்துவதில் சிக்கல்  ஏற்பட்டது. அதனால் பழுதடைந்த இரண்டு தேரையும் புதுப்பிக்க வேண்டும் என கோவில் நிர்வாகம் மற்றும் பக்தர்கள் கோரிக்கை ஏற்று  அதிகாரிகளின் பரிந்துரையின் பேரில் பச்சையப்பா அறக்கட்டளை சார்பில் கடந்த ஜூன் மாதம் 50 லட்சம் ரூபாய் செலவில் சிவகாமசுந்தரி அம்மன்  தேர் புதுப்பிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து புதியதாக நடராஜர் தேர் செய்ய பச்சையப்பா அறக்கட்டளை சார்பில் 1.80 கோடி ரூபாய் நிதி  ஒதுக்கீடு செய்து புதியதாக செய்யப்பட்டது.

இந்த தேர் முழுவதும் பர்மா தேக்கு மரம் மூலம் 2,000 கன அடி மரச் சட்டங்களால் உருவாக்கப்பட்டுள்ளது. சுவாமி வைக்கப்படும் தேர் பீடம் வரை  உயரம் 21 அடி, தேர் பீடம் எட்டு பட்டைகளாக அகலம் 5 அடி விட்டம் கொண்டதாகும். நான்கு இரும்பு சக்கரங்கள் 7 அடி உயரத்திலும், நடுவில்  உள்ள இரு சக்கரம் இலுப்பை மரத்தாலும் உருவாக்கப்பட்டுள்ளது. தேர் பொம்மைகள் மட்டும் பழைய தேரில் இருந்ததை எடுத்து கெமிக்கல் மூலம்  சுத்தம் செய்து புதுப்பிக்கப்பட்டு மீண்டும் புதிய தேரில் பொருத்தப்பட்டுள்ளது. இந்த தேரை தலைமை ஸ்தபதி தஞ்சாவூர் சிவநேசன், ஸ்தபதிகள் தி ருவாரூர் ஆதித்தன், கலைமணி ஆகியோர் கொண்ட குழுவினர் கடந்த 3 மாதங்களில் செய்து முடித்துள்ளனர். புதிய நடராஜர் தேர் செய்து முடிக்கப் பட்டு நேற்று வெள்ளோட்டம் நடந்தது. இதனையொட்டி தேரடியில் பொது தீட்சிதர்கள் சங்கச் செயலர் பாஸ்கர தீட்சிதர் தலைமையில் உற்சவ  ஆச்சாரியர் நடராஜர் சுப்ரமணிய தீட்சிதர், கணபதி பூஜையுடன் துவங்கி சிறப்பு ஹோமம், பூஜை செய்யப்பட்டு காலை 8:30 மணிக்கு பச்சையப்பா  அறக்கட்டளை நிர்வாகிகள் பிரதாப்குமார், ராஜகோபால், தீட்சிதர்கள், சிதம்பரம் பக்தர்கள் சேர்ந்து வடம் பிடித்து இழுத்துச் சென்றனர்.

புதிய நடராஜர் தேர் வெள்ளோட்டம் நான்கு வீதிகளில் வந்ததைப் பார்த்து நகர மக்கள் பரவசம் அடைந்தனர். 10:30 மணிக்கு மீண்டும் நிலைக்கு  வந்து நின்றது. பல ஆண்டுகளாக சர்சையில் இருந்த நடராஜர் தேர் புதியதாக ஏற்படுத்தப்பட்டு நேற்று வெள்ளோட்டம் நடந்ததை கண்டு சிதம்பரம்  நகர மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்நிகழ்ச்சியில் நகர மன்ற துணைத் தலைவர் செந்தில்குமார், அறக்கட்டளை நிர்வாகிகள் தலைமை ஆசிரியர்  சிங்காரவேலு, சரவணன், கோவில் தீட்சிதர்கள், இந்து ஆலய பாதுகாப்புக் குழுத் தலைவர் செங்குட்டுவன், செயலர் இன்ஜினியர் சந்திரசேகரன்  உட்பட பலர் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; மதுரை சித்திரை திருவிழாவில் இன்று தேனூர் மண்டபத்தில் எழுந்தருளிய சுந்தரராஜப் பெருமாள் சுவாமி, ... மேலும்
 
temple news
புட்டபர்த்தி: சத்ய சாய் பாபாவின் நினைவு தினத்தையொட்டி, ஆராதனை மகோற்சவம் இன்று புட்டபர்த்தியில் ... மேலும்
 
temple news
கோவை; கோவையின் குலதெய்வம் என போற்றப்படும் தண்டு மாரியம்மன் கோவில்சித்திரை விழா கடந்த 15ம் முதல் நடந்து ... மேலும்
 
temple news
காரைக்கால்; காரைக்கால் அம்மையார் கோவிலில் சித்திரை சுவாதி நட்சத்திரத்தை முன்னிட்டு, அம்மையார் ... மேலும்
 
temple news
உத்தரகாண்ட்; இயற்கை எழில் கொஞ்சும் கங்கையாற்றின் கரையில் அமைந்திருக்கும் சிறப்பு மிக்க ஆன்மீக தலம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar