பதிவு செய்த நாள்
11
பிப்
2015
05:02
நல்லதையே நினைக்கும் விருச்சிக ராசி அன்பர்களே!
இந்த மாதம். குரு , ராகு ,சுக்கிரன் தொடர்ந்து சாதகமான இடத்தில் உள்ளனர். புதன் மார்ச் 3க்கு பிறகு நன்மை தருவார். இதனால் பொருள் சேரும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். குடும்பத்தில் சுக்கிரனால் மதிப்பு மரியாதை அதிகரிக்கும். உறவினர்களிடம் சுமூகநிலை ஏற்படும். புதிய உறவினர்களால் உதவி கிடைக்கும்.பிப்.17 தேதிக்கு பிறகு பெரியோர்களின் ஆதரவும், ஆலோசனையும் கிடைக்கும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பர். பிப். 13,14, மார்ச் 12,13ல் பெண்கள் மிகவும் உதவிகரமாக இருப்பர்.விருந்து விழா என சென்று வருவீர்கள்.
தொழிலதிபர்கள், வியாபாரிகளுக்கு மார்ச் 3- வரை போட்டியாளர்களால் பிரச்னை ஏற்படலாம் கவனம். அரசு வகையில் அனுகூலமான போக்கு காணப்படவில்லை. எனவே வரவு-செலவு கணக்கை சரியாக வைத்துக் கொள்ளவும். மாதக் கடைசியில் இந்த நிலைமை மாறி முன்னேற்றம் ஏற்படும். சூரியனால் பெண்கள் வகையில் பிரச்னை வரலாம். பிப். 15,16 மார்ச் 9,10,11,14ல் சந்திரனால் தடைகள் வரலாம். பணம் விரயம் ஆகலாம். பிப். 23,24ல் எதிர்பாராத வகையில் பணம் கிடைக்கும். பணியாளர்கள் மேல் அதிகாரிகளிடம் அனுசரித்து செல்வது நல்லது. மார்ச் 3க்கு பிறகு சிறப்பான பலன்களை எதிர்பார்க்கலாம். குருவால் உங்களை புரிந்து கொள்ளாமல் இருந்தவர்கள் சரணடைவர்.
கலைஞர்கள் புதிய ஒப்பந்தம் பெறுவர்.
அரசியல்வாதிகள் எதிர்பார்த்த பதவி, பொறுப்புகளை பெற தாமதமாகும்.
மாணவர்கள் அதிக சிரத்தை எடுத்து படிக்க வேண்டியிருக்கும்.
விவசாயிகள் அதிகமாக உழைக்க வேண்டி வரும். கால்நடை வகையில் சுமாரான வருமானம் வரும்
பெண்கள் முன்னேற்றம் காணலாம். பிப்ரவரி 17,18ல் புத்தாடை நகைகள் வாங்கலாம். பிள்ளைகள் நலனிலும் அக்கறை தேவை.
நல்ல நாள்: பிப்ரவரி 13, 14, 17, 18, 23, 24, 25, 26 மார்ச் 4, 5, 6, 7, 8, 12, 13
கவன நாள்: பிப். 27,28, மார்ச் 1 சந்திராஷ்டமம், கவனம்.
அதிர்ஷ்ட எண்: 3,8 நிறம்: மஞ்சள், நீலம்
வழிபாடு: விநாயகர் வழிபாடு சிறப்பு. செவ்வாய்க்கிழமை முருகன் கோவிலுக்கு சென்று வழிபடுங்கள். பார்வையற்றவர்களுக்கு உதவி செய்யுங்கள்.